மோடி அரசின் அதிரடி நடவடிக்கைக்கு சபாஷ்.. ஆச்சரியம் அளிக்கும் வகையில் குறையும் எலெக்ட்ரிக் கார் விலை

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மோடி அரசின் அதிரடி நடவடிக்கைக்கு சபாஷ்.. ஆச்சரியம் அளிக்கும் வகையில் குறையும் எலெக்ட்ரிக் கார் விலை

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களால் இந்தியா ஏராளமான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. காற்று மாசுபாடு, கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை அதிகரிப்பு என பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் இந்தியாவிற்கு உண்டாகும் பிரச்னைகளை அடுக்கி கொண்டே போகலாம்.

மோடி அரசின் அதிரடி நடவடிக்கைக்கு சபாஷ்.. ஆச்சரியம் அளிக்கும் வகையில் குறையும் எலெக்ட்ரிக் கார் விலை

எனவே இந்த தலைவலியே வேண்டாம் என பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மத்திய அரசு மிக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம். பொதுமக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் உள்ள முக்கியமான பிரச்னைகளில் இதுவும் ஒன்று.

மோடி அரசின் அதிரடி நடவடிக்கைக்கு சபாஷ்.. ஆச்சரியம் அளிக்கும் வகையில் குறையும் எலெக்ட்ரிக் கார் விலை

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அள்ளி வீசி வருகிறது. நீங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை கடனில் வாங்கினால் அதற்கான வட்டிக்கு வருமான வரியில் இருந்து சலுகை பெற முடியும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போதுதான் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மோடி அரசின் அதிரடி நடவடிக்கைக்கு சபாஷ்.. ஆச்சரியம் அளிக்கும் வகையில் குறையும் எலெக்ட்ரிக் கார் விலை

இந்த வரிசையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நேற்று மீண்டும் ஒரு சலுகை உறுதி செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று (ஜூலை 27) நடந்தது. இதில், எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி (GST) வரி 12 சதவீதத்தில் இருந்து வெறும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மோடி அரசின் அதிரடி நடவடிக்கைக்கு சபாஷ்.. ஆச்சரியம் அளிக்கும் வகையில் குறையும் எலெக்ட்ரிக் கார் விலை

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு கொடுத்த மிகப்பெரிய 'பூஸ்ட்' என இந்த நடவடிக்கை வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையவுள்ளது. அத்துடன் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள எலெக்ட்ரிக் வாகனங்களையும் நீங்கள் குறைவான விலையில் வாங்க முடியும்.

மோடி அரசின் அதிரடி நடவடிக்கைக்கு சபாஷ்.. ஆச்சரியம் அளிக்கும் வகையில் குறையும் எலெக்ட்ரிக் கார் விலை

இந்திய மார்க்கெட்டில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி குறைப்பால் இதன் விலை எவ்வளவு குறையவுள்ளது என தெரியுமா? வாருங்கள் இனி பார்க்கலாம். எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் கோனா (Hyundai Kona) கடந்த ஜூலை 9ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மோடி அரசின் அதிரடி நடவடிக்கைக்கு சபாஷ்.. ஆச்சரியம் அளிக்கும் வகையில் குறையும் எலெக்ட்ரிக் கார் விலை

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை மார்க்கெட்டில் களமிறக்கியது ஹூண்டாய். இந்தியாவில் ஹூண்டாய் களமிறக்கியுள்ள முதல் எலெக்ட்ரிக் வாகனம் கோனாதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், Permanent Magnet Synchronous Motor (PMSM) பொருத்தப்பட்டுள்ளது.

மோடி அரசின் அதிரடி நடவடிக்கைக்கு சபாஷ்.. ஆச்சரியம் அளிக்கும் வகையில் குறையும் எலெக்ட்ரிக் கார் விலை

இது அதிகபட்சமாக 136 எச்பி பவர் மற்றும் 395 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த எலெக்ட்ரிக் காரில், 39.2 kWh லித்தியம் இயான் பாலிமர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 452 கிலோ மீட்டர்கள். அதாவது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யலாம். இதனால் இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் கார் மாடலாக பார்க்கப்படுகிறது.

மோடி அரசின் அதிரடி நடவடிக்கைக்கு சபாஷ்.. ஆச்சரியம் அளிக்கும் வகையில் குறையும் எலெக்ட்ரிக் கார் விலை

நார்மல் ஏசி சாக்கெட் வழியாக சார்ஜ் செய்தால், முழுமையாக சார்ஜ் ஏற 6 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகும். ஆனால் டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், வெறும் 57 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏறி விடும். ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை 25.30 லட்ச ரூபாய். இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதன் விலை கொஞ்சம் அதிகம்தான்.

மோடி அரசின் அதிரடி நடவடிக்கைக்கு சபாஷ்.. ஆச்சரியம் அளிக்கும் வகையில் குறையும் எலெக்ட்ரிக் கார் விலை

ஆனால் அதிக விலை என்பதை தவிர ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் பெரிதாக சொல்லி கொள்ள குறைகள் எதுவும் இல்லை. இந்திய மார்க்கெட்டில் தற்போது வரை அறிமுகமாகி வந்த எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் மிகவும் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ரேஞ்ச் 452 கிலோ மீட்டர்கள் என்பது சிறப்பான ஒரு விஷயம்.

மோடி அரசின் அதிரடி நடவடிக்கைக்கு சபாஷ்.. ஆச்சரியம் அளிக்கும் வகையில் குறையும் எலெக்ட்ரிக் கார் விலை

இந்த சூழலில் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்தால், கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை சுமார் 1.50 லட்ச ரூபாய் வரை குறையும் என ஹூண்டாய் நிறுவனம் முன்பு 'ஹிண்ட்' கொடுத்திருந்தது. தற்போது வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைவது உறுதி செய்யப்பட்டு விட்டது. எனவே ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை 1.50 லட்ச ரூபாய் வரை குறையும் சூழல் உருவாகியுள்ளது.

மோடி அரசின் அதிரடி நடவடிக்கைக்கு சபாஷ்.. ஆச்சரியம் அளிக்கும் வகையில் குறையும் எலெக்ட்ரிக் கார் விலை

இதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 23.80 லட்ச ரூபாய் என்ற விலையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக விலை எனும் நிலையிலேயே கோனா எலெக்ட்ரிக் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. பலர் ஆர்வத்துடன் புக்கிங் செய்து வருகின்றனர்.

மோடி அரசின் அதிரடி நடவடிக்கைக்கு சபாஷ்.. ஆச்சரியம் அளிக்கும் வகையில் குறையும் எலெக்ட்ரிக் கார் விலை

இந்த சூழலில் விலை இன்னும் குறைந்தால், கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனையில் சாதிப்பதற்கு அது உதவியாக இருக்கும். ஆனால் ஜிஎஸ்டி அதிரடி குறைப்பால், 1.50 லட்ச ரூபாய் குறைந்தாலும் கூட, கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை இன்னமும் அதிகம்தான் என நினைக்கிறீர்களா? இது உண்மையில் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடல்தான்.

மோடி அரசின் அதிரடி நடவடிக்கைக்கு சபாஷ்.. ஆச்சரியம் அளிக்கும் வகையில் குறையும் எலெக்ட்ரிக் கார் விலை

இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். ஹூண்டாய் நிறுவனம் மிகவும் மலிவான விலையில் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி அதிரடியாக குறைப்பால், ஹூண்டாய் கோனா மட்டுமல்லாது பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் குறையவுள்ளது.

ஆனால் இந்திய மார்க்கெட்டில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் எலெக்ட்ரிக் வாகனங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனினும் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளால் வரும் காலங்களில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய மார்க்கெட்டில் களமிறங்கவுள்ளன.

{document1}

English summary
GST Reduced From 12% To 5% - Electric Vehicle Prices To Go Down. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X