ஹர்திக் பாண்டியா வாங்கிய புது காரின் விலை இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் மலைத்து போய் விடுவீர்கள்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா விலை உயர்ந்த புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியா. கபில் தேவ் உடன் ஒப்பிடப்படும் அளவிற்கு மிக குறுகிய காலத்தில் பிரபலமடைந்தவர் இவர். ஹர்திக் பாண்டியாவிற்கு என தற்போது பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. மைதானத்தில் பேட் மூலம் வாண வேடிக்கை நிகழ்ச்சி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதுடன், தனது பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலை குலையவும் வைக்கிறார் ஹர்திக் பாண்டியா.

இந்த சூழலில் புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி ரக கார் (Mercedes-AMG G63 SUV) ஒன்றை ஹர்திக் பாண்டியா சமீபத்தில் வாங்கியுள்ளார். இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையே 2.19 கோடி ரூபாய். ஆனால் தனது பளப்பளப்பான புதிய காரின் புகைப்படங்கள் எதையும் எந்தவொரு சமூக வலை தள பக்கத்திலும் ஹர்திக் பாண்டியா பகிரவில்லை. என்றாலும் ஹோட்டல் ஒன்றுக்கு வெளியே அவரது கார் நிற்பதை கண்டுகொண்ட இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்கள் சிலர், அந்த படத்தை பகிர்ந்துள்ளனர்.

என்றாலும் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்று, தனது பல்லேடியம் சில்வர் மெட்டாலிக் நிற எஸ்யூவியை ஹர்திக் பாண்டியா ஓட்டி செல்வதை நமக்கு குறுகிய நேரத்திற்கு காட்டுகிறது. இந்த வீடியோவை பங்குரி ஷர்மா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இவர் வேறு யாருமல்ல. ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் குர்ணல் பாண்டியாவின் மனைவிதான் பங்குரி ஷர்மா. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் ஹர்திக் பாண்டியா இந்த காரை வாங்கியதாக கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா காரை ஹாயாக ஓட்டிச்செல்லும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
முன்னதாக ஆடி ஏ6 35டிடிஐ செடான் (Audi A6 35TDI Sedan) ரக கார் ஒன்றை ஹர்திக் பாண்டியா கடந்த வருடம் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஏ6 செடான் ஒன்றாகும். 35டிடிஐ மிகவும் புகழ்பெற்ற வேரியண்ட் ஆகும். இதன் விலை சுமார் 65 லட்ச ரூபாய். ஆடி ஏ6 35டிடிஐ காரில், 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்கி சாலைகளில் சீறிப்பாய்ந்தும் செல்லும் வல்லமை வாய்ந்தது.

இந்த சூழலில் ஹர்திக் பாண்டியா தற்போது புதிதாக வாங்கியுள்ள மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரானது, கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், 4.0 லிட்டர், bi-turbo, வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 585 பிஎச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை வாரி வழங்க கூடியது. இந்த புதிய வெர்ஷனில், 9-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் AMG SPEEDSHIFT டிரான்ஸ்மிஷனை பெற்றுள்ளது. இது இன்ஜின் சக்தியை காரின் 4 சக்கரங்களுக்கும் கடத்துகிறது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டி விடும் வல்லமை இந்த காருக்கு உள்ளது.


Click it and Unblock the Notifications








