உலகம் முழுவதும் அக்கார்ட் காரை திரும்ப அழைக்கும் ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

உலகம் முழுவதும் கடந்த 2003 மற்றும் 2006 ஆம் ஆண்டு விற்பனையான அக்கார்டு மாடல் கார்களை ஹோண்டா நிறுவனம், திரும்ப வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் அக்கார்ட் காரை திரும்ப அழைக்கும் ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

உலகம் முழுவதும் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஹோண்டா நிறுவனம், அதன் புகழ்பெற்ற அக்கார்டு மாடல் கார்களை உலகம் முழுவதும் திரும்ப வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதேபோன்று, இந்தியாவில் உள்ள அக்கார்டு கார்களையும் ஹோண்டா நிறுவனம் அழைத்துள்ளது.

உலகம் முழுவதும் அக்கார்ட் காரை திரும்ப அழைக்கும் ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

செடான் ரக காரான அக்கார்டு மாடலில் பொருத்தப்பட்டுள்ள டகாடா ஏர் பேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த நடவடிக்கையில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு, கடந்த 2003 மற்றும் 2006ம் ஆண்டுகளில் விற்பனையான அக்கார்டு கார்கள் அனைத்தையும் திரும்ப வருமாறு அழைத்துள்ளனர்.

உலகம் முழுவதும் அக்கார்ட் காரை திரும்ப அழைக்கும் ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

ஹோண்டா நிறுவனம், கடந்த 2003 மற்றும் 2006ம் ஆண்டுகளில் விற்பனைச் செய்த அக்கார்டு கார்களில், டகாடா நிறுவனத்தின் ஏர் பேக்குகளைப் பொருத்தியுள்ளது. அவ்வாறு, பொருத்தப்பட்டுள்ள அந்த ஏர் பேக்குகளில் ஓட்டுநருக்கான காற்றுப்பை இன்ஃபிளேட்டரில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனைச் சீர் செய்யும் விதமாகவே ஹோண்டா நிறுவனம் இந்த அழைப்பை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் அக்கார்ட் காரை திரும்ப அழைக்கும் ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

அந்தவகையில், 2003-06ம் ஆண்டுகளில் விற்பனையான 3 ஆயிரத்து 699 அக்கார்டு கார்களுக்கும் முற்றிலும் இலவசமாக ஏர் பேக்குகள் மாற்றித் தரப்பட உள்ளன. இந்த திட்டத்தினை ஹோண்டா நிறுவனம் நேற்று (ஏப்ரல் 18) முதல் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் அக்கார்ட் காரை திரும்ப அழைக்கும் ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

மேலும், ஹோண்டா நிறுவனம் தனிப்பட்ட முறையில், 2003-06 ஆம் ஆண்டுகளில் விற்பனையான கார் உரிமையாளர்களைத் தொடர்புக்கொண்டு இதற்கான அழைப்பை விடுத்து வருவகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் அவர்களின் 17 இலக்க கார் குறித்த எண்ணை, ஹோண்டா இணையத்தில் பதிவிட்டும், அவர்கள் இந்த இலவச அப்கிரேஷனுக்கு தகுதியானவர்கள் தானா எனத் தெரிந்துக்கொள்ளலாம். அல்லது நேரடியாக ஹோண்டா டீலர்களைத் தொடர்பு கொண்டு அறிந்துக்கொள்ளலாம்.

உலகம் முழுவதும் அக்கார்ட் காரை திரும்ப அழைக்கும் ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

ஹோண்டா நிறுவனம் இவ்வாறு அழைப்பு விடுப்பது, இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதமும் 22 ஆயிரத்து 834 அக்கார்ட், சிட்டி மற்றும் ஜாஸ் மாடல் கார்களின் ஏர் பேக்குகளை மாற்றுவதற்கு அழைப்பு விடுத்திருந்தது.

உலகம் முழுவதும் அக்கார்ட் காரை திரும்ப அழைக்கும் ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

சந்தையில் ஓர் சில நிறுவனங்கள் அவ்வப்போது இதுபோன்று அப்கிரேஷனுக்கு அழைப்பு விடுவது வழக்கம். ஆனால், ஹோண்டா மாறுதலாக பல முறை அழைப்பு விடுத்து வருவது அதன் பெயரை சீர்குளைக்கும் விதமாக இருக்கிறது. இதேபோன்று, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், ஃபோக்ஸ்வேகன், ஃபெர்ராரி மற்றும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களும் இதுபோன்று அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் அக்கார்ட் காரை திரும்ப அழைக்கும் ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

இவ்வாறு, டகாடா நிறுவனத்தின் ஏர் பேக்குகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இதுவரை 1.7 மில்லியன் கார்கள் திரும்ப அழைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் அக்கார்ட் காரை திரும்ப அழைக்கும் ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

ஹோண்டா நிறுவனம் அண்மையில்தான் அதன் ஒன்பதாம் தலைமுறை ஹைபிரிட் அக்கார்ட் காரை சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. இந்த கார் இந்தியாவில், ரூ 43.21 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூமில் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, பத்தாம் தலைமுறை அக்கார்டு காரையும் சந்தையில் அறிமுகம் செய்யும் முயற்சியில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, April 19, 2019, 12:37 [IST]
English summary
Honda Accord Recalled In India — Part Of Global Recall To Replace Takata Driver Airbags. Read In tamil.
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+