விற்பனையில் அசத்தி வரும் புதிய ஹோண்டா அமேஸ் கார்!

புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

விற்பனையில் அசத்தி வரும் புதிய ஹோண்டா அமேஸ் கார்!

காம்பேக்ட் செடான் கார் ரகத்தில் மாருதி டிசையர் காருக்கு அடுத்து மிகச் சிறந்த தேர்வாக வாடிக்கையாளர்களால் போற்றப்படுகிறது ஹோண்டா அமேஸ் கார். கடந்த ஆண்டு ஹோண்டா அமேஸ் காரின் இரண்டாம் தலைமுறை மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

விற்பனையில் அசத்தி வரும் புதிய ஹோண்டா அமேஸ் கார்!

அட்டகாசமான டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள், சிறந்த பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளுடன் வாடிக்கையாளர்களை அசத்தி வருகிறது. மைலேஜிலும் தன்னிறைவான மாடல். இந்த நிலையில், புதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

விற்பனையில் அசத்தி வரும் புதிய ஹோண்டா அமேஸ் கார்!

கடந்த ஜனவரி மாதம் 7,981 அமேஸ் கார்களும், பிப்ரவரியில் 6,562 கார்களும், மார்ச்சில் 7,419 அமேஸ் கார்களும் விற்பனையாகி இருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை ஒப்பிடும்போது விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது ஹோண்டா நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

விற்பனையில் அசத்தி வரும் புதிய ஹோண்டா அமேஸ் கார்!

மேலும், ஹோண்டா நிறுவனத்தின் விற்பனையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி இருக்கிறது. 2017-18ம் நிதி ஆண்டில் 1,70,026 கார்களை விற்பனை செய்திருந்த ஹோண்டா நிறுவனம், கடந்த நிதி ஆண்டில் 1,83,787 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 27 சதவீத வளர்ச்சியாகும்.

விற்பனையில் அசத்தி வரும் புதிய ஹோண்டா அமேஸ் கார்!

இந்த உற்சாகமான தருணத்தில் டீலர் மற்றும் சர்வீஸ் மையங்களை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது ஹோண்டா கார் நிறுவனம். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் டீலர் மற்றும் சர்வீஸ் மையங்களை விரிவாக்கும் முயற்சியில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் 264 நகரங்களில் 381 டீலர்களை வைத்திருக்கிறது ஹோண்டா கார் நிறுவனம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 8, 2019, 17:36 [IST]
English summary
Honda Amaze Sales Up In March 2019
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+