11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...

11 மாதங்களில் 85 ஆயிரம் அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...

இரண்டாவது தலைமுறை ஹோண்டா அமேஸ் (Honda Amaze) கார், கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்திய துணை கண்டத்தில் மிகவும் பிரபலமான ஹோண்டா நிறுவனத்தின் மாடலாக அமேஸ் உருவெடுத்துள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் தற்போது வரை 11 மாதங்களில், 85 ஆயிரம் அமேஸ் கார்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் இத்தகைய விற்பனை மைல்கல்லை மிக வேகமாக எட்டிய ஹோண்டா மாடல் என்ற பெருமையையும் இரண்டாவது தலைமுறை அமேஸ் பெற்றுள்ளது.

11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...

கடந்த 2018-19ம் நிதியாண்டில், ஹோண்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில், இரண்டாவது தலைமுறை அமேஸ் காரின் பங்களிப்பு மட்டும் சுமார் 46 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இதுதவிர ஜாஸ், சிட்டி மற்றும் டபிள்யூஆர்-வி ஆகிய மாடல்களும், ஹோண்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன. கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் 3.4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...

முதல் தலைமுறை மாடலை காட்டிலும், 2018 இரண்டாவது தலைமுறை ஹோண்டா அமேஸ் காரில், பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. ஹோண்டா நிறுவனத்தின் உலகளாவிய டிசைன் மொழியை இந்த கார் பெற்றுள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா சிட்டி காரிலும், இதனை காண முடியும். 2018 ஹோண்டா அமேஸ் காரின் கேபினில் கூடுதல் இட வசதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ட்யூயல் டோன் இன்டீரியர் டிசைன், ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை சப்போர்ட் செய்யக்கூடிய டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.

11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...

இதுதவிர பேடில் ஸ்விஃப்ட்டர்ஸ் (Paddle Shifters), கீ லெஸ் எண்ட்ரி உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் டிரைவர் இருக்கையினுடைய உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இதன் பூட் ஸ்பேஸ் 420 லிட்டர்கள். ஹோண்டா அமேஸ் காரில், 1.2 லிட்டர், ஐ-விடெக் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், ஐ-டிடெக் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 89 பிஎச்பி பவரையும், 4,800 ஆர்பிஎம்மில் 110 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. அதே சமயம் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 3,600 ஆர்பிஎம்மில் 99 பிஎச்பி பவரையும், 1,750 ஆர்பிஎம்மில் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது. பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்படுவது, பல்வேறு வசதிகள் ஆகிய காரணங்களால்தான் ஹோண்டா அமேஸ் விற்பனையில் அசத்துகிறது.

11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...

ரூ.5.86 லட்சம் முதல் ரூ.9.16 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் புதிய ஹோண்டா அமேஸ் கார் கிடைக்கிறது. மாருதி சுஸுகி டிசையர், ஹூண்டாய் எக்ஸெண்ட், டாடா டிகோர், ஃபோக்ஸ்வேகன் அமியோ மற்றும் ஃபோர்டு அஸ்பயர் உள்ளிட்ட மாடல்களுடன் ஹோண்டா அமேஸ் போட்டியிடுகிறது. இந்த செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி டிசையர் பெறுகிறது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 15 ஆயிரம் டிசையர் கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்து வருகிறது. அதே சமயம் ஹோண்டா நிறுவனம் சராசரியாக ஒரு மாதத்திற்கு 6,000 அமேஸ் கார்களை விற்பனை செய்கிறது. இதன்மூலம் இந்த செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது காராக ஹோண்டா அமேஸ் திகழ்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 25, 2019, 8:30 [IST]
English summary
Honda Amaze Sells 85000 Units In 11 Months — Equals Forty Six Percent Of Honda’s Total Sales. Read in Tamil
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+