பிரியோ காருக்கு முழுக்கு போட்டது ஹோண்டா கார் நிறுவனம்!

கடந்த 2016ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட ஹோண்டா பிரியோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், டிசைனில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாததால், இந்த மாடலும் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில், ஹோண்டா பிரியோ காரி

ஹோண்டா பிரியோ காரின் உற்பத்தி இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பிரியோ காருக்கு முழுக்கு போட்டது ஹோண்டா கார் நிறுவனம்!

கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹோண்டா பிரியோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஹோண்டா நிறுவனத்தின் விலை குறைவான சிறிய கார் மாடல் என்பதால் அப்போது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

பிரியோ காருக்கு முழுக்கு போட்டது ஹோண்டா கார் நிறுவனம்!

ஆனால், ஹோண்டா பிரியோ காரின் டிசைன் இந்தியர்கள் மத்தியில் எடுபடவில்லை. குறிப்பாக, பின்புற டிசைன் வினோதமாக இருந்ததால், இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் போனது. எனினும், பெண் வாடிக்கையாளர் மத்தியில் இந்த காருக்கு ஓரளவு வரவேற்பு இருந்து வந்தது.

பிரியோ காருக்கு முழுக்கு போட்டது ஹோண்டா கார் நிறுவனம்!

கடந்த 2016ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட ஹோண்டா பிரியோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், டிசைனில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாததால், இந்த மாடலும் வரவேற்பை பெறவில்லை. கடந்த 2011ல் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை 97,000 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

பிரியோ காருக்கு முழுக்கு போட்டது ஹோண்டா கார் நிறுவனம்!

ஹோண்டா பிரியோ காரின் விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனையடுத்து, ஹோண்டா பிரியோ காரின் உற்பத்தி இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. டீலர்களில் இருப்பில் இருக்கும் கார்களை சிறப்பு சலுகைகளுடன் விற்பனை செய்து முடிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பிரியோ காருக்கு முழுக்கு போட்டது ஹோண்டா கார் நிறுவனம்!

இந்த கார் பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இந்த 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருந்து வந்தது. அதுவும் பிரயோஜனமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

பிரியோ காருக்கு முழுக்கு போட்டது ஹோண்டா கார் நிறுவனம்!

இனி ஹோண்டா நிறுவனத்தின் விலை குறைவான மாடலாக அமேஸ் கார்தான் விற்பனை செய்யப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் மொத்தம் 6 புதிய கார் மாடல்களை 2020ம் ஆண்டுக்குள் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்தது.

பிரியோ காருக்கு முழுக்கு போட்டது ஹோண்டா கார் நிறுவனம்!

புதிய தலைமுறை அமேஸ், சிஆர்வி உள்ளிட்ட மாடல்கள் விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், அடுத்து புதிய தலைமுறை சிவிக் உள்ளிட்ட கார் மாடல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், புதிய ஹோண்டா பிரியோ கார் வருவதற்கான வாய்ப்புகள் எந்தளவுக்கு உள்ளது என்பது தெரியவில்லை.

Most Read Articles
English summary
Honda has stopped production of the Brio hatchback car in India.
Story first published: Tuesday, February 12, 2019, 18:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X