மார்க்கெட்டில் அசால்ட் காட்டும் புதிய சிவிக்... ஹோண்டா நிறுவனத்தின் உற்சாகத்திற்கு காரணம் இதுதான்...

புதிய ஹோண்டா சிவிக் கார் மார்க்கெட்டில் அசால்ட் காட்டி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மார்க்கெட்டில் அசால்ட் காட்டும் புதிய சிவிக்... ஹோண்டா நிறுவனத்தின் உற்சாகத்திற்கு காரணம் இதுதான்...

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், 10வது தலைமுறை சிவிக் (Honda Civic) செடான் ரக காரை, சமீபத்தில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. டி-செக்மெண்ட் கார்கள் விற்பனை மந்தமாக இருந்து வரும் ஒரு கடினமான சூழலில், மார்க்கெட்டில் டிமாண்ட்டை உருவாக்கி அசத்தியுள்ளது புதிய 2019 ஹோண்டா சிவிக்.

மார்க்கெட்டில் அசால்ட் காட்டும் புதிய சிவிக்... ஹோண்டா நிறுவனத்தின் உற்சாகத்திற்கு காரணம் இதுதான்...

பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு வெளியிட்டுள்ள செய்தியின்படி, புதிய 2019 ஹோண்டா சிவிக் காரானது, வெறும் 45 நாட்களில், 1,600க்கும் மேற்பட்ட புக்கிங்குகளை பெற்றுள்ளது. இது ஒட்டுமொத்த செக்மெண்ட்டின் ஒரு மாத விற்பனையை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் என ஹோண்டா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்க்கெட்டில் அசால்ட் காட்டும் புதிய சிவிக்... ஹோண்டா நிறுவனத்தின் உற்சாகத்திற்கு காரணம் இதுதான்...

தற்போது பழைய சிவிக் காரை வைத்திருக்கும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள்தான், அப்கிரேடிற்காக புதிய சிவிக் காருக்கு அதிக அளவில் புக்கிங் செய்து வருவதாகவும் ஹோண்டா அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாப் எண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களுக்குதான் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக டிமாண்ட் காணப்படுகிறது. 85 சதவீத புக்கிங்குகள் பெட்ரோல் வேரியண்ட்களுக்காக வந்துள்ளன.

மார்க்கெட்டில் அசால்ட் காட்டும் புதிய சிவிக்... ஹோண்டா நிறுவனத்தின் உற்சாகத்திற்கு காரணம் இதுதான்...

ஆல் நியூ சிவிக் செடான் காரை ஹோண்டா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் கடந்த மார்ச் 7ம் தேதி அறிமுகம் செய்தது. ஆனால் அதற்கு முன்னதாக பிப்ரவரி 15ம் தேதி முதலே முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டது. புதிய பத்தாவது தலைமுறை ஹோண்டா சிவிக் காரின் ஆரம்ப விலை 17.71 லட்ச ரூபாய். அதே சமயம் டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை 22.29 லட்ச ரூபாய். இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மார்க்கெட்டில் அசால்ட் காட்டும் புதிய சிவிக்... ஹோண்டா நிறுவனத்தின் உற்சாகத்திற்கு காரணம் இதுதான்...

புதிய 2019 ஹோண்டா சிவிக் காரானது பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும் கிடைக்கிறது. இதில், 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜினானது அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்தது. அதே சமயம் 1.6 லிட்டர் டீசல் இன்ஜினானது அதிகபட்சமாக 120 பிஎச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை வழங்க கூடியது.

மார்க்கெட்டில் அசால்ட் காட்டும் புதிய சிவிக்... ஹோண்டா நிறுவனத்தின் உற்சாகத்திற்கு காரணம் இதுதான்...

டீசல் இன்ஜினில் ஸ்டாண்டர்டு 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெட்ரோல் இன்ஜினில் சிவிடி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய 2019 ஹோண்டா சிவிக் காரில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மார்க்கெட்டில் அசால்ட் காட்டும் புதிய சிவிக்... ஹோண்டா நிறுவனத்தின் உற்சாகத்திற்கு காரணம் இதுதான்...

இதில், எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி பனி விளக்குகள், 17 இன்ச் அலாய் சக்கரங்கள், சி-வடிவ எல்இடி டெய்ல்லைட்ஸ், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 7 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

மார்க்கெட்டில் அசால்ட் காட்டும் புதிய சிவிக்... ஹோண்டா நிறுவனத்தின் உற்சாகத்திற்கு காரணம் இதுதான்...

More from DriveSpark

Article Published On: Friday, March 29, 2019, 9:30 [IST]
English summary
2019 Honda Civic Bookings Crosses 1,600 Units In 45 Days — Beats Competition From Skoda Octavia. Read in Tamil
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+