தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்!
ஹோண்டா நிறுவனம், அதன் முதல் எலக்ட்ரிக் காரான ஹோண்டா இ மாடலின் எஞ்ஜின் திறன் குறித்த சிறப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்.

எதிர்காலத்தில் உலகில் உள்ள அனைத்து சாலைகளையும், எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே ஆளவிருப்பது தற்போதே உறுதியாகிவிட்டது. அதனை, ஊர்ஜிதப்படுத்தும் வகையில், வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அனைத்து நிறுவனங்களும், மின் வாகன உற்பத்தியில் முனைப்பைக் காட்டி வருகின்றன.

அதேசமயம், எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகளைத் தவிர்க்க இந்தியா போன்ற சில நாடுகள், மின் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதன் காரணமாக, அண்மைக் காலங்களாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள், தங்களின் எலக்ட்ரிக் வாகனங்களை உலகளவில் அறிமுகம் செய்து வருகின்றன.

அந்தவகையில், மோட்டார் உலகின் ஜாம்பவான்களில் ஒன்றான ஹோண்டா நிறுவனமும், அதன் முதல் எலக்ட்ரிக் காரை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்திருந்தது. ரெட்ரோ டிசைனில் தயார் செய்யப்பட்டிருந்த அந்த காருக்கு 'ஹோண்டா இ' என அண்மையில் பெயர் சூட்டப்பட்டது.

ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இந்த எலக்ட்ரிக் கார், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஃப்ராங்க்போர்ட் வாகன கண்காட்சியில்தான் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நடப்பாண்டின் ஜெனிவா வாகன கண்காட்சியிலும் இடம்பெற உள்ளது.

அவ்வாறு, அறிமுகம் செய்யப்பட்டபோது பல்வேறு தகவல்களை அந்த நிறுவனம் அதிகாரப் பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால், எஞ்ஜின் உள்ளிட்ட சில முக்கியமான தகவலை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

இந்நிலையில், ஹோண்டா இ காரின் பவர்ட்ரெயின் எனப்படும் எஞ்ஜின் திறன் உள்ளிட்ட சில முக்கிய தகவல்களை, அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை டீம் பிஎச்பி இணையதளம் வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்மூலம், ஹோண்டா இ கார் குறித்த பல்வேறு சிறப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், இந்த புதிய எலக்ட்ரிக் கார், 50:50 என்ற முறையில் எடையை பகிர்ந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனை தெளிவாக விளக்கும் வகையில் புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

50:50 என்ற அளவீட்டிற்கேற்ப வகையில், காருக்கு சக்தியை வழங்கும் பேட்டரிகள் காரின் அடித்தளத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இவை, காருக்கு சீரான கிராவிட்டியை வழங்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன.

அதேபோன்று, காருக்கான மின் மோட்டார் அதன் பின் பக்கத்தின் முனைப் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இது காரின் பின் பக்க வீலுக்கு நேரடியாக உந்துதல் சக்தியை வழங்கும். இதுபோன்ற, சிறப்பு நடவடிக்கையால், காரின் ஒட்டுமொத்த எடையும் இரு முனைகளைக்கும் சீராக கடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இத்துடன், ஹோண்டா நிறுவனம் இந்த இ காரில் எடை குறைவான சுதந்திர தன்மைக் கொண்ட சஸ்பென்ஷன்களை பொருத்தியுள்ளது. இது, பயணிகளுக்கு சொகுசான பயண அனுபவத்தை வழங்கும். அதேபோன்று, காரை எளிதாக சார்ஜ் செய்துகொள்ளும் வகையில், இதன் சார்ஜிங் போர்ட்கள், முன் பக்க பேனட்டில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அதே பகுதியில் சிறிய அளவிலான ஒளிரும் கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. இது, சார்ஜ் அளவு உள்ளிட்ட தகவலை வழங்கும். இதைத்தொடர்ந்து, வாட்டர் கூல்ட் 35.5 kWh லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இது, ஒரு முழுமையான சார்ஜில் 200 கிமீ தூரம் வரை செல்லும் சக்தியை வழங்கக்கூடியது.

இதன் பேட்டரியை இரு வழிகளில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். அவ்வாறு, டைப் 2 ஏசி கனெக்சன் அல்லது சிசிஎஸ்2 டிசி ரேபிட் சார்ஜிங் ஆகிய முறைகளில், எளிதாக இந்த பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளலாம். இதில், ரேபிட் சார்ஜிங் முறையைப் பயன்படுத்தும்போது 80 சதவீதம் சார்ஜை வெறும் 30 நிமிடங்களிலேயே பெற்றுவிடும்.

இத்தகைய சிறப்பு வசதிகளைப் பெற்ற ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் காரான, ஹோண்ட இ மாடலுக்கு இதுவரை 31 ஆயிரம் விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்த எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவை ஜெர்மனி, ப்ரான்ஸ் மற்றும் நார்வே உள்ளிட்ட பல்வேறு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த எலக்ட்ரிக் காரை ஹோண்டா நிறுவனம் உலகளாவிய வெளியீட்டை, நடப்பாண்டிற்கு பின்னரே அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஹோண்டா இ காரின் இந்திய வருகை குறித்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications








