இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க போட்டி போடும் மக்கள்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்க மக்கள் போட்டி போட்டு வருகின்றனர். இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க போட்டி போடும் மக்கள்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார்களுக்கு ஈடு இணையே கிடையாது. ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்தால், கௌரவம் என்பதையும் கடந்து, பல்வேறு காரணங்களால் அவை அனைவராலும் விரும்பப்படுகின்றன. சொகுசான வசதிகள், சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க போட்டி போடும் மக்கள்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வெளியிடும் அனைத்து கார்களுமே மிகவும் விலை உயர்ந்தவை. ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் விலை கோடிகளில்தான் இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க போட்டி போடும் மக்கள்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

எனவே ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க யாரும் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார்கள். இதனால் ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு பெரிய அளவில் எல்லாம் போட்டி இருக்காது என நினைத்து கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் எண்ணத்தை உடனே மாற்றி கொள்ளுங்கள்.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க போட்டி போடும் மக்கள்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கவும் பலர் போட்டி போட்டு கொண்டுள்ளனர் என்பதே உண்மை. கல்லினன் (Rolls Royce Cullinan) காரை இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கூறலாம்.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க போட்டி போடும் மக்கள்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன், எஸ்யூவி (SUV) வகையை சேர்ந்த கார் ஆகும். மிகவும் பழமை வாய்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் முதல் எஸ்யூவி ரக கார், கல்லினன்தான் என்பது இதன் முக்கியமான சிறப்புகளில் ஒன்று.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க போட்டி போடும் மக்கள்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை சொந்தமாக்க பலர் போட்டி போட்டு கொண்டிருப்பதால், அதற்கான காத்திருப்பு காலம் (Waiting Period) அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போதைய நிலையில் கல்லினன் காருக்கான வெயிட்டிங் பீரியட் 6 மாதங்களுக்கும் மேலாக உள்ளது.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க போட்டி போடும் மக்கள்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி கார் தற்போது இந்திய மார்க்கெட்டில் 6.95 கோடி ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்தனைக்கும் இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு வருகையில் இதன் விலை இன்னும் அதிகரிக்கும்.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க போட்டி போடும் மக்கள்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருக்கு தொடர்ந்து ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. இதன் காரணமாகதான் காத்திருப்பு காலம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இவ்வளவு விலை உயர்ந்த ஒரு காருக்கு ஏராளமானோர் வரிசை கட்டி நிற்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க போட்டி போடும் மக்கள்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டில் மொத்தம் 4,107 கார்களை விற்பனை செய்திருந்தது. இது ஒரு புதிய சாதனையாகும். 115 ஆண்டு கால ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில், ஒரே ஆண்டில் இவ்வளவு அதிகமான கார்கள் விற்பனையானது கிடையாது.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க போட்டி போடும் மக்கள்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ஆனால் இதில் கல்லினன் காரின் தாக்கம் அவ்வளவாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கல்லினன் காரின் டெலிவரி, கடந்த ஆண்டு இறுதியில்தான் தொடங்கியது. ஆனால் கல்லினன் உதவியுடன், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க போட்டி போடும் மக்கள்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி காரில், 6.75 லிட்டர், வி12 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 563 பிஎஸ் பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி, சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய வல்லமை வாய்ந்தது.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க போட்டி போடும் மக்கள்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ரோல்ஸ் கல்லினன் காரின் விலை அதிகம்தான் என்றாலும், இந்த அல்ட்ரா-லக்ஸரி எஸ்யூவி காரில் அதற்கு ஏற்ப ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. இதன் காரணமாகதான் விலையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான வாடிக்கையாளர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 21, 2019, 10:02 [IST]
English summary
Huge Demand For Rolls Royce Cullinan SUV: Waiting Period Touches 6 Months. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+