ஹெக்டர் எஃபெக்ட்... ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.2 லட்சம் தள்ளுபடி!

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.2 லட்சம் வரை தள்ளுபடி மற்றும் சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹெக்டர் எஃபெக்ட்... ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.2 லட்சம் தள்ளுபடி!

டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மாடல்களின் வருகையால், ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் விற்பனை கடுமையாக சரிந்துவிட்டது. இதனால், டீலர்களில் இருப்பு தேங்கி வருகிறது. இதையடுத்து, காம்பஸ் எஸ்யூவியின் விற்பனையை தூக்கி நிறுத்துவதற்கான முயற்சிகளில் ஜீப் டீலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஹெக்டர் எஃபெக்ட்... ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.2 லட்சம் தள்ளுபடி!

இதற்காக பல்வேறு சிறப்பு சேமிப்புச் சலுகைகளை ஜீப் டீலர்கள் வழங்குவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஸ்போர்ட் டீசல் வேரியண்ட்டிற்கு ரூ.1 லட்சம் வரையில் நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹெக்டர் எஃபெக்ட்... ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.2 லட்சம் தள்ளுபடி!

அதேபோன்று, பெட்ரோல் வேரியண்ட்டிற்கு ரூ.50,000 வரை தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. டீசல் மாடலின் லான்ஜிடியூட், லான்ஜிடியூட் ஆப்ஷனல், லிமிடேட் மற்றும் லிமிடேட் ஆப்ஷனல் வேரியண்ட்டுகளுக்கு ரூ.1.2 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஹெக்டர் எஃபெக்ட்... ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.2 லட்சம் தள்ளுபடி!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலுக்கு ரூ.65,000 வரை தள்ளுபடி மற்றும் சிறப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. விலை உயர்ந்த வேரியண்ட்டுகளுக்கு ரூ.80,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹெக்டர் எஃபெக்ட்... ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.2 லட்சம் தள்ளுபடி!

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ட்ரெயில்ஹாக் வேரியண்ட்டிற்கு ரூ.30,000 சிறப்புச் சலுகைகள் சில டீலர்களில் வழங்கப்படுகிறது. ஜீப் ஸ்போர்ட் ப்ளஸ் வேரியண்ட்டிற்கு மட்டும் எந்த சிறப்புச் சலுகைகளும் இல்லை.

ஹெக்டர் எஃபெக்ட்... ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.2 லட்சம் தள்ளுபடி!

மிட்சைஸ் எஸ்யூவி ரகத்தில் மிக ஆளுமையான டிசைன் அம்சங்களை பெற்ற எஸ்யூவி மாடலாக ஜீப் காம்பஸ் விளங்குகிறது. ஜீப் நிறுவனத்தின் பாரம்பரிய முக அமைப்பு இந்த காருக்கு அதிக வசீகரத்தை தருகிறது.

ஹெக்டர் எஃபெக்ட்... ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.2 லட்சம் தள்ளுபடி!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியானது மூன்றுவிதமான எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. 158 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழஹ்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஹெக்டர் எஃபெக்ட்... ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.2 லட்சம் தள்ளுபடி!

இதுதவிர்த்து, ட்ரெயில்ஹாக் மாடலில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வானது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வந்துள்ளது. இந்த எஞ்சினுடன் 9 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனில் கிடைக்கிறது.

ஹெக்டர் எஃபெக்ட்... ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.2 லட்சம் தள்ளுபடி!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி ரூ.15.60 லட்சம் முதல் ரூ.23.11 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் என்ற ஆஃப்ரோடு மாடலானது ரூ.26.8 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Via: Autocarindia

More from DriveSpark

Article Published On: Saturday, August 3, 2019, 16:23 [IST]
English summary
According to media report, Jeep India dealers are offering multiple discounts and benefits on Compass SUV.
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+