ஹூண்டாய் கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

ஹூண்டாய் கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

ஆண்டு இறுதியில் கார் விற்பனையில் மந்தம் ஏற்படும். வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் புத்தாண்டில் கார் வாங்க திட்டமிடுவதால், கார் விற்பனையில் மந்த நிலை ஏற்படுவது வாடிக்கை. எனவே, வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விதத்தில், கார் நிறுவனங்கள் சிறப்பு சேமிப்புச் சலுகை திட்டங்களை வழங்குகின்றன.

ஹூண்டாய் கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

அந்த வகையில், ஹூண்டாய் மோட்டார்ஸ் ரூ.2 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. டிசம்பர் டிலைட் என்ற பெயரில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அனைத்து ஹூண்டாய் கார்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

ஹூண்டாய் சான்ட்ரோ

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் சான்ட்ரோ சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான தேர்வாக இருக்கும் இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ.55,000 வரை சேமிப்பை பெற முடியும். இதில், தள்ளுபடி மற்றும் சேமிப்புச் சலுகைகள் அடங்கும். ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பெரும்பாலான வேரியண்ட்டுகளுக்கு சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது.

ஹூண்டாய் கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காருக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரையில் சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. தள்ளுபடி மற்றும் இதர சலுகைகளை சேர்த்து இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கார் மார்க்கெட்டில் பிரிமீயம் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

ஹூண்டாய் கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

ஹூண்டாய் க்ராணட் ஐ10 நியோஸ்

சில மாதங்களுக்கு முன்பு வந்த இந்த காருக்கும் சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், ரூ.20,000 வரையில் மட்டுமே சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது. டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் மதிப்பு மிக்க தேர்வாக இருக்கிறது.

ஹூண்டாய் கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

ஹூண்டாய் எலைட் ஐ20

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த காருக்கு ரூ.65,000 வரையில் சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. டிசைனில் மிக அசத்தலாக இருக்கும் இந்த கார் பல இளைய வயதுடைய வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது.

ஹூண்டாய் கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காருக்கு ரூ.95,000 வரையில் தள்ளுபடி மற்றும் சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. விரைவில் அவ்ரா செடான் மாடலும் வர இருக்கும் நிலையில், இந்த காருக்கு அதிகபட்சமான சேமிப்பை பெறும் வாய்ப்பை ஹூண்டாய் வழங்குகிறது.

ஹூண்டாய் கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

ஹூண்டாய் வெர்னா

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் டாப்-3 மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் வெர்னா இருந்து வருகிறது. டிசைன், வசதிகள், எஞ்சின் தேர்வுகளில் மதிப்புமிக்கதாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காருக்கு ரூ.60,000 வரையிலான சேமிப்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஹூண்டாய் கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

ஹூண்டாய் க்ரெட்டா

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டின் தன்னிகரில்லா மாடலாக வலம் வருகிறது ஹூண்டாய் க்ரெட்டா. இந்த காருக்கு ரூ.95,000 வரையிலான சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர் பெறும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் புதிய தலைமுறை க்ரெட்டா கார் வர இருக்கும் நிலையில், தற்போது அதிகபட்ச சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

ஹூண்டாய் டூஸான்

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவிக்கு ரூ.2 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், அதிகபட்சமான சலுகைகளை இந்த கார் பெற்றிருக்கிறது. இதன் ரகத்தில் சிறந்த தேர்வாக முன்னிலைப்படுத்தி வரும் இவ்வேளையில், இந்த சேமிப்புச் சலுகைகளும் இதன் விற்பனையை உயர்த்துவதற்கு கைகொடுக்கும்.

ஹூண்டாய் கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

மேலும் விபரங்களுக்கு...

இந்த சேமிப்புச் சலுகையில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்ட திட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், சேமிப்புச் சலுகைகள் டீலருக்கு டீலர் மாறுபடும் வாய்ப்புள்ளது. முழுமையான விபரங்களை தெரிந்து கொள்வதற்கு அருகிலுள்ள ஹூண்டாய் டீலரை அணுகி விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

Article Published On: Thursday, December 12, 2019, 14:25 [IST]
English summary
Hyundai Motors has announced December Delight discount offers upto Rs.2 lakhs on its popular car models in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+