ஹூண்டாய் கோனா காருக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான புதிய வசதிகள் அறிமுகம்!

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான வாய்ப்புகளை எளிதாக்கும் புதிய முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் கோனா காருக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான புதிய வசதிகள் அறிமுகம்!

கடந்த ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அதிக தொழில்நுட்ப வசதிகள், அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் திறன் வாய்ந்த பேட்டரி ஆகியவை இந்த காருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்துளளது.

ஹூண்டாய் கோனா காருக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான புதிய வசதிகள் அறிமுகம்!

இந்த நிலையில், எம்ஜி மோட்டார் நிறுவனம் நாளை இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் இருக்கிறது.

ஹூண்டாய் கோனா காருக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான புதிய வசதிகள் அறிமுகம்!

இந்த நெருக்கடியை போக்கிக் கொள்ளும் விதமாக, கோனா எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்கள் எளிதாக சார்ஜ் செய்வதற்கான கூடுதல் திட்டங்களை ஹூண்டாய் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 11 நகரங்களில் உள்ள 15 எலெக்ட்ரிக் கார் விற்பனை நிலையங்களில் 7.2kW சார்ஜர்களை நிறுவப்படுவதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் கோனா காருக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான புதிய வசதிகள் அறிமுகம்!

இதே சார்ஜர் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் காருடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இந்த சார்ஜரை வீடுகளில் பொருத்தி, காரின் பேட்டரியை சார்ஜ் செய்யலாம். இந்த சார்ஜர் மூலமாக பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 முதல் 8 மணிநேரம் பிடிக்கும்.

ஹூண்டாய் கோனா காருக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான புதிய வசதிகள் அறிமுகம்!

டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள வாடிக்கையாளர்கள் வெஹிக்கிள் டு வெஹிக்கிள் என்ற முறையில் ஒரு வாகனத்திலிருந்து ஹூண்டாய் கோனா காருக்கு சார்ஜ் ஏற்றும் புதிய தொழில்நுட்பமும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அலையன்ஸ் வேர்ல்டுவைட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை 24 மணிநேரமும், எந்த இடத்திலும் வழங்குகிறது ஹூண்டாய்.

ஹூண்டாய் கோனா காருக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான புதிய வசதிகள் அறிமுகம்!

டெல்லி, பெங்களூர் நகரங்களில் அலையன்ஸ் நிறுவனத்தின் மூலமாக போர்ட்டபிள் சார்ஜர்களை அவசரத்திற்கு பெறும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த திட்டமும் வாடிக்கையாளர்களுக்கு எந்த நேரத்திலும் கிடைக்கும் என்பதால், சார்ஜ் பற்றிய அச்சம் இனி மெல்ல நீங்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே இந்த சேவையை பெறும் வாய்ப்பு இப்போதைக்கு உள்ளது.

ஹூண்டாய் கோனா காருக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான புதிய வசதிகள் அறிமுகம்!

புதிய ஹூண்டாய் கோனா காரில் இருக்கும் திறன் வாய்ந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ தூரம் பயணிக்க முடியும். இந்த காரின் மின்மோட்டார்கள் 136 பிஎஸ் பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ரூ.23.71 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்தியாவின் அதிக பயண தூரத்தை வழங்கும் எலெக்ட்ரிக் கார் மாடல் என்பது இதன் முக்கிய சிறப்பம்சமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 4, 2019, 12:51 [IST]
English summary
Hyundai has introduces new charging solutions for Kona electric car customers in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+