ஓட்டு போட்டிங்களா..? அப்போ உங்க காரை பாதி விலையில சர்வீஸ் செய்யுங்க - பிரபல நிறுவனம் அறிவிப்பு...!

வாகன தயாரிப்பில் இரண்டாம் இடத்தில் இருந்து வரும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக பல்வேறு சலுகைகளை வழங்க இருக்கிறது இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஓட்டு போட்டிங்களா..? அப்போ உங்க காரை பாதி விலையில சர்வீஸ் செய்யுங்க - பிரபல நிறுவனம் அறிவிப்பு...!

தென்கொரியாவின் சியோல் நகரத்தை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம், நாட்டின் மிக முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனங்களில் இரண்டாம் இடித்தில் இருந்து வருகிறது. இந்த நிறுவனம், இந்தியா முழுவதும் உள்ள முழுவதும் அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச கார் கேர் கிளினிக் என்ற திட்டத்தின்கீழ் சர்வீஸ் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஓட்டு போட்டிங்களா..? அப்போ உங்க காரை பாதி விலையில சர்வீஸ் செய்யுங்க - பிரபல நிறுவனம் அறிவிப்பு...!

இந்த திட்டத்தின்மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளது. மேலும், இத்திட்டத்திற்காக நாடு முழுவதும் 1,300 சேவை மையங்கள் தயார்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்தை ஹூண்டாய் நிறுவனம் ஒவ்வொரு கோடை காலங்களில் செய்து வரும், அந்த வகையிலேயே தற்போது இந்த நிறுவனம் இதனைத் தொடங்கியுள்ளது.

ஓட்டு போட்டிங்களா..? அப்போ உங்க காரை பாதி விலையில சர்வீஸ் செய்யுங்க - பிரபல நிறுவனம் அறிவிப்பு...!

அவ்வாறு கடந்த வருடம் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமின்மூலம் கிட்டதட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் வாடிக்கையாளர்கள் பயனடைந்திருப்பதாக ஹூண்டாய் தெரிவிக்கிறது. தற்போது, நடப்பாண்டிற்காக தொடங்கியிருக்கும் இந்த சேவையானது 12ம் தேதி முதல் 21 ஏப்ரல் வரை நடைபெற இருக்கிறது.

ஓட்டு போட்டிங்களா..? அப்போ உங்க காரை பாதி விலையில சர்வீஸ் செய்யுங்க - பிரபல நிறுவனம் அறிவிப்பு...!

இந்த நாடுதழுவிய இலவச கார் கேர் கிளினிக் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில், உபரி பாகங்கள் மற்றும் லேபர் சார்ஜ் ஆகியவற்றில் சலுகை விலையில் சர்வீஸ் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, ரோட் சைட் அசிஸ்டண்ட் ரீடெயில் புரோக்ராம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான சேவைகள் செய்யப்பட உள்ளன.

ஓட்டு போட்டிங்களா..? அப்போ உங்க காரை பாதி விலையில சர்வீஸ் செய்யுங்க - பிரபல நிறுவனம் அறிவிப்பு...!

இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ஹூண்டாய் மேலும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஃபேமிலி சன்டே என அழைக்கப்படும் எந்த சலுகையில், இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில், ஹூண்டாய் காரை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் யாரேனும் ஒருவருக்கு, அதாவது, அம்மா, அப்பா, மனைவி, மகன், மகள் அவ்வாறு யாருக்காவது பிறந்தநாளாக இருந்தால், கார் சர்வீஸின்போது பில் தொகையில் இருந்து மேலும் 10 சதவீதம் சலுகை வழங்கப்பட உள்ளது.

ஓட்டு போட்டிங்களா..? அப்போ உங்க காரை பாதி விலையில சர்வீஸ் செய்யுங்க - பிரபல நிறுவனம் அறிவிப்பு...!

இதற்கு குடும்பத்தினரின் பிறந்தநாளுக்கான சான்றினைச் சமர்பித்தால் போதுமானது. இதேபோன்று, வாக்களிக்கும்போது விரலில் வைக்கப்படும் 'மை' -னை காட்டினாலும் அதற்கு ஒரு 10 சதவீதம் சலுகை வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த இலவச கார் கேர் கிளினிக் சர்வீஸின்போது, வாடிக்கையாளர்களுக்கு 50 சிறப்பு பாயிண்டுகள் வழங்கப்பட உள்ளன.

ஓட்டு போட்டிங்களா..? அப்போ உங்க காரை பாதி விலையில சர்வீஸ் செய்யுங்க - பிரபல நிறுவனம் அறிவிப்பு...!

இந்த பாயிண்டின்மூலம், கார் இலவச பரிசோதனை உட்பட பல்வேறு சேவை வழங்கப்படும். இத்துடன், மெகானிக்கல் பாகங்களில் 10 சதவீத டிஸ்கவுண்டும், 30 சதவீதம் லேபர் சார்ஜில் டிஸ்கவுண்டும், 40 சதவீதம் மதிப்புக்கூட்ட சில சேவைகளிலும் வழங்கப்பட உள்ளது. இந்த சலுகைகளுடன் ரோட்-சைட் அசிஸ்டண்ட் சர்வீஸில் 20 சதவீதம் டிஸ்கவுண்ட் வழங்கப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, April 15, 2019, 15:19 [IST]
English summary
Hyundai Announces Free Car Care Clinic In All Over India. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+