ஹூண்டாய் அவ்ரா செடானின் அறிமுக தேதி உறுதியானது... இதுதான் விலை...

புதிய அவ்ரா மாடலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி அறிமுகப்படுத்த ஹூண்டாய் நிறுவனம் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. ஹூண்டாயின் எக்ஸ்செண்ட் மாடலுக்கு மாற்றாக வெளியாகவுள்ள இந்த செடான் காரின் டெலிவரியும் அடுத்த மாதத்தில் இருந்து ஆரம்பமாகிவிடும் என்றே தெரிகிறது.

ஹூண்டாய் அவ்ரா செடானின் அறிமுக தேதி உறுதியானது... இதுதான் விலை...

அவ்ரா மாடல் ஹூண்டாயின் க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் இருந்து பல பாகங்களை பெற்றுள்ளது. கருமையான நிறத்தில் தேன்க்கூடு வடிவிலான க்ரில், ட்வின் பூமராங் வடிவிலான ஃபாக் விளக்குகள் மற்றும் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் செட் உள்ளிட்டவை இந்த காரின் முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

ஹூண்டாய் அவ்ரா செடானின் அறிமுக தேதி உறுதியானது... இதுதான் விலை...

அவ்ரா காரில் இரு கேரக்டர் லைன்கள், ஆர்15 டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள், ஸ்போர்ட்டியான பின்புற பம்பர், 3டி லென்ஸுடன் உள்ள கூர்மையான எல்இடி டெயில்லைட்ஸ் உள்ளடவையும் வழங்கப்பட்டுள்ளது. காம்பெக்ட் செடானிற்கு ஏற்ற சுறாவின் துடுப்பு வடிவிலான ஆன்டெனாவையும் இந்த கார் பெற்றுள்ளது.

ஹூண்டாய் அவ்ரா செடானின் அறிமுக தேதி உறுதியானது... இதுதான் விலை...

மற்றப்படி காரின் உட்புற பாகங்களை பற்றிய எந்தவொரு தகவலையும் ஹூண்டாய் நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும் பல லேட்டஸ்ட் அப்டேட்களையும் தொழிற்நுட்பங்களையும் இந்த கார் உட்பகுதியில் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் அவ்ரா செடானின் அறிமுக தேதி உறுதியானது... இதுதான் விலை...

அதாவது, எட்டு இன்ச்சில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், அரக்மிஸ் சவுண்ட் சிஸ்டம், எக்கோ கோட்டிங் தொழிற்நுட்பம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஸ்டேரிங்-ல் ஆடியோ கண்ட்ரோல்கள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பின்புற இருக்கையில் அமருபவர்களுக்கு அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்ஸ் போன்றவை இந்த காரின் உட்புறத்தில் கொடுக்கப்படலாம்.

ஹூண்டாய் அவ்ரா செடானின் அறிமுக தேதி உறுதியானது... இதுதான் விலை...

அவ்ரா செடான் அடுத்த மாதம் இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனையாகவுள்ளது. பெட்ரோல் வேரியண்ட்டில் பொருத்தப்படவுள்ள 1.2 லிட்டர் கப்பா என்ஜின் 83 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனையும், மற்றொரு தேர்வான 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 120 பிஎச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்.

ஹூண்டாய் அவ்ரா செடானின் அறிமுக தேதி உறுதியானது... இதுதான் விலை...

டீசல் வேரியண்ட்டில் கொடுக்கப்படவுள்ள 1.2 லிட்டர் என்ஜின் 75 பிஎச்பி பவரையும் 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அவ்ரா மாடலில் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் வழங்கப்படவுள்ளன. இதன் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.6.90 லட்சத்தில் இருந்து ரூ.9.0 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் அவ்ரா செடானின் அறிமுக தேதி உறுதியானது... இதுதான் விலை...

அவ்ரா மாடலின் அறிமுகத்திற்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்க ஹூண்டாய் வென்யூ கார் இந்தியன் கார் ஆப் தி இயர் 2020 விருதை பெற்றுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

ஹூண்டாய் அவ்ரா செடானின் அறிமுக தேதி உறுதியானது... இதுதான் விலை...

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மாடலுக்கு மாற்றாகவும் அதன் அடுத்த தலைமுறை காராகவும் அவ்ரா காம்பெக்ட் செடான் அறிமுகமாகவுள்ளது. வென்யூ மாடலின் அறிமுகத்தின்போது வாடிக்கையாளர்களின் மத்தியில் எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவில் தான் அவ்ரா அறிமுகத்தின் மீதும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, December 20, 2019, 15:29 [IST]
English summary
Hyundai Aura India Launch Confirmed For 21 January 2020: Details And Expected Price
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+