ஹூண்டாய் அவ்ரா செடான் கார் அறிமுக தேதி விபரம் வெளியானது!

ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் அறிமுக தேதி விபரம் குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரின் புதிய தலைமுறை மாடலாக நியோஸ் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் வழக்கம்போல் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் அடிப்படையில் புதிய காம்பேக்ட் செடான் காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் உருவாக்கி இருக்கிறது.

ஹூண்டாய் அவ்ரா செடான் கார் அறிமுக தேதி!

4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் காம்பேக்ட் செடான் கார் ரகத்தில் இந்த புதிய மாடல் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இந்த புதிய மாடலுக்கு அவ்ரா என்ற பெயரிடப்பட்டு இருக்கிறது. தற்போது இறுதிக்கட்ட சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வரும் டிசம்பர் 19ந் தேதி புதிய ஹூண்டாய் அவ்ரா செடான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது உலகளாவிய மாடலாக பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிகிறது.

எனினும், முதலாவதாக இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. இந்த கார் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காருக்கு மாற்றாக சில நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் அவ்ரா செடான் கார் அறிமுக தேதி!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரைவிட அவ்ரா கார் அதிக பிரிமீயம் அம்சங்களுடன் வர இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள், டெயில் லைட்டுகள் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சிஸ்டம் புளூலிங்க் தொடர்பு தொழில்நுட்பத்தையும் பெற்றிருக்கும்.

புதிய அவ்ரா செடான் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். அத்துடன், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் இந்த காரில் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

MOST READ: போலீஸாக மாறிய ஜவுளிக்கடை பொம்மைகள்... வாகன ஓட்டிகளின் 'அந்த' பழக்கம்தான் இதற்கு காரணம்...

ஹூண்டாய் அவ்ரா செடான் கார் அறிமுக தேதி!

வெனியூ காரில் ஏற்கனவே பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 எச்பி பவரை வழங்கும் நிலையில், அவ்ரா செடான் காரில் 100 எச்பி பவரை வழங்கும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு பொருத்தப்பட்டு இருக்கும்.

MOST READ: இது நியாயமா... செல்டோஸ் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கியா!

புதிய ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் விலை உள்ளிட்ட விபரங்கள் வரும் ஜனவரியில் வெளியிடப்படும் வாய்ப்புள்ளது. மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Hyundai is planning to unveil new Aura compact sedan in India on December 19, 2019.
Story first published: Thursday, November 28, 2019, 14:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X