செப்டம்பரில் விற்பனையில் கலக்கிய ஹூண்டாய் கார்கள்... பட்டியல் இதோ!

மாருதி சுசுகி நிறுவனத்திற்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள ஹூண்டாயின் கார்கள் அனைத்து மாதங்களிலும் கணிசமான விற்பனை எண்ணிக்கைகளை பெற்று வருகின்றன.

2019 செப்டம்பரில் அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார் இதுதான்... லிஸ்ட் வெளியீடு

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியும் இதன் போட்டி நிறுவனமான மாருதி சுசுகியின் விற்பனை சரிவிற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு கடந்த 2018ம் ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 15.94 சதவீதத்திலிருந்து, நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில்18.49 சதவீதமாக எழுச்சி பெற்றுள்ளது. அதாவது, 2.6 சதவீதம் கூடுதலாகி இருக்கிறது.

2019 செப்டம்பரில் அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார் இதுதான்... லிஸ்ட் வெளியீடு

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த முன்னேற்றத்திற்கு 2019 மே-ல் அறிமுகம் செய்யப்பட்ட கம்பெக்ட் எஸ்யூவியான வென்யூ மற்றும் ஆகஸ்ட் 2019ல் வெளியான ஹேட்ச்பேக் மாடல் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகிய கார்கள் மிக முக்கிய காரணம்.

2019 செப்டம்பரில் அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார் இதுதான்... லிஸ்ட் வெளியீடு

இந்திய மார்கெட்டில் மிக சிறப்பான முறையில் விற்பனையாகி வரும் இந்த மாடல்கள் அறிமுகமான மாதத்தில் மிக பெரிய அளவில் விற்பனை எண்ணிக்கைகளை பெற்று வருகின்றன. குறிப்பாக ஹூண்டாய் வென்யூ சந்தையில் போட்டி மாடலாக இருந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த எஸ்யூவியாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அங்கீகாரம் பெற்றது.

2019 செப்டம்பரில் அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார் இதுதான்... லிஸ்ட் வெளியீடு

ஐ10 ஹேட்ச்பேக்கின் மூன்றாவது தலைமுறை காராக வலம் வந்து கொண்டிருக்கும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மிக குறுகிய காலத்திலேயே டாப்-10 சிறந்த மாடல் கார்களில் ஒன்றாக இந்திய மார்கெட்டில் இடம் பிடித்துவிட்டது.

2019 செப்டம்பரில் அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார் இதுதான்... லிஸ்ட் வெளியீடு

இந்த கொரிய நிறுவனத்தின் மற்றொரு சிறந்த விற்பனை மாடல் கார், எலைட் ஐ20 ப்ரீமியம் ஹேட்ச்பேக். இந்திய சந்தையில் எப்போதும் கணிசமான விற்பனையால் தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபல மாடலாக இந்த கார் விளங்கி வருவது மட்டுமல்லாமல் இந்த லிஸ்ட்ட்ல் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

2019 செப்டம்பரில் அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார் இதுதான்... லிஸ்ட் வெளியீடு

கடந்த செப்டம்பர் மாதத்தில் எலைட் ஐ20 மாடல் கார்கள் 10,141 யூனிட்களும், இதனை தொடர்ந்து கிராண்ட் ஐ10 மாடல் கார்கள் 9,358 யூனிட்களும் விற்பனையை பதிவு செய்துள்ளன. மூன்றாவது இடத்தில் 7,942 யூனிட்கள் விற்பனையுடன் வென்யூ உள்ளது.

2019 செப்டம்பரில் அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார் இதுதான்... லிஸ்ட் வெளியீடு

ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றொரு பிரபல மாடல் காரான க்ரெட்டா, மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் பிரபலமானது. ஆனால் தற்சமயம் ஆட்டோமொபைல் மார்கெட்டில் அதிகரித்து வரும் எஸ்யூவி கார்களின் போட்டியால், ஹூண்டாய் நிறுவனம் இந்த க்ரெட்டாவின் அடுத்த தலைமுறை கார்களை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த அடுத்த தலைமுறை கார் குறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

நியூ ஹூண்டாய் ஐஎக்ஸ்25 (க்ரெட்டா)... இந்திய அறிமுக விபரங்கள் வெளியீடு

2019 செப்டம்பரில் அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார் இதுதான்... லிஸ்ட் வெளியீடு

க்ரெட்டா எஸ்யூவியை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனத்தால் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட சாண்ட்ரோ கார் கடந்த செப்டம்பர் மாதத்தில் 3,502 யூனிட்கள் விற்பனையாகி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. மீண்டும் மார்கெட்டிற்கு வந்துள்ள இந்த சாண்ட்ரோ மாடல் காரில் பழைய மாடலில் இருந்து முழுவதுமாக மாற்றப்பட்ட டிசைன் சிறப்பம்சமாக கொடுக்கப்பட்டுள்ளன.

Rank Models Units Sold
1 Hyundai Elite i20 10141
2 Hyundai Grand i10 9385
3 Hyundai Venue 7942
4 Hyundai Creta 6641
5 Hyundai Santro 3502
6 Hyundai Verna 1738
7 Hyundai Xcent 1164
8 Hyundai Elantra 94
9 Hyundai Tucson 78
10 Hyundai Kona 47
2019 செப்டம்பரில் அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார் இதுதான்... லிஸ்ட் வெளியீடு

இதற்கு அடுத்ததாக ஆறாவது, ஏழாவது, எட்டாவது இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் செடான் கார்களான வெர்னா, எக்ஸ்செண்ட் மற்றும் எலண்ட்ரா உள்ளன. கடந்த மாதத்தில் வெர்னா, எக்ஸ்செண்ட் கார்கள் முறையே 1,738 யூனிட்கள், 1,164 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. எட்டாவது இடத்தை எலண்ட்ரா மிக பெரிய வித்தியாசத்தில் வெறும் 94 யூனிட்களே விற்பனையாகி பிடித்துள்ளது.

2019 செப்டம்பரில் அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார் இதுதான்... லிஸ்ட் வெளியீடு

சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்ட எலன்ட்ராவின் விற்பனை அக்டோபர் மாதத்தில் தான் அதிகரிக்கும் என ஹூண்டாய் நிறுவனம் கணித்து வைத்துள்ளது. இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனையும் அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்து விலையையும் ரூ.15.89 லட்சமாக நிர்ணயத்துள்ளது. இதன் முழுவிபரம் கீழேயுள்ள லிங்கில் உள்ளது.

ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

2019 செப்டம்பரில் அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார் இதுதான்... லிஸ்ட் வெளியீடு

இந்த லிஸ்ட்டின் கடைசி இரு இடங்களை டூஸான் மற்றும் கோனா எலக்ட்ரிக் கார்கள் பிடித்துள்ளன. இந்திய மார்கெட்டில் ஹூண்டாய் நிறுவனத்தின் முதன்மை மாடலாக இருக்கும் டூஸான் எஸ்யூவி மாடல், கடந்த மாதத்தில் 78 யூனிட்களை பதிவு செய்துள்ளது. 10-வது இடத்தில் உள்ள கோனா எலக்ட்ரிக் 47 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

2019 செப்டம்பரில் அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார் இதுதான்... லிஸ்ட் வெளியீடு

ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாத விற்பனையில் நல்ல விதமாகவே செயல்பட்டுள்ளது. இது நிறுவனத்தை வீழ்ச்சி பாதைக்கு செல்லவிடாமல் உதவும். குறிப்பாக புதிய மாடல் கார்கள் தான் ஹூண்டாய் நிறுவனத்தின் கடந்த மாத வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இந்நிறுவனம் மேலும் பிரபல மாடல்களுக்கு தீபாவளி சலுகைகளையும் அறிவித்துள்ளது.

Most Read Articles

English summary
Hyundai Car Sales India: A Model-Wise Break-Up Of Sales For September 2019
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X