ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹூண்டாய் கார்களுக்கான பல்வேறு சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்!

ஹூண்டாய் சான்ட்ரோ, க்ராண்ட் ஐ10, எலைட் ஐ20 மற்றும் க்ரெட்டா ஆகிய கார்களுக்கு டிஸ்கவுண்ட் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 21ந் தேதி முதல் வரும் 30ந் தேதி வரை கார்களை முன்பதிவு செய்வோர் இந்த சிறப்புச் சேமிப்புச் சலுகைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. தள்ளுபடி மற்றும் ரூ.95,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளையும், கூடுதல் வாரண்டி காலம் மற்றும் சாலை அவசர உதவித் திட்டங்களையும் பெறும் வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்!

ஹூண்டாய் சான்ட்ரோ

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.4.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. இ்ந்த காரின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக, தற்போது ரூ.65,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. 4 ஆண்டுகளுக்கான வாரண்டி மற்றும் சாலை அவசர உதவித்திட்டங்களையும் பெற முடியும்.

ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

அண்மையில் வந்த புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காருடன் பழைய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரும் விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு ரூ.95,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த காருக்கும் 4 ஆண்டுகளுக்கான வாரண்டி காலம் மற்றும் சாலை அவசர உதவி திட்டங்களும் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்!

ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனை மனதில் வைத்து விற்பனையை ஊக்குவிக்கும் விதத்தில் சிறப்பு சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த காருக்கு ரூ.65,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அத்துடன், சிறப்பு சாலை அவசர உதவித் திட்டம் மற்றும் 4 ஆண்டுகளுக்கான வாரண்டி திட்டத்தையும் பெற முடியும்.

ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்!

ஹூண்டாய் க்ரெட்டா

கியா செல்டோஸ் வருகையை மனதில் வைத்து க்ரெட்டா எஸ்யூவிக்கு சிறப்புச் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம். ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு ரூ.80,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காருக்கும் 4 ஆண்டுகால வாரண்டி மற்றும் சிறப்பு சாலை அவசர உதவித் திட்டமும் வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்!

அண்மையில் வந்த ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு எவ்விதமான சிறப்பு சேமிப்புச் சலுகைகளும் இல்லை. ஆனால், மேற்கண்ட முன்னணி ஹூண்டாய் கார்களுக்கு இப்போது அதிகபட்சமான சேமிப்புச் சலுகைகளை பெற முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, September 23, 2019, 14:41 [IST]
English summary
Hyundai car discounts and festive season benefits on offer in India. Hyundai is offering massive discounts and festive season benefits on select cars in the market. This includes the Creta, Santro, Grand i10 and the Elite i20.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+