ஆடி காருக்கு இணையாக தயாராகும் ஹூண்டாய் க்ரெட்டா: சிறப்பு தகவல்...!

சொகுசான ஆடி கார்களுக்கு இணையான சிறப்பம்சத்துடன், ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா கார் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆடி காருக்கு இணையாக தயாராகும் ஹூண்டாய் க்ரெட்டா: சிறப்பு தகவல்...!

ஹூண்டாய் நிறுவனம், அதன் க்ரெட்டா மாடலை 2020ம் ஆண்டிற்கு ஏற்ப தயார் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு, தயாராகி வரும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காரை முழுவதும் டிஜிட்டல் மயத்தில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆடி காருக்கு இணையாக தயாராகும் ஹூண்டாய் க்ரெட்டா: சிறப்பு தகவல்...!

அந்தவகையில், சொகுசு காரான ஆடி காருக்கு இணையான சிறப்பம்சங்களை, புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் பெற உள்ளன. அவ்வாறு, நவீன வசதிகளாக, அனைத்து நிறங்களையும் கொண்ட டிஎஃப்டி ஸ்கிரீனை, புதிய க்ரெட்ட பெற உள்ளது. இந்த ஸ்கிரீன், காரின் வேகம், எஞ்ஜினின் ஆர்பிஎம், ப்யூவல் லெவல் மற்றும் ட்ரிப் மீட்டர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நமக்கு வழங்கும்.

ஆடி காருக்கு இணையாக தயாராகும் ஹூண்டாய் க்ரெட்டா: சிறப்பு தகவல்...!

மேலும், நேவிகேஷன் மற்றும் மல்டிமீடியா போன்ற சிறப்பம்சத்தையும், இந்த ஸ்கிரீன் மூலம் நம்மால் பயன்படுத்திக் கொள்ளமுடியும். இத்துடன், இந்த எஸ்யூவி ரக காரில் ஹெட்-அப் டிஸ்பிளே அம்சமும் வழங்கப்பட உள்ளது.

ஆடி காருக்கு இணையாக தயாராகும் ஹூண்டாய் க்ரெட்டா: சிறப்பு தகவல்...!

கூடுதலாக, அண்மையில் வெளியாகிய ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்பட்டிருக்கும் ப்ளூ லிங்க் உள்ளிட்ட சிறப்பான கனெக்டிவிட்டி அம்சங்களும், புதிய தலைமுறை க்ரெட்டாவில் இடம் பெற இருக்கின்றன. இவற்றுடன், பிரத்யேக அம்சமாக ஹூண்டாய் வெர்னா காரில் இருப்பதைப்போன்ற, கூல்ட் சீட் முன்பக்கத்தில் கொடுக்கப்பட உள்ளது.

ஆடி காருக்கு இணையாக தயாராகும் ஹூண்டாய் க்ரெட்டா: சிறப்பு தகவல்...!

மேலும், இந்த புதிய தலைமுறை க்ரெட்டா, 2,600 மிமீ அளவிலான லாங் வீல் பேஸ் பெற இருக்கின்றது. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் க்ரெட்டாவைக் காட்டிலும் இது நீளமானதாக காட்சியளிக்கின்றது. இதனால், காரில் பயணிப்பவர்களுக்கு மிக சௌகரியமான இடவசதி கிடைக்கின்றது. அதேபோன்று, இதன் பூட் ரூமும் பெரிய அளவைக் கொண்டதாக இருக்கின்றது.

ஆடி காருக்கு இணையாக தயாராகும் ஹூண்டாய் க்ரெட்டா: சிறப்பு தகவல்...!

இத்துடன், 2020ம் ஆண்டு க்ரெட்டா பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு எரிபொருள் எஞ்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்க இருக்கின்றது. இவை இரண்டுமே, 1.5 லிட்டர் கொள்ளளவைக் கொண்டதாக இருக்கும் என தெரிகிறது. ஆனால், தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் க்ரெட்டாவில் 1.6 லிட்டர் கொள்ளவைக் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆடி காருக்கு இணையாக தயாராகும் ஹூண்டாய் க்ரெட்டா: சிறப்பு தகவல்...!

பழைய க்ரெட்டாவைக் காட்டிலும் குறைவான கெபாசிட்டியாக இது காணப்பட்டாலும், சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், புதிய 1.5 லிட்டர் எஞ்ஜின் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த எஞ்ஜினின் முழுமையான செயல் திறன் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அதேசமயம், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு எஞ்ஜின்களிலும், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடி காருக்கு இணையாக தயாராகும் ஹூண்டாய் க்ரெட்டா: சிறப்பு தகவல்...!

மேலும், புதிய க்ரெட்டாவும், தற்போதைய க்ரெட்டாவைப் போன்று முன்பக்க வீல் இயக்கம் கொண்டதாக இருக்கின்றது. ஆனால், புதிய க்ரெட்டாவில் உள்ள பிஎஸ்-6 தரத்திற்கு ட்யூன் அப் பெற்று விற்பனைக்கு வரவிருக்கின்றது. இந்த புதிய மாற்றங்களைப் பெற்ற அடுத்த தலைமுறை க்ரெட்டா வருகின்ற 2020ம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Source: carwale

Most Read Articles
English summary
Hyundai Creta Will Get Features Like Audi. Read In Tamil.
Story first published: Wednesday, June 5, 2019, 16:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X