ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய ஹூண்டாய் எலான்ட்ரா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவின் எக்ஸிகியூட்டிவ் செடான் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் எலான்ட்ரா காரும் மிக முக்கியத் தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்ககையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், பல புதிய மாற்றங்களுடன் ஹூண்டாய் எலான்ட்ரா கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பெட்ரோல் மாடலில் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டீசல் எஞ்சின் ஆப்ஷன் இல்லை. பெட்ரோல் மாடலானது எஸ், எஸ்எக்ஸ் என்ற இரண்டு மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளிலும், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் என்ற இரண்டு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரின் முகப்பு வடிவமைப்பில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், முக்கோண வடிவிலான பனி விளக்குகள் அறை, புதிய டிசைனிலான அலாய் சக்கரங்களுடன் மாற்றங்கள் கண்டுள்ளது. அதேபோன்று, முன்புறம், பின்புற பம்பர்களின் டிசைன் மாற்றம் செய்யப்பட்டு மிரட்டலாக தெரிகிறது. எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருப்பது முக்கிய அம்சமாக கூறலாம்.

ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

உட்புறமும் பீஜ் மற்றும் கருப்பு வண்ணத்திலான டியூவல் டோன் இன்டீரியருடன் மிகவும் பிரிமீயமாக தெரிகிறது. புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், காற்றோட்டத்தை வழங்கும் வென்டிலேட்டட் வசதியுடன் முன் இருக்கைகள், 10 விதமான நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளக்கூடிய ஓட்டுனர் இருக்கை, எலெக்ட்ரிக் சன்ரூஃப், முன்புறத்திற்கான பார்க்கிங் சென்சார்கள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

MOST READ: ஹீரோ, ஹோண்டா நிறுவனங்கள் ஆச்சரியம்: மகிழ்ச்சியின் உச்சத்தில் சுஸுகி... சோதனையிலும் ஓர் சாதனை!

ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, அதிவேகத்தை எச்சரிக்கும் வசதி, சீட் பெல்ட் ரிமைன்டர் வசதி, மலைச்சாலைகளில் கார் பின்னோக்கி நகர்வதை தவிர்க்கும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் கார் நிலைகுலையும் நிலையை தவிர்க்கும் வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

MOST READ: 11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?

ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 152 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

MOST READ: வெறும் ரூ. 2.83 லட்சம்தான்: நானோவிற்கு அடுத்த மலிவு விலை ரெனோ கார்... ஆனால் அதீத திறனுடையது!

ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் ரூ.15.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கும். டாப் வேரியண்ட் ரூ.20.39 லட்சத்தில் கிடைக்கும். டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ், ஹோண்டா சிவிக் மற்றும் ஸ்கோடா ஆக்டேவியா உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடும்.

Variant Prices
S Rs 15.89 Lakh

SX

Rs 18.49 Lakh
SX AT Rs 19.49 Lakh
SX(O) AT Rs 20.39 Lakh
Most Read Articles

English summary
Hyundai India has launched the new Elantra sedan in the market. The new Hyundai Elantra sedan is available with a starting price of Rs 15.89 lakh, ex-showroom (Delhi). The new Hyundai Elantra is available in a range of three variants: S, SX and SX (O). The top-spec Hyundai Elantra SX (O) AT is priced at Rs 20.39 lakh, ex-showroom (Delhi).
Story first published: Thursday, October 3, 2019, 12:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X