ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வேரியண்ட் விபரம்!

விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரின் வேரியண்ட் உள்ளிட்ட முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் வரும் அக்டோபர் 3ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய எலான்ட்ரா காருக்கான முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட் விபரம்!

இந்த நிலையில், இந்த காரின் வேரியண்ட் விபரம், வண்ணத் தேர்வுகள் உள்ளிட்ட பல முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. முன்பதிவு செய்ய இருப்போருக்கு வசதியாக இந்த விபரங்களை இங்கே தொடர்ந்து பார்க்கலாம்.

எதிர்பார்த்தது போலவே, ஹூண்டாய் எலான்ட்ரா கார் பெட்ரோல் மாடலில் மட்டுமே இப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 152 பிஎஸ் பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட் விபரம்!

இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். மேலும், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் வர இருக்கிறது.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் எஸ், எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் (O) ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில், எஸ்எக்ஸ் ஆப்ஷனல் என்ற டாப் வேரியண்ட்டானது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும். எஸ்எக்ஸ் வேரியண்ட்டில் மட்டுமே மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் என இரண்டிலும் கிடைக்கும்.

ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட் விபரம்!

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் ஃபான்டம் பிளாக், மரினா புளூ, ஃபியரி ரெட், போலார் ஒயிட் மற்றும் தைபூன் சில்வர் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரில் முக்கிய அம்சமாக புளூலிங்க் செயலியும் வழங்கப்பட இருக்கிறது.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் ரூ.14 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா ஆக்டேவியா, ஹோண்டா சிவிக், டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Hyundai has revealed the variants details of the upcoming Elantra facelift along with the colour options for India.
Story first published: Saturday, September 28, 2019, 11:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X