விற்பனையிலிருந்து விலக்கப்பட்டது ஹூண்டாய் இயான் கார்!

ஹூண்டாய் இயான் கார் இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இனி சான்ட்ரோ கார்தான் அந்நிறுவனத்தின் குறைவான விலை கொண்ட மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளது.

விற்பனையிலிருந்து விலக்கப்பட்டது ஹூண்டாய் இயான் கார்!

கடந்த 2011ம் ஆண்டு ஹூண்டாய் இயான் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி ஆல்ட்டோ காருக்கு நேரடி போட்டியாக களமிறக்கப்பட்ட ஹூண்டாய் இயான் கார் வாடிக்கையாளர்களை கவர்ந்தது.

விற்பனையிலிருந்து விலக்கப்பட்டது ஹூண்டாய் இயான் கார்!

ஃப்ளூயிடிக் டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த கார் மாருதி ஆல்ட்டோ காருக்கு நேர் நிகராகவும், சரியான மாற்று தேர்வாகவும் இருந்தது. முதலில் இயான் கார் 814சிசி பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் வந்தது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 55 பிஎச்பி பவரையும், 75 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

விற்பனையிலிருந்து விலக்கப்பட்டது ஹூண்டாய் இயான் கார்!

2014ம் ஆண்டு கப்பா பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 65 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைத்து வருகிறது

விற்பனையிலிருந்து விலக்கப்பட்டது ஹூண்டாய் இயான் கார்!

இந்த சூழலில், மேம்படுத்தப்பட்ட ஆல்ட்டோ கார் மற்றும் ரெனோ க்விட், டாடா டியாகோ உள்ளிட்ட பல புதிய மாடல்களின் வரவால் மார்க்கெட்டில் மதிப்பிழந்தது. விற்பனையிலும் பெரும் சுணக்கம் ஏற்பட்டது.

விற்பனையிலிருந்து விலக்கப்பட்டது ஹூண்டாய் இயான் கார்!

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், இயான் கார் பக்கம் சீந்துவாரில்லை. இதனை உணர்ந்து கொண்ட ஹூண்டாய் மோட்டார்ஸ், இயான் காரை இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்தது.

விற்பனையிலிருந்து விலக்கப்பட்டது ஹூண்டாய் இயான் கார்!

அதன்படி, தற்போது ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து இயான் கார் விபரம் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது. இனி ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பும் இல்லை. மேலும், டீலர்களில் இருப்பு இருக்கும் இயான் கார் விற்று தீர்ந்தவுடன் முறைப்படி அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புள்ளது.

விற்பனையிலிருந்து விலக்கப்பட்டது ஹூண்டாய் இயான் கார்!

இதுதவிரவும், புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக எஞ்சின்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கு முதலீடு அதிகம் செய்ய வேண்டி இருப்பதாலும், அதற்கு ஏற்ப விற்பனை இருக்குமா என்ற சந்தேகத்திலும் இயான் காருக்கு விடை கொடுக்க ஹூண்டாய் மோட்டார்ஸ் முடிவு செய்ததாக தெரிகிறது.

விற்பனையிலிருந்து விலக்கப்பட்டது ஹூண்டாய் இயான் கார்!

இனி சான்ட்ரோ கார்தான் அந்நிறுவனத்தின் விலை குறைவான மாடலாகா விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும், இயான் விலக்கப்பட்டதால் ஏற்படும் வர்த்தக இழப்பை சான்ட்ரோ மூலமாக சரிசெய்துவிட முடியும் என்று ஹூண்டாய் கருதுகிறது.

விற்பனையிலிருந்து விலக்கப்பட்டது ஹூண்டாய் இயான் கார்!

மேம்படுத்தப்பட்ட இயான் கார் மாடலையோ அல்லது சான்ட்ரோ காரைவிட குறைவான விலையில் புதிய மாடலை களமிறக்கும் எண்ணம் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இல்லை என்றும் ஆட்டோமொபைல் துறையினரின் கணிப்பாக உள்ளது.

Most Read Articles
English summary
Hyundai has discontinued Eon Hatchback from Indian market.
Story first published: Wednesday, March 27, 2019, 18:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X