கிராண்ட் ஐ10 மாடலில் சிஎன்ஜி ஆப்ஷன் விற்பனைக்கு அறிமுகம்: விலை மற்றும் சிறப்பு தகவல்!

ஹூண்டாய் நிறுவனம், கிராண்ட் ஐ10 மாடலில் சிஎன்ஜி வேரியண்டை அதிகாரப் பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

கிராண்ட் ஐ10 மாடலில் சிஎன்ஜி ஆப்ஷன் விற்பனைக்கு அறிமுகம்: விலை மற்றும் சிறப்பு தகவல்!

கொரியன் கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், கிராண்ட் ஐ10 மாடலில் சிஎன்ஜி ஆப்ஷனை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிவித்துள்ளது. இந்த ஆப்ஷனானது ஐ10-ன் மேக்னா வேரியண்டில் மட்டும் கிடைக்கின்றது. இதன் விலை எக்ஸ்-ஷோரூமில் ரூ. 6.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மேக்னாவின் பெட்ரோல் வேரியண்டைக் காட்டிலும் ரூ.67 ஆயிரம் பிரீமியம் தொகையாக இருக்கின்றது.

கிராண்ட் ஐ10 மாடலில் சிஎன்ஜி ஆப்ஷன் விற்பனைக்கு அறிமுகம்: விலை மற்றும் சிறப்பு தகவல்!

கிராண்ட் ஐ10 காரில் சிஎன்ஜி ஆப்ஷன் ஏற்கனவே விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அது ஃப்லீட் எனப்படும் அதிகளவிலான யூனிட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது ஹூண்டாயின் கிராண்ட் ஐ10 காரின் சிஎன்ஜி ஆப்ஷனை தனியார்களுக்கும் விற்பனைச் செய்யும் வகையில் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

கிராண்ட் ஐ10 மாடலில் சிஎன்ஜி ஆப்ஷன் விற்பனைக்கு அறிமுகம்: விலை மற்றும் சிறப்பு தகவல்!

முன்னதாக, ஹூண்டாய் நிறுவனத்தின் சேன்ட்ரோ மாடல் மட்டும்தான் தனியார்களுக்கு சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனைச் செய்யப்பட்டு வந்தது. தற்போது, இத்துடன் க்ராண்ட் ஐ10 காரும் இணைந்துள்ளது. சமீபகலாமாக சிஎன்ஜி ஆப்ஷனிலான கார்களுக்கு ஏற்பட்டு எதிர்பார்ப்பை அடுத்து ஹூண்டாய் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கிராண்ட் ஐ10 மாடலில் சிஎன்ஜி ஆப்ஷன் விற்பனைக்கு அறிமுகம்: விலை மற்றும் சிறப்பு தகவல்!

அந்த வகையில், ஹூண்டாய் நிறுவனம் மட்டுமின்றி, ஃபோர்டு நிறுவனமும் இதுபோன்ற முயற்சியை மேற்கொண்டது. அவ்வாறு, ஃபோர்டு நிறுவனம் சமீபத்தில் தான், அதன் செடான் ரகத்திலான ஃபிகோ காரின் சிஎன்ஜி வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

கிராண்ட் ஐ10 மாடலில் சிஎன்ஜி ஆப்ஷன் விற்பனைக்கு அறிமுகம்: விலை மற்றும் சிறப்பு தகவல்!

கிராண்ட் ஐ10 சிஎன்ஜி வேரியண்டில், 1.2 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 67 பிஎஸ் பவரையும், 98என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. மேலும், இந்த சிஎன்ஜி எஞ்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

கிராண்ட் ஐ10 மாடலில் சிஎன்ஜி ஆப்ஷன் விற்பனைக்கு அறிமுகம்: விலை மற்றும் சிறப்பு தகவல்!

இவற்றுடன், இந்த காரில் தொழில்நுட்ப அம்சங்களாக ப்ளூடூத் ஆடியோ சிஸ்டம், ஸ்டியரிங் மவுண்டட் கன்ட்ரோல்ஸ், நான்கு கதவுகளிலும் பவர் விண்டோஸ், பின்பக்கத்திற்கான ஏசி வெண்ட், ரிமோட் லாக்கிங், எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் மிர்ரர்ஸ் உட்பட பல்வேறு வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன், பாதுகாப்பு அம்சங்களாக, ட்யூவல் ஏர்பேக்ஸ், ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங், பின்பக்கத்தில் பார்க்கிங் சென்சார்ஸ், டிரைவர் சீட் பெல்ட் வார்னிங் உட்பட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Hyundai Grand i10 CNG Launched In India. Read In Tamil.
Story first published: Wednesday, May 8, 2019, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X