க்ராண்ட் ஐ10 காரில் டீசல் மாடலின் விற்பனையை நிறுத்த ஹூண்டாய் முடிவு!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரில் டீசல் மாடல் விலக்கிக் கொள்ளப்பட இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

க்ராண்ட் ஐ10 காரில் டீசல் மாடலின் விற்பனையை நிறுத்த ஹூண்டாய் முடிவு!

பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகவும் பிரிமீயம் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார். இந்த நிலையில், சந்தைப் போட்டி அதிகரித்துள்ளதையடுத்து, முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

க்ராண்ட் ஐ10 காரில் டீசல் மாடலின் விற்பனையை நிறுத்த ஹூண்டாய் முடிவு!

வரும் 20ந் தேதி மூன்றாம் தலைமுறை மாடலாக ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் என்ற பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த காருக்கு ரூ.11,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனினும், தற்போது விற்பனையில் உள்ள மாடலும் விற்பனையில் இருக்கும் என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்திருந்தது.

க்ராண்ட் ஐ10 காரில் டீசல் மாடலின் விற்பனையை நிறுத்த ஹூண்டாய் முடிவு!

தற்போது விற்பனையில் உள்ள இரண்டாம் தலைமுறை மாடலில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த நிலையில், தற்போதைய மாடலானது பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே தொடர்ந்து விற்பனை செய்யப்பட இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. டீசல் மாடல் விலக்கிக் கொள்ளப்பட இருக்கிறது.

க்ராண்ட் ஐ10 காரில் டீசல் மாடலின் விற்பனையை நிறுத்த ஹூண்டாய் முடிவு!

பெட்ரோல் எஞ்சின் மாடலானது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் தொடர்ந்து கிடைக்கும். டீசல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் வழங்கப்படும்.

க்ராண்ட் ஐ10 காரில் டீசல் மாடலின் விற்பனையை நிறுத்த ஹூண்டாய் முடிவு!

தற்போது ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் ரூ.5.83 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய மாடலானது சான்ட்ரோ மற்றும் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஆகிய இரு கார் மாடல்களுக்கும் இடையிலான விலையில் நிலைநிறுத்தப்படும்.

க்ராண்ட் ஐ10 காரில் டீசல் மாடலின் விற்பனையை நிறுத்த ஹூண்டாய் முடிவு!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்இடி பகல்நேர விளக்குகள், டியூவல் ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஏராளமான சிறப்பம்சங்களுடன் வந்துள்ளன.

க்ராண்ட் ஐ10 காரில் டீசல் மாடலின் விற்பனையை நிறுத்த ஹூண்டாய் முடிவு!

அதிக சிறப்பம்சங்கள் மற்றும் புதிய டிசைன் அம்சங்களுடன் வரும் புதிய தலைமுறை க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் விலையை அதிகமாக நிர்ணயிக்க வேண்டி வரும். ஆனால், சந்தைப் போட்டி அதிகம் இருப்பதால், சான்ட்ரோ காருக்கும் புதிய நியோஸ் காருக்கும் இடையிலான மாடல் ஹூண்டாய் நிறுவனத்துக்கு அவசியமாக இருக்கிறது.

க்ராண்ட் ஐ10 காரில் டீசல் மாடலின் விற்பனையை நிறுத்த ஹூண்டாய் முடிவு!

மேலும், புதிய க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகள் மற்றும் மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக தற்போதைய க்ராண்ட் ஐ10 காரை மேம்படுத்தப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மாருதி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ கார்களுக்கு போட்டியாக க்ராண்ட் ஐ10 மாடல்கள் நிலைநிறுத்தப்படும்.

Most Read Articles
English summary
Korean brand Hyundai Motors has announced that the current Grand i10 will continue to be available in the market, although it will be offered only with a petrol engine. Hyundai has decided to pull the plug on the diesel variant of the Grand i10 hatchback in the Indian market.
Story first published: Friday, August 16, 2019, 15:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X