புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் உற்பத்தி சென்னை ஆலையில் துவங்கியது!

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் உற்பத்தி சென்னை ஆலையில் துவங்கியது!

பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில், அனைத்திலும் மேம்படுத்தப்பட்ட மூன்றாம் தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரின் படங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் உற்பத்தி சென்னை ஆலையில் துவங்கியது!

வரும் 20ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரின் உற்பத்தி சென்னை ஆலையில் துவங்கப்பட்டுள்ளது. உற்பத்தி பிரிவிலிருந்து முதல் கார் வெளிவரும் நிகழ்வில் ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்ககுர் எஸ்.எஸ்.கிம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் உற்பத்தி சென்னை ஆலையில் துவங்கியது!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் என்ற பெயரில் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. நியோஸ் என்றால் மேலும் என்பது பொருள்படுவதாக ஹூண்டாய் தெரிவிக்கிறது. இடவசதி, வசதிகளில் கூடுதலாக இருக்கும் என்பதை இந்த பெயர் உணர்த்துவதாக ஹூண்டாய் கூறி இருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் உற்பத்தி சென்னை ஆலையில் துவங்கியது!

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் வடிவமைப்பில் மிக அசத்தலாக இருக்கிறது. பெரிய க்ரில் அமைப்பு, புரொாஜெக்டர் ஹெட்லைட்டுகள், க்ரில் அமைப்பின் இருபுறத்திலும் பூமராங் வடிவ எல்இடி பகல்நேர விளக்குகள், க்ரோம் கதவு கைப்பிடிகள், டியூவல் டோன் அலாய் வீல்கள் கவர்ச்சியை கூட்டுகின்றன.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் உற்பத்தி சென்னை ஆலையில் துவங்கியது!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த சாதனம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் முக்கிய அம்சமாக இருக்கும். மிக பிரிமீயமான இன்டீரியருடன் வர இருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. இதில் வழங்கப்பட இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 81 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் உற்பத்தி சென்னை ஆலையில் துவங்கியது!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும். மேனுவல் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.7 கிமீ மைலேஜையும், ஏஎம்டி மாடல் 20.5 கிமீ மைலேஜையும் வழங்கும். மேனுவல் டீசல் மாடல் லிட்டருக்கு 26.2 கிமீ மைலேஜையும், ஏஎம்டி மாடல் லிட்டருக்கு 28.4 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் உற்பத்தி சென்னை ஆலையில் துவங்கியது!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் டியூவல் ஏர்பேக்குகள், பார்க்கிங் சென்சார்கள், சீட்பெல்ட் ரிமைன்டர், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் உற்பத்தி சென்னை ஆலையில் துவங்கியது!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் ஃபியரி ரெட், போலார் ஒயிட், தைபூன் சில்வர், டைட்டன் க்ரே, ஆல்ஃபா புளூ மற்றும் அக்வா டீல் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் உற்பத்தி சென்னை ஆலையில் துவங்கியது!

தற்போதைய மாடலைவிட புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் ரூ.50,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Hyundai India has started production of their upcoming third-generation Grand i10 model in the market. The new Hyundai Grand i10 Nios is scheduled to go on sale in the Indian market from the 20th of August, with bookings for the hatchback having already begun.
Story first published: Monday, August 12, 2019, 13:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X