ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் விரைவில் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்!

கடந்த ஆகஸ்ட் 21ந் தேதி புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வடிவமைப்பு, வசதிகளில் மேம்படுத்தப்பட்டு வந்த இந்த புதிய தலைமுறை மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்!

தற்போது ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் 82 பிஎச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 பிஎச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த எஞ்சின்களுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகிறது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்!

இந்த நிலையில், புதிய ஹூண்டாய் ஐ10 நியோஸ் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஹூண்டாய் வெனியூ காரில் பயன்படுத்தப்படும் இந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் விரைவில் பல மாடல்களில் வழங்கப்பட உள்ளது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்!

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும்.. இதுத மிகவும் சக்திவாய்ந்த ஐ10 நியோஸ் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படும். இந்த மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வரும் வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்!

ஹூண்டாய் வெனியூ காரில் இதே எஞ்சினுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த மாடலில் வழங்கப்படாது. ஏனெனில், விலையை மிக அதிகமாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், இதனை தவிர்க்க ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்!

அதேநேரத்தில், அண்மையில் ஐரோப்பாவில் அறிமுகமான ஹூண்டாய் ஐ10 கார் என் என்ற பெர்ஃபார்மென்ஸ் வகை மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவாக பார்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக, இந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வை வழங்கிவிட ஹூண்டாய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் ஃபோர்டு ஃபிகோ (96 எச்பி) மற்றும் டாடா டியாகோ ஜேடிபி மாடல்களுடன் போட்டி போடும். ரூ.8 லட்சத்தையொட்டி எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

Source: Autocarindia

Most Read Articles
English summary
Hyundai Motors is planning to launch Grand i10 NIOS with powerful turbo petrol engine option in India.
Story first published: Thursday, October 3, 2019, 10:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X