ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் மின்சார கார் மாடலாக கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஏராளமான சிறப்பு அம்சங்களுடன் இந்திய கார் சந்தையில் புதிய அத்யாயத்தை துவங்கி இருக்கும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தலைசிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்துள்ள முதல் மாடலாக ஹூண்டாய் கோனா பெருமை பெறுகிறது. இதுவரை விற்பனைக்கு வந்த மாடல்கள் பேட்டரி திறன் உள்ளிட்ட அம்சங்களில் நடைமுறை பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

ஆனால், புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் ஏராளமான சிறப்பம்சங்களை பெற்று வந்துள்ளது. அதிக தூரம் பயணிக்கும் இந்தியாவில் முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை ஹூண்டாய் கோனா கார் பெற்றுள்ளது. அராய் வழங்கியிருக்கும் சான்றின்படி, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ தூரம் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

இது நிச்சயம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் விஷயமாக இருக்கும். குறிப்பாக, நீண்ட தூரம் பயணிக்க விரும்புவோருக்கு சிறந்த எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும். அத்துடன், இந்த காரின் பேட்டரியை 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக வெறும் 57 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றும் வகையில் இருக்கும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

எனவே, நீண்ட தூர பயணத்தின்போது வழியில் மிக விரைவாக சார்ஜ் ஏற்றிக் கொண்டு செல்ல முடியும். இதுதவிர, 7.2 kW AC சார்ஜரும் வழங்கப்படும். இதுதான் வீடுகளில் பொருத்தக்கூடிய சார்ஜராக இருக்கும். இந்த சார்ஜர் மூலமாக பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 6 மணி 10 நிமிடங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

அடுத்த சில ஆண்டுகளில் நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன்மூலமாக, இந்த கார் நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவானதாக அமையும். அத்துடன், தினசரி பயன்பாட்டிற்கும் மிகச் சிறந்ததாக இருக்கும். ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால், ஒரு வாரத்திற்கு பயன்படுத்தும் வாய்ப்பை வழங்கும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் எஸ்யூவி ரக மாடல். ஏற்கனவே வெளிநாடுகளில் விற்பனையில் இருந்து வருகிறது. இந்த கார் 39kWh மற்றும் 64kWh என இரண்டு திறன் வாய்ந்த பேட்டரி மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 39.2kWh பேட்டரி மாடல்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் மின் மோட்டார் அதிகபட்சமாக 136 பிஎஸ் பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிங்கிள் ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 9.7 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் ஈக்கோ, ஈக்கோ பிளஸ் மற்றும் கம்போர்ட், கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் ஆகிய 4 விதமான டிரைவிங் மோடுகள் உள்ளன. ஸ்போர்ட் மோடில் அதிகபட்ச செயல்திறனை இதன் மின்மோட்டார் வெளிப்படுத்தும். ஈக்கோ மற்றும் ஈக்கோ பிளஸ் மோடுகளில் அதிகபட்சமான பயண தூரத்தை பெற இயலும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், ரியர் ஸ்பாய்லர், ரூஃப் ரெயில்கள் உள்ளன. உட்புறத்தில் லெதர் இருக்கைகள், சாஃப்ட் டச் டேஷ்போர்டு, வயர்லெஸ் சார்ஜர், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், மெட்டல் பெடல்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவை உள்ளன.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

இந்த காரில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். எலெக்ட்ரிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் வசதியுடன் இருக்கைகள், 10 நிலைகளில் மாற்றக்கூடிய டிரைவர் இருக்கை, லம்பார் சப்போர்ட், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை உள்ளன.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸடம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம், ரியர் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், வெர்ச்சுவல் எஞ்சின் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் 4,180 மிமீ நீளமும், 1,800 மிமீ அகலமும், 1,570 மிமீ உயரமும் கொண்டதாக வந்துள்ளது. இந்த கார் 2,600 மிமீ வீல்பேஸ் நீளம் பெற்றுள்ளது. 332 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் வெள்ளை, சில்வர், நீலம் மற்றும் கருப்பு ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கும். வெள்ளை மற்றும் கருப்பு கூரை வண்ணக் கலவையிலும் கிடைக்கும். இந்த வண்ணத் தேர்வுக்கு ரூ.20,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ரூ.25.30 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆண்டுக்கு 200 யூனிட்டுகள் என்ற விற்பனை இலக்குடன் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு 3 ஆண்டுகள் அல்லது வரம்பில்லா கிலோமீட்டர்களுக்கான வாரண்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்பட இருக்கிறது.

Most Read Articles

English summary
South Korean car maker Hyundai motor has launched much awaited Kona electric SUV car in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X