ஸ்மார்ட் போனுக்கு இணையான வேகத்தில் சார்ஜை பெறும் ஹூண்டாய் கோனா எலெக்டரிக் கார்... வீடியோ!

ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் கார், நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனைப் போன்று மிக வேகமாக சார்ஜைப் பெறும் என வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஸ்மார்ட் போனுக்கு இணையான வேகத்தில் சார்ஜை பெறும் ஹூண்டாய் கோனா எலக்டரிக் கார்... வீடியோ!

உலக நாடுகள் அனைத்தின் பார்வையும் மின்வாகனத்தின் திரும்பியுள்ள உள்ளநிலையில், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும், எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் முனைப்பைச் செலுத்தி வருகின்றன.

அதேபோன்று, இந்தியாவும் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகன பயன்பாட்டை உள்நாட்டில் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனடிப்படையில், பல முன்னணி நிறுவனங்கள் அதன் எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய காத்திருக்கின்றன.

ஸ்மார்ட் போனுக்கு இணையான வேகத்தில் சார்ஜை பெறும் ஹூண்டாய் கோனா எலக்டரிக் கார்... வீடியோ!

அந்தவகையில், ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலக்ட்ரிக் கார் மிக விரைவில் இந்திய நான்கு சக்கர வாகனச் சந்தையில் களமிறக்கின்றது. இந்த கார், பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட எலக்ட்ரிக் கார் என்பதால், இந்தியர்கள் மத்தியில் ஆவலையும், எதிர்பார்ப்பையும் பெருமளவில் ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் போனுக்கு இணையான வேகத்தில் சார்ஜை பெறும் ஹூண்டாய் கோனா எலக்டரிக் கார்... வீடியோ!

இந்நிலையில், கோனா எலக்ட்ரிக் கார், நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்போனைப் போன்று அதி விரைவாக சார்ஜாகிவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றும் தற்போது யுடியூபில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்மார்ட் போனுக்கு இணையான வேகத்தில் சார்ஜை பெறும் ஹூண்டாய் கோனா எலக்டரிக் கார்... வீடியோ!

இந்த வீடியோ, கோனா எலக்ட்ரிக் காரின் சார்ஜிங் முறை மற்றும் கார் குறித்த சில விஷயங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம், இதுபோன்ற பல்வேறு வீடியோ தொகுப்பினை வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த வீடியோக்கள், கோனா எலக்ட்ரிக் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள், கார் பற்றிய முழுமையான தகவலை அறிந்துகொள்ளும் வகையில் அவை வெளியிடப்பட உள்ளன.

ஸ்மார்ட் போனுக்கு இணையான வேகத்தில் சார்ஜை பெறும் ஹூண்டாய் கோனா எலக்டரிக் கார்... வீடியோ!

இதன் ஆரம்ப கட்டமாகவே, கோனா எலக்ட்ரிக் காரின் ஃபாஸ்ட் சார்ஜிங்கை விளக்கும்வகையிலான முதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில், கோனா எலக்ட்ரிக் கார் செல்போனைப் போன்று மிக வேகமாக சார்ஜ் பெறுவதைப்போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு, கோனா எலக்ட்ரிக் கார், மிக வேகமாக சார்ஜடைய அதனை ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் சார்ஜ் செய்ய வேண்டும். அவ்வாறு, செய்தால் மட்டுமே கோனா எலக்ட்ரிக் கார் மிக வேகமாக சார்ஜடையும்.

இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் சிஸ்டமானது, உச்சபட்ச உயர்மின் அழுத்தம் முறையில் செய்யப்படுகின்றது. இவ்வாறு சார்ஜ் செய்யும்போது மட்டுமே, கோனா எலக்ட்ரிக் கார் அதிவேகத்தில் சார்ஜாகின்றது. ஆனால், இந்த முறையில் கார் முழுமையாக சார்ஜாக எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பது குறித்த தகவலை இதுவரை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஸ்மார்ட் போனுக்கு இணையான வேகத்தில் சார்ஜை பெறும் ஹூண்டாய் கோனா எலக்டரிக் கார்... வீடியோ!

தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவைத் தொடர்ந்து வெளியாக இருக்கும் வீடியோக்கள், ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் காரின் அதீத திறன், பேட்டரி பவர், காரின் பராமரிப்பு செலவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நமக்கு வழங்க இருக்கின்றது.

ஸ்மார்ட் போனுக்கு இணையான வேகத்தில் சார்ஜை பெறும் ஹூண்டாய் கோனா எலக்டரிக் கார்... வீடியோ!

ஹூண்டாய் இந்த எலக்ட்ரிக் கார் இரு வேரியண்டில் சர்வதேச சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், இந்தியாவில் கோனா எலக்ட்ரிக் காரின் சிங்கிள் வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்மார்ட் போனுக்கு இணையான வேகத்தில் சார்ஜை பெறும் ஹூண்டாய் கோனா எலக்டரிக் கார்... வீடியோ!

ஆனால், இந்தியாவிற்கு எந்த வேரியண்ட் களமிறக்கப்படும் என்ற தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேசமயம், இந்த எலக்ட்ரிக் ஓர் வேரியண்ட் அண்மையில் இந்தியச் சாலையில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, ஸ்பை செய்யப்பட்டிருந்து குறிப்பிடத்தகுந்தது.

ஸ்மார்ட் போனுக்கு இணையான வேகத்தில் சார்ஜை பெறும் ஹூண்டாய் கோனா எலக்டரிக் கார்... வீடியோ!

சர்வதேச சந்தையில் விற்பனையில் இருக்கும் கோனா எலக்ட்ரிக் கார் 39.2 kWh என்ற பேட்டரி பேக்கில் கிடைக்கின்றது. இது ஒரு முழுமையான சார்ஜில் 300 கிமீ தூரம் செல்லக்கூடியது. அதற்கேற்ப வகையிலான மின் மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டார், 134 பிஎஸ் பவரையும், 335 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த எஞ்ஜின், மணிக்கு 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 9.3 செகண்டிலேயே தொட்டுவிடும்.

ஸ்மார்ட் போனுக்கு இணையான வேகத்தில் சார்ஜை பெறும் ஹூண்டாய் கோனா எலக்டரிக் கார்... வீடியோ!

இதையடுத்து இருக்கும் வேரியண்டில் 64 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், 204 பிஎஸ் பவர் மற்றும் 395 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் வகையிலான மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு வேரியண்டுகளின் பேட்டரியும் சாதாரண சார்ஜிங் முறையில் 9 மணி நேரத்திலையும், ஃபாஸ்ட் சார்ஜிங்கில் 54 நிமிடங்களில் 80 சதவிகித சார்ஜையும் அடையும் திறன் கொண்டவை.

ஸ்மார்ட் போனுக்கு இணையான வேகத்தில் சார்ஜை பெறும் ஹூண்டாய் கோனா எலக்டரிக் கார்... வீடியோ!

இதில், இந்திய சந்தைக்கு 39 kWh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது, இந்திய மதிப்பில் ரூ. 25 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹூண்டாயின் இந்த கோனா எலக்ட்ரிக் கார் எம்ஜி நிறுவனத்தின் இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் காருடன் போட்டியிட உள்ளது.

Most Read Articles
English summary
Hyundai Kona EV Will Quick Charge Like Your Smartphone. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X