ஆகஸ்ட்டில் அதிகம் விற்பனையான டாப்-11 ஹூண்டாய் கார்கள் இவை தான்! லிஸ்ட் இதோ

கடந்த மாதம் ஆகஸ்ட் 2019ல் இந்திய மார்க்கெட்டில் அதிகம் விற்பனையான டாப்-11 ஹூண்டாய் கார்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆகஸ்ட்டில் அதிகம் விற்பனையான டாப்-11 ஹூண்டாய் கார்கள் இவை தான்! லிஸ்ட் இதோ

ஹூண்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருப்பது, ஹூண்டாய் கிராண்ட் ஐ10. கடந்த மாதம் 9,403 யூனிட்கள் விற்பனையாகியுள்ள இந்த காருடன் இதன் லேட்டஸ்ட் வெர்சனான கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலும் அதிக எண்ணிக்கையிலான யூனிட்களில் விற்பனையாகி இருக்கிறது.

ஆகஸ்ட்டில் அதிகம் விற்பனையான டாப்-11 ஹூண்டாய் கார்கள் இவை தான்! லிஸ்ட் இதோ

முதலிடத்தை பெற்றிருந்தாலும் கடந்த ஆண்டை விட சரிவை தான் கிராண்ட் ஐ10 மாடல் கண்டுள்ளது. இந்த கார் ஆனது 2018 ஆகஸ்ட்டில் 11,489 யூனிட்கள் விற்பனையாகியிருந்தன. புது மாடலின் வரவும் இந்த மாடலின் சரிவுக்கு ஒரு காரணம்.

ஆகஸ்ட்டில் அதிகம் விற்பனையான டாப்-11 ஹூண்டாய் கார்கள் இவை தான்! லிஸ்ட் இதோ

இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் ஹூண்டாய் மாடல் கார், வென்யூ எஸ்யூவி. கடந்த மாதத்தில் 9,342 யூனிட்கள் விற்பனையான இந்த கார் அறிமுகமான குறைவான காலத்திலேயே முன்னிலையில் வந்தது மட்டுமல்லாமல் இந்தியாவில் அதிகம் விற்பனையான எஸ்யூவி கார்களில் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை பின்னுக்கும் தள்ளிவிட்டது.

ஆகஸ்ட்டில் அதிகம் விற்பனையான டாப்-11 ஹூண்டாய் கார்கள் இவை தான்! லிஸ்ட் இதோ

இந்த வரிசையில் மூன்றாம் இடத்தை ஹூண்டாய் எலைட் ஐ20 மாடல் பிடித்துள்ளது. எப்போதும் அதிக யூனிட்கள் விற்பனையாகும் இந்த கார், 2019 ஆகஸ்ட்டில் 7,071 யூனிட்கள் விற்பனையானது. ஆனாலும் 2018 ஆகஸ்ட்டில் விற்பனையான 11,475 யூனிட்களை விட 38.38% குறைவுதான்.

ஆகஸ்ட்டில் அதிகம் விற்பனையான டாப்-11 ஹூண்டாய் கார்கள் இவை தான்! லிஸ்ட் இதோ

ஹூண்டாய் க்ரெட்டா இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. 6,001 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனையான இந்த மாடல் கார் தான் மிட்-சைஸ் எஸ்யூவிகளில் வாடிக்கையாளர்களில் மிகவும் பிடித்தமான மாடலாக இருந்தது. ஆனால் அதன்பின் ஹூண்டாய் நிறுவனம் இதற்கு போட்டியாளர்களாக புதிய கார்களை அறிமுகப்படுத்தியதால் க்ரெட்டா தனது விற்பனையை இழந்தது.

ஆகஸ்ட்டில் அதிகம் விற்பனையான டாப்-11 ஹூண்டாய் கார்கள் இவை தான்! லிஸ்ட் இதோ

ஹூண்டாய் சாண்ட்ரோ, இந்திய மார்கெட்டில் பிரபலமான ஹேட்ச்பேக் கொண்ட மாடல் கார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3,288 யூனிட்கள் பெற்று ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.

ஆகஸ்ட்டில் அதிகம் விற்பனையான டாப்-11 ஹூண்டாய் கார்கள் இவை தான்! லிஸ்ட் இதோ

இதற்கு அடுத்த ஐந்து இடங்களை முறையே வெர்னா, எக்ஸ்செண்ட், கோனா எலக்ட்ரிக், டூஸான், எலண்ட்ரா கார்கள் பிடித்துள்ளன. இதில் வெர்னா, இந்திய மார்கெட்டில் நல்ல விற்பனையான கார்களில் ஒன்றாகும். ஆகஸ்ட்டில் 1,597 யூனிட்கள் விற்பனையான இந்த கார், மாருதி சுசுகி சியாஸை 1 யூனிட்டில் விற்பனையில் முந்தியது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட்டில் அதிகம் விற்பனையான டாப்-11 ஹூண்டாய் கார்கள் இவை தான்! லிஸ்ட் இதோ

அடுத்ததாக உள்ள எக்ஸ்செண்ட் 2018 ஆகஸ்ட்டில் 4,981 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. ஆனால் இம்முறை வெறும் 1,316 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி கடந்த ஆண்டை காட்டிலும் 73.58 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஆகஸ்ட்டில் அதிகம் விற்பனையான டாப்-11 ஹூண்டாய் கார்கள் இவை தான்! லிஸ்ட் இதோ

அதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ள கோனா எலக்ட்ரிக் 88 யூனிட்களும் டஸ்கன் மற்றும் எலண்ட்ரா முறையே 58, 41 யூனிட்களும் விற்பனையாகி 9வது மற்றும் 10வது இடத்தை பிடித்துள்ளன. 2018 ஆகஸ்ட்டில் 3,916 யூனிட்கள் விற்பனையான ஹூண்டாய் இயான் கடந்த மாதத்தில் எந்தவொரு யூனிட்களும் விற்பனையாகாமல் 11வது இடத்தை பிடித்துள்ளது.

ஆகஸ்ட்டில் அதிகம் விற்பனையான டாப்-11 ஹூண்டாய் கார்கள் இவை தான்! லிஸ்ட் இதோ

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்திருந்தாலும், புதிய தயாரிப்புகளான வென்யூ மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் இந்திய மார்கெட்டில் தொடர்ந்து விற்பனையில் எழுச்சி முகமாகவே இருந்து வருகின்றன.

Most Read Articles
English summary
Hyundai Model-Wise Sales Report In India For August: Grand i10 & Venue Lead The Sales
Story first published: Thursday, September 26, 2019, 16:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X