உங்கள் பாதுகாப்பிற்கான சிறந்த கார் இதுதான்... எமனால்கூட சீண்ட முடியாது...

கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் ப்யூவல் எஸ்யூவி ரக கார், க்ராஷ் டெஷ்டில் சிறப்பு விருதினைப் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உங்கள் பாதுகாப்பிற்கான சிறந்த கார் இதுதான்... எமனால்கூட சீண்ட முடியாது...

டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார், கடந்த ஆண்டு நடைபெற்ற க்ராஷ் டெஸ்ட் பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று பாதுகாப்பு நிறைந்த கார் என்ற பட்டத்தைப் வென்றது. அதேசமயம், இந்த கார்தான் இந்தியாவில் தயாரான கார்களிலேயே முதல் பாதுகாப்பு நிறைந்த கார் என்ற புகழையும் பெற்றது.

உங்கள் பாதுகாப்பிற்கான சிறந்த கார் இதுதான்... எமனால்கூட சீண்ட முடியாது...

இதைத்தொடர்ந்து, பல நிறுவனங்களின் பாதுகாப்பு நிறைந்த கார்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் மிக விரைவில் இதேபோன்று பாதுகாப்பில் அதீத திறன்வாய்ந்த கார் ஒன்று களமிறக்கப்பட உள்ளது. அது, ஹூண்டாய் நிறுவனத்தின் நெக்ஸோ ப்யூவல் செல் ரக காராகும்.

உங்கள் பாதுகாப்பிற்கான சிறந்த கார் இதுதான்... எமனால்கூட சீண்ட முடியாது...

இந்த கார் அண்மையில் நடைபெற்ற க்ராஷ் டெஸ்டில் கூடுதல் மதிப்பெண்ணைப் பெற்று, ஐஐஎச்எஸ் (Insurance Institute for Highway Safety) எனும் அமைப்பின் சிறப்பு விருதை வென்றுள்ளது.

இந்த காரை இந்தியாவில் களமிறக்குவது குறித்த தகவலை ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்விட்டது.

உங்கள் பாதுகாப்பிற்கான சிறந்த கார் இதுதான்... எமனால்கூட சீண்ட முடியாது...

ஆகையால், இந்தியாவில் ஏற்கனவே விற்பனையாகிக் கொண்டிருக்கும், பல சிறப்பு வாய்ந்த கார்களுடன், அதீத திறன் வாய்ந்த ஹூண்டாய் நெக்ஸோ ப்யூவல் செல் காரும் விரைவில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உங்கள் பாதுகாப்பிற்கான சிறந்த கார் இதுதான்... எமனால்கூட சீண்ட முடியாது...

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த நெக்ஸோ ப்யூவல் செல் கார், தற்போது கலிஃபோர்னியாவில் மட்டும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த கார் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் திறன் கொண்ட காராகும்.

அதேசமயம், இத்தகைய எரிபொருளில் இயங்கும் காரை ஐஐஎச்எஸ் அமைப்பு க்ராஷ் டெஸ்ட் செய்வது இதுவே முதல்முறை.

உங்கள் பாதுகாப்பிற்கான சிறந்த கார் இதுதான்... எமனால்கூட சீண்ட முடியாது...

தற்போது, நடைபெற்றிருக்கும் பாதுகாப்பு பரிசோதனையில், நெக்ஸோ எஃப்சிவி கார், ஓட்டுநரின் பாதுகாப்பிற்கு சிறந்தது என்பதை நிரூபிக்கும் தேர்ச்சியைப் பெற்றுள்ளது. அந்தவகையில், டிரைவர் இருக்கை பகுதி முழுவதும் க்ராஷ் டெஸ்டில் நல்ல ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. அதேபோன்று, முன்பக்க பயணியின் இருக்கை பகுதியும் நல்ல ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.

மோதலின்போது, முன்பகுதிய கடுமையான சேதத்தைச் சந்தித்த போதும், காரின் உள் பகுதியில், மனித உருவத்தை ஒத்தவாறு வைக்கப்பட்டிருந்த டம்மிக்கு, பெருமளவில் சேதம் ஏற்படவில்லை. ஆகையால், இந்த கார் பயணத்தின்போது ஏற்படும் விபத்திலிருந்து ஓட்டுநர் உட்பட பயணிகளையும் பாதுகாக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உங்கள் பாதுகாப்பிற்கான சிறந்த கார் இதுதான்... எமனால்கூட சீண்ட முடியாது...

இத்துடன், காரின் மேற்கூரை மற்றும் பயணிகளின் தலை பகுதியின் பாதுகாப்பு குறித்த நடத்தப்பட்ட சோதனையிலும் நல்ல மதிப்பெண்ணை இந்த கார் பெற்றிருக்கின்றது. பாதுகாப்புகுறித்து நடத்தப்பட்ட இச்சோதனையில் எஸ்யூவி ரக நெக்ஸோ கார், நல்ல தேர்ச்சி விகிதத்தைப் பெற்று சிறப்பு வாய்ந்த கார்களில் ஒன்றாக மாறியுள்ளது.

உங்கள் பாதுகாப்பிற்கான சிறந்த கார் இதுதான்... எமனால்கூட சீண்ட முடியாது...

அதேபோன்று, நடத்தப்பட்ட ஆறு பரிசோதனையிலும் இந்த கார் நல்ல மதிப்பெண்களையேப் பெற்றிருக்கின்றது. இந்த தேர்ச்சியின் முடிவால் ஹூண்டாய் நிறுவனத்திற்கு நற்புகழ் சேர்ந்துள்ளது.

மேலும், கூடுதல் பாதுகாப்பு திறனிற்காக ஐஐஎச்எஸ் அமைப்பு வழங்கும் டாப் சேஃப்டி பிக்+ (Top Safety Pick+) என்ற சிறப்பு விருதையும் அந்த கார் பெற்றிருக்கின்றது.

உங்கள் பாதுகாப்பிற்கான சிறந்த கார் இதுதான்... எமனால்கூட சீண்ட முடியாது...

இந்த காரில் சிறப்பு பாதுகாப்பு அம்சமாக பல்வேறு தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில், மிக முக்கியமானதாகவும், புதிய தொழில்நுட்பமாகவும் ஹை பீம் அசிஸ்ட் உள்ளது. இது, தேவைப்படும் நேரத்தில், லோ மற்றும் ஹை பீம் நிலைக்கு தானாக மாற்றிக்கொள்ளும் திறன் வாய்ந்தது.

உங்கள் பாதுகாப்பிற்கான சிறந்த கார் இதுதான்... எமனால்கூட சீண்ட முடியாது...

இதுகுறித்து அமெரிக்காவிற்கான ஹூண்டாய் நிறுவனத்தின் கார் உற்பத்தி இயக்குநர் கூறியதாவது, "ஹூண்டாய் நிறுவனமும், அதன் பொறியாளர் குழுவும் பாதுகாப்பு நிறைந்த கார்களை உற்பத்தி செய்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதற்காக, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்வதிலும், அதனை உற்பத்தி செய்வதிலும் எங்கள் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றோம்" என்றார்.

உங்கள் பாதுகாப்பிற்கான சிறந்த கார் இதுதான்... எமனால்கூட சீண்ட முடியாது...

மேலும் பேசிய அவர், நெக்ஸோ பெற்றிருக்கும் இந்த சிறப்பு விருது எங்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்தார்.

உங்கள் பாதுகாப்பிற்கான சிறந்த கார் இதுதான்... எமனால்கூட சீண்ட முடியாது...

தற்போது, கலிஃபோரினியாவில் விற்பனைச் செய்யப்பட்டு வரும், விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். ஆனால், அது இந்தியாவில் களமிறங்கும்போது, உள்நாட்டு சந்தைக்கு ஏற்ற சிறப்பம்சங்களைப் பெற்றவாறு களமிறக்கப்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உங்கள் பாதுகாப்பிற்கான சிறந்த கார் இதுதான்... எமனால்கூட சீண்ட முடியாது...

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஹூண்டாய் தரப்பில் அறிவிக்கப்படவில்லை. அது கூடிய விரைவில் வெளியிடப்பலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Hyundai Nexo Fuel Cell Gets Top Safety Pick+ Award. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X