அடேங்கப்பா... 1,000 கிமீ ரேஞ்ச்... ஹைட்ரஜனில் இயங்கும் காரை இந்தியாவில் களமிறக்கும் ஹூண்டாய்!

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அடேங்கப்பா... 1,000 கிமீ ரேஞ்ச்... ஹைட்ரஜனில் இயங்கும் காரை இந்தியாவில் கலமிறக்கும் ஹூண்டாய்!

பெட்ரோல், டீசல் கார்கள் வெளியிடும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதத்தில், புகை அற்ற மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களை உருவாக்கும் முயற்சிகளில் வாகன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. பேட்டரியில் இயங்கும் கார்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கார்கள் சிறந்த மாற்றாக கருதப்படுகிறது.

அடேங்கப்பா... 1,000 கிமீ ரேஞ்ச்... ஹைட்ரஜனில் இயங்கும் காரை இந்தியாவில் கலமிறக்கும் ஹூண்டாய்!

இந்தநிலையில், பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் கார்கள் பாதுகாப்பானதாகவும், சிறந்த மாற்று தீர்வாகவும் கருதப்படுகிறது. இதனால், பல முன்னணி கார் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளன.

அடேங்கப்பா... 1,000 கிமீ ரேஞ்ச்... ஹைட்ரஜனில் இயங்கும் காரை இந்தியாவில் கலமிறக்கும் ஹூண்டாய்!

ஹூண்டாய் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக கோனா எஸ்யூவியை நேற்றுமுன்தினம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டது. அடுத்தடுத்து, இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதற்கு ரூ.1,400 கோடியை முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

அடேங்கப்பா... 1,000 கிமீ ரேஞ்ச்... ஹைட்ரஜனில் இயங்கும் காரை இந்தியாவில் கலமிறக்கும் ஹூண்டாய்!

இது ஒருபுறம் இருக்க, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கார்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த கொரிய வர்த்தக மாநாட்டில் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியுடன் நெக்ஸோ என்ற ஹைட்ரஜனில் இயங்கும் காரும் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

அடேங்கப்பா... 1,000 கிமீ ரேஞ்ச்... ஹைட்ரஜனில் இயங்கும் காரை இந்தியாவில் கலமிறக்கும் ஹூண்டாய்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான திட்டம் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திடம் உள்ளதாக மணிகன்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. வரும் 2021ம் ஆண்டு இந்த புதிய ஹைட்ரஜன் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அடேங்கப்பா... 1,000 கிமீ ரேஞ்ச்... ஹைட்ரஜனில் இயங்கும் காரை இந்தியாவில் கலமிறக்கும் ஹூண்டாய்!

ஹூண்டாய் நெக்ஸோ ஹைட்ரஜன் காரும் எஸ்யூவி ரகத்தை சேர்ந்ததுதான். இந்த காரில் 95kW ஹைட்ரஜன் ஃப்யூவல்செல் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், இதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் 40kW பேட்டரியில் சேமிக்கப்பட்டு மின் மோட்டாருக்கு அளிக்கப்படும். இந்த காரின் மின் மோட்டார் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரையும், 396 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

அடேங்கப்பா... 1,000 கிமீ ரேஞ்ச்... ஹைட்ரஜனில் இயங்கும் காரை இந்தியாவில் கலமிறக்கும் ஹூண்டாய்!

புதிய ஹூண்டாய் நெக்ஸோ ஹைட்ரஜன் கார் 0 - 100 கிமீ வேகத்தை 9.2 வினாடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு 179 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இதைவிட முக்கியமான விஷயம், ஒருமுறை ஹைட்ரஜன் எரிபொருளை நிரப்பினால் 1,000 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம்.

அடேங்கப்பா... 1,000 கிமீ ரேஞ்ச்... ஹைட்ரஜனில் இயங்கும் காரை இந்தியாவில் கலமிறக்கும் ஹூண்டாய்!

எனவே, மின்சார கார்களைவிட மிகச் சிறந்த மாற்றுத் தீர்வாக பார்க்கப்படுகிறது. இது மின்சார கார்களைவிட துளியும் மாசு உமிழ்வு இல்லாத மாடலாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா... 1,000 கிமீ ரேஞ்ச்... ஹைட்ரஜனில் இயங்கும் காரை இந்தியாவில் கலமிறக்கும் ஹூண்டாய்!

மாற்று எரிபொருள் கார்களை ஊக்குவிக்கும் விதத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி, ஹைட்ரஜன் கார்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, ஹைட்ரஜனில் இயங்கும் கார்கள் வருகை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
South Korean car maker, Hyundai is planning to launch the Hydrogen-powered Nexo SUV in India by 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X