மாருதி சுஸுகியை வீழ்த்த வரிந்து கட்டி கொண்டு களமிறங்கிய ஹூண்டாய்... செய்யப்போவது இதைதான்...

இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தை வீழ்த்த ஹூண்டாய் நிறுவனம் வரிந்து கட்டி கொண்டு களமிறங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகியை வீழ்த்த வரிந்து கட்டி கொண்டு களமிறங்கிய ஹூண்டாய்... செய்யப்போவது இதைதான்...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வெனியூ (Hyundai Venue) எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் தயாராகி வருகிறது. வரும் மே 21ம் தேதியன்று, ஹூண்டாய் வெனியூ கார் இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் ஆகும்.

மாருதி சுஸுகியை வீழ்த்த வரிந்து கட்டி கொண்டு களமிறங்கிய ஹூண்டாய்... செய்யப்போவது இதைதான்...

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடன், மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட மாடல்களுடன் ஹூண்டாய் வெனியூ போட்டியிடவுள்ளது. இந்தியாவின் சப்-4 மீட்டர் எஸ்யூவி செக்மெண்ட்டில், கார்கள் விற்பனை அமோகமாக உள்ளது.

மாருதி சுஸுகியை வீழ்த்த வரிந்து கட்டி கொண்டு களமிறங்கிய ஹூண்டாய்... செய்யப்போவது இதைதான்...

இந்த செக்மெண்ட்டில் ஒரு மாதத்திற்கு, 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான எண்ணிக்கையில் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன் இது மிகவும் போட்டி நிறைந்த செக்மெண்ட் ஆகவும் உள்ளது. இந்த செக்மெண்ட்டில் முதலிடத்தில் இருப்பது மாருதி பிரெஸ்ஸாதான். ஒரு மாதத்திற்கு சராசரியாக 15 ஆயிரம் பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்து வருகிறது.

மாருதி சுஸுகியை வீழ்த்த வரிந்து கட்டி கொண்டு களமிறங்கிய ஹூண்டாய்... செய்யப்போவது இதைதான்...

அடுத்த இடத்தில் 5 ஆயிரம் யூனிட்கள் விற்பனை என்ற எண்ணிக்கையுடன் டாடா நெக்ஸான் உள்ளது. 3வது இடத்தில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளது. எக்ஸ்யூவி300 காரை மஹிந்திரா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது ஒரு மாதத்திற்கு சராசரியாக 4 ஆயிரம் எக்ஸ்யூவி 300 கார்களை மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது.

மாருதி சுஸுகியை வீழ்த்த வரிந்து கட்டி கொண்டு களமிறங்கிய ஹூண்டாய்... செய்யப்போவது இதைதான்...

இதற்கு அடுத்த இடத்தில், மாதத்திற்கு சராசரியாக 3 ஆயிரம் யூனிட்கள் என்ற விற்பனையுடன் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளது. இந்த சூழலில் ஹூண்டாய் நிறுவனம் வெனியூ காருடன் தற்போது இந்த செக்மெண்ட்டில் நுழையவுள்ளது. சென்னையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் தொழிற்சாலையில், வெனியூ காரின் உற்பத்தி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது.

மாருதி சுஸுகியை வீழ்த்த வரிந்து கட்டி கொண்டு களமிறங்கிய ஹூண்டாய்... செய்யப்போவது இதைதான்...

வெனியூ கார்களின் டெலிவரியை ஹூண்டாய் நிறுவனம் வரும் மே 21ம் தேதியன்றே தொடங்கவுள்ளது. அதாவது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தினத்தன்றே டெலிவரி தொடங்கப்படும். ஒரு மாதத்திற்கு சராசரியாக 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வெனியூ கார்களை விற்பனை செய்ய வேண்டும் என ஹூண்டாய் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

மாருதி சுஸுகியை வீழ்த்த வரிந்து கட்டி கொண்டு களமிறங்கிய ஹூண்டாய்... செய்யப்போவது இதைதான்...

இந்த எண்ணிக்கை எங்கிருந்து வரும்? என்ற கேள்வி எழுவது இயல்பே. ஹூண்டாய் வெனியூ கார், இந்த செக்மெண்ட்டில் உடனடியாக புதிய கூடுதல் வாடிக்கையாளர்களை பெறப்போவதில்லை. அதற்கு பதிலாக போட்டி நிறுவனங்களின் கார்கள் விற்பனையை ஹூண்டாய் வெனியூ சாப்பிட போகிறது. அதாவது இந்த செக்மெண்ட்டில் வேறு கார்களை வாங்க முடிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் வெனியூ பக்கம் திரும்பலாம்.

மாருதி சுஸுகியை வீழ்த்த வரிந்து கட்டி கொண்டு களமிறங்கிய ஹூண்டாய்... செய்யப்போவது இதைதான்...

இதுதவிர ஹூண்டாய் நிறுவனத்தின் எஸ்யூவி ரக காரான கிரெட்டாவின் விற்பனையையும் சேர்த்தே சாப்பிட உள்ளது வெனியூ. கிரெட்டா மற்றும் வெனியூ ஆகிய இரண்டு கார்களையும் சேர்த்து, ஒரு மாதத்திற்கு சராசரியாக 20 ஆயிரம் யூனிட்களை விற்பனை என்ற இலக்கை எட்ட வேண்டும் என ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது கிரெட்டா 10 ஆயிரம். வெனியூ 10 ஆயிரம்.

மாருதி சுஸுகியை வீழ்த்த வரிந்து கட்டி கொண்டு களமிறங்கிய ஹூண்டாய்... செய்யப்போவது இதைதான்...

திட்டமிட்டபடி அனைத்து சரியாக நடந்தால், இந்தியாவின் மிகப்பெரிய எஸ்யூவி உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை ஹூண்டாய் பெறும். தற்போது இந்த பட்டம் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்திடம் உள்ளது. இதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் பிரெஸ்ஸாவிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். ஒருவேளை கிரெட்டா மற்றும் வெனியூ மூலம் ஒரு மாதத்திற்கு சராசரியாக 20 ஆயிரம் யூனிட்கள் என்ற விற்பனை இலக்கை எட்ட முடியாமல் போனாலும் கூட, இந்தியாவின் மிகப்பெரிய எஸ்யூவி உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை ஹூண்டாய் அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும்.

மாருதி சுஸுகியை வீழ்த்த வரிந்து கட்டி கொண்டு களமிறங்கிய ஹூண்டாய்... செய்யப்போவது இதைதான்...

இதற்கு வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டீசல் கார்களின் உற்பத்தியை நிறுத்தி விட மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தி விட முடிவு செய்திருப்பதற்குதான் நன்றி சொல்ல வேண்டும். தற்போதைய நிலையில் மாருதி பிரெஸ்ஸா கார் டீசல் இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் டீசல் கார்களின் உற்பத்தியை நிறுத்தி விட மாருதி சுஸுகி முடிவு செய்துள்ளது.

மாருதி சுஸுகியை வீழ்த்த வரிந்து கட்டி கொண்டு களமிறங்கிய ஹூண்டாய்... செய்யப்போவது இதைதான்...

எனவே பிரெஸ்ஸா காரின் பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகம் செய்தாக வேண்டிய சூழலில் மாருதி சுஸுகி நிறுவனம் உள்ளது. ஆனால் டீசல் பிரெஸ்ஸா அளவிற்கு பெட்ரோல் பிரெஸ்ஸா விற்பனையில் சோபிக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை. அதே சமயம் ஹூண்டாய் வெனியூ கார் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரவுள்ளது. அதாவது ஹூண்டாய் வெனியூ காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் என மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன.

Most Read Articles
English summary
Hyundai Plans To Become Largest SUV Maker In India With The Help Of Creta And Venue. Read in Tamil
Story first published: Monday, April 29, 2019, 21:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X