ஹூண்டாய் பிஎஸ்-6 கார்கள் அறிமுகம் எப்போது? - முக்கியத் தகவல் வெளியீடு!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரமுடைய கார்களை அறிமுகம் செய்வது குறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் பிஎஸ்-6 கார்கள் அறிமுகம் எப்போது? - முக்கியத் தகவல் வெளியீடு!

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் வர இருக்கும் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு தக்கவாறு எஞ்சின்களை மேம்படுத்துவதிலும், புதிய எஞ்சின்களை தயாரிப்பதிலும் வாகன நிறுவனங்கள் தீவிரமாக களமிறங்கி உள்ளன. கார், பைக் நிறுவனங்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகரான எஞ்சின்களுடன் புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன.

ஹூண்டாய் பிஎஸ்-6 கார்கள் அறிமுகம் எப்போது? - முக்கியத் தகவல் வெளியீடு!

மாருதி உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகரான பெட்ரோல் கார் மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வருகின்றன. நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகரான முதல் மாடலாக புதிய க்ராண்ட் ஐ10 நியோஸ் பெட்ரோல் மாடலை அண்மையில் அறிமுகம் செய்தது.

ஹூண்டாய் பிஎஸ்-6 கார்கள் அறிமுகம் எப்போது? - முக்கியத் தகவல் வெளியீடு!

ஆனால், அந்த காரில் இருக்கும் டீசல் எஞ்சின் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாகவே இருக்கிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகரான புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் பிஎஸ்-6 கார்கள் அறிமுகம் எப்போது? - முக்கியத் தகவல் வெளியீடு!

அதுமட்டுமில்லாமல், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான டீசல் மாடல்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மாருதி நிறுவனம் சிறிய ரக டீசல் கார் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், ஹூண்டாய் நிறுவனம் சிறிய ரக கார்களிலும் டீசல் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

MOST READ: புதிய வரலாறு படைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... மக்கள் அமோக வரவேற்பு... என்னவென்று தெரியுமா?

ஹூண்டாய் பிஎஸ்-6 கார்கள் அறிமுகம் எப்போது? - முக்கியத் தகவல் வெளியீடு!

மேலும், ஹூண்டாய் எலைட் ஐ20, வெனியூ, வெர்னா, க்ரெட்டா உள்ளிட்ட கார்களில் புதிய பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளை ஹூண்டாய் மோட்டார்ஸ் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட கியா செல்டோஸ் காரில் இருக்கும் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் மேற்கண்ட கார்களிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது.

MOST READ: மறைத்து வைத்திருந்த ரகசியம் வெளியானது... 7 கோடி ரூபாய் காரை வாங்கிய பிரபல நடிகர்... யார் தெரியுமா?

ஹூண்டாய் பிஎஸ்-6 கார்கள் அறிமுகம் எப்போது? - முக்கியத் தகவல் வெளியீடு!

அதாவது, கியா செல்டோஸ் காரில் இருக்கும் பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாகவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. மேலும், கியா செல்டோஸ் காரின் இந்த எஞ்சின்கள் பிஎஸ்-4 தரத்திற்கு இணையான பெட்ரோல், டீசல் எரிபொருளில் வைத்து ஒரு லட்சம் கிமீ தூரம் வரை சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இது வெற்றிகரமாக அமைந்தன.

MOST READ: கார் வாங்கலியோ கார்... கூவி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மாருதி!

ஹூண்டாய் பிஎஸ்-6 கார்கள் அறிமுகம் எப்போது? - முக்கியத் தகவல் வெளியீடு!

இதையடுத்து, கியா செல்டோஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் ஹூண்டாய் கார்களிலும் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இந்த எஞ்சின்கள் கியா செல்டோஸ் காரில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், ஹூண்டாய் கார் வாங்க இருப்போரின் ஆவலையும் தூண்டுவதாக அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய எஞ்சின் ஆப்ஷன்களுடன் ஹூண்டாய் கார்களை எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
South Korean based auto manufacturer Hyundai has announced plans to start launching BS-VI compliant models for all trims, including diesel variants on a regular basis. The company says they want to start offering these models by early next year.
Story first published: Wednesday, August 28, 2019, 10:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X