180 குதிரை திறன் கொண்ட ஹூண்டாயின் புதிய சொனாட்டா கார் அறிமுகம்!

பட்ஜெட் ரக கார் தயாரிப்பில் முதன்மை வகிக்கும் ஹூண்டாய் நிறுவனம், தனது புத்தம் புதிய சக்தி வாய்ந்த சொனாட்டா காரை சியோலில் நடைபெற்று வரும் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது.

180 குதிரை திறன் கொண்ட ஹூண்டாயின் புதிய சொனாட்டா கார் அறிமுகம்!

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் 2019ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 29ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி வருகின்ற ஏப்ரல் மாதம் 7ம் தேதி வரை நடைபெறும் என இதனை ஒருங்கிணைத்து நடத்திவரும் குழு தெரிவித்துள்ளது. இந்த கண்காட்சியில் பாஸஞ்சர் கார், இலகு மற்றும் கன ரக வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

180 குதிரை திறன் கொண்ட ஹூண்டாயின் புதிய சொனாட்டா கார் அறிமுகம்!

இந்த கண்காட்சியில், ஹூண்டாய் நிறுவனம் தனது புத்தம் புதிய சொனாட்டா என்ற சக்தி வாய்ந்த ஹைபிரிட் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரில் 1.6 டர்போசார்ஜட் ஸ்மார்ட் ஸ்ட்ரீம் ஜி1.6 டி-ஜிடிஐ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 180 குதிரையின் ஓடும் திறனை வழங்கக்கூடியது. மேலும், இந்த எஞ்ஜினில் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது செடான் காரில் பயணிப்பவர்களுக்கு மென்மையான பயண அனுபவத்தை வழங்கும்.

180 குதிரை திறன் கொண்ட ஹூண்டாயின் புதிய சொனாட்டா கார் அறிமுகம்!

இந்த புத்தம் புதிய ஹைபிரிட் காரின் வெளித்தோற்றத்தை அலங்கரிக்கும் விதமாக, அதன் முகப்பு பக்கத்தில் ஹூண்டாயின் பாராமெட்ரிக் அணிகலன் கிரில் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த கிரில் அமைப்பில் தான் நம்பர் பிளேட்டிற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் பிரீமியம் எக்ஸ்கியூடிவ் செடான் லுக்கை ரம்மியாக காட்சிப்படுத்துகிறது.

180 குதிரை திறன் கொண்ட ஹூண்டாயின் புதிய சொனாட்டா கார் அறிமுகம்!

இதேபோன்று காரின் முகப்பு பக்கத்தில் இரு பக்கத்திலும் காருக்குள் காற்று நுழையும் விதமாக ஏர் வெண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது காரின் பம்பர் மற்றும் டயர் வரை காற்றை கடத்தும் வகையில் அமைந்துள்ளது. இதன் பின்புறத்தில் வளைவு வடிவிலான ஸ்பாய்லர் மற்றும் யூனிக் பம்பருடன் இரட்டை குழல் கொண்ட சைலென்சர் பொருத்தப்பட்டுள்ளது.

180 குதிரை திறன் கொண்ட ஹூண்டாயின் புதிய சொனாட்டா கார் அறிமுகம்!

தற்போது அறிமுகமாகியிருக்கும் சொனாட்டா காரை முந்தைய தலைமுறை சொனாட்டாவுடன் ஒப்பிட்டு பார்த்தால் புதிய சொனாட்டா 35 மிமீ நீளமான வீல்பேஸைக் கொண்டிருக்கிறது. மேலும், அதன் நீளம் 45 மிமீ-ஆகவும், அகலம் 25 மி.மீட்டராகவும் இருக்கிறது. இதேபோன்று காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 30 மில்லிமீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு காரின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் பார்த்தோமானால் கூபோ ரகத்தில் காட்சியளிக்கிறது.

180 குதிரை திறன் கொண்ட ஹூண்டாயின் புதிய சொனாட்டா கார் அறிமுகம்!

இந்த புத்தம் புதிய சொனாட்டா காரில், தாழ்த்தப்பட்ட ரூஃப்லைன் மற்றும் அதிகரிக்கப்பட்ட லெக்ரூம் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் தொழில்நுட்ப வசதியாக டிஜிட்டல் கீ, வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

180 குதிரை திறன் கொண்ட ஹூண்டாயின் புதிய சொனாட்டா கார் அறிமுகம்!

மேலும், 45 பாகங்களைத் தேவைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, லைட்வெயிட்டட் போர்ஜ்ட் வீல், பெரிய பிரேக் கேளிபர், பிரேக்குகள் பேட்டுகள், கார்பன்-பைபர் பக்கவாட்டு ஸ்கர்ட், டிஃப்யூஸர், பெர்ஃபார்மன்ஸ்-ஸ்பெக் சஸ்பென்ஷன் சிஸ்டம் மற்றும் டையர் உள்ளிட்டவை அதில் அடங்கும்.

180 குதிரை திறன் கொண்ட ஹூண்டாயின் புதிய சொனாட்டா கார் அறிமுகம்!

இந்த புதிய தலைமுறை சொனாட்டா கார் ஸ்போர்ட்ஸ் ரகத்தில் பிளெண்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனாலயே, கார் கண்காட்சிக்கு பெரும்பாலானோரை இந்த கார் வெகுவாக கவர்ந்து இழுத்தது. இந்த காரின் விலை மற்றும் விற்பனை குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. இந்த புத்தம் புதிய ஹூண்டாயின் சொனாட்டா கார் இந்திய கார் சந்தைக்கு 2020ம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hyundai Revealed New Sonata car at Seoul Motor Show. Read In Tamil.
Story first published: Saturday, March 30, 2019, 18:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X