விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

விற்பனை சரிவடைந்து வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் வாகன மார்க்கெட் சமீப காலமாக மிகவும் சவாலான ஒரு சூழலை எதிர்கொண்டு வருகிறது. நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் என அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக மிகவும் கடுமையாக சரிவடைந்து வருகின்றன. கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நிறுவனங்களின் நிலையும் தற்போது இவ்வாறுதான் உள்ளது.

விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

ஹூண்டாயும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் ஹூண்டாய் நிறுவனம் உள் நாட்டில் 42,007 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 45,314 ஆக இருந்தது. அதாவது ஹூண்டாய் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 7.3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

மறுபக்கம் ஹூண்டாய் நிறுவனத்தின் ஏற்றுமதி 16,800 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது 9 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த ஜூன் மாதம் ஹூண்டாய் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை (உள்நாடு + ஏற்றுமதி) எண்ணிக்கை 58,807 யூனிட்கள் மட்டுமே. இது கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.2 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

கார்கள் விற்பனை சரிவடைந்து வரும் சூழலில், விலை உயர்வு குறித்த அறிவிப்பை ஹூண்டாய் அதிரடியாக வெளியிட்டுள்ளது. இதன்படி ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் விலை வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் உயரவுள்ளன. இந்தியாவில் ஹூண்டாய் விற்பனை செய்து வரும் அனைத்து கார்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும்.

விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

வாகனத்தின் மாடலை பொறுத்து 9,200 ரூபாய் வரை விலை உயரவுள்ளது. குறிப்பிட்ட ஒரு சில பாதுகாப்பு வசதிகள் கார்களில் இடம்பெற வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசு இதுபோன்ற அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

இதனால் கார்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. அதனை ஈடுகட்டும் விதமாகதான் ஹூண்டாய் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஹூண்டாய் நிறுவன கார்களின் விற்பனை சரிவடைந்து வருகிறதுதான். ஆனால் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த 2 கார்களுக்கு வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பனை வாரி வழங்கி வருகின்றனர்.

விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

இதில், முதலாவது கார் ஹூண்டாய் வெனியூ. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காரான ஹூண்டாய் வெனியூ கடந்த மே மாதம் 21ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஹூண்டாய் வெனியூ காருக்கு 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இதன் மூலம் போட்டியாளர்களான மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுக்கு மிக கடுமையான சவாலை வழங்கி வருகிறது ஹூண்டாய் வெனியூ.

விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மற்றொரு கார் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி. சமீபத்தில்தான் ஹூண்டாய் கோனா விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வெறும் 10 நாட்களில் 120 முன்பதிவுகளை ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றுள்ளது. விலை உயர்ந்த ஒரு எலெக்ட்ரிக் காருக்கு இவ்வளவு முன்பதிவுகள் குவிந்திருப்பது உண்மையில் ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 23, 2019, 20:23 [IST]
English summary
Hyundai To Hike Car Prices By Up To Rs.9,200 From August. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+