ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் சிஎன்ஜி மாடல் விரைவில் அறிமுகமாகிறது!
ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் விரைவில் சிஎன்ஜியில் இயங்கும் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வந்துள்ளது.

இந்த நிலையில், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் வகையிலான, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

சாதாரண க்ராண்ட் ஐ10 காரில் மேக்னா என்ற வேரியண்ட்டில் மட்டுமே சிஎன்ஜி மாடல் கிடைக்கிறது. அதேபோன்றே, புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் சிஎன்ஜி மாடலானது மேக்னா என்ற நடுத்தர விலையுடைய வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிகிறது.

மேலும், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் சிஎன்ஜி மாடலில் இடம்பெர இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த எஞ்சின் சாதாரண பெட்ரோல் மாடலில் 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆனால், சிஎன்ஜி மாடலில் இதன் திறன் வெளிப்படுத்தும் திறன் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. சிஎன்ஜி மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த காரில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், மல்டி இன்ஃபர்மேஷன் திரை, 8 அங்குல இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம், வாய்ஸ் ரெககனிஷன் தொழில்நுட்பம், ஐ-புளூ ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன், வயர்லெஸ் போன் சார்ஜர், அர்கமிஸ் பிரிமீயம் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களை பெற்றிருக்கின்றது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் ரூ.4.99 லட்சத்தில் இருந்து ரூ.7.99 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. இந்த கார் சிஎன்ஜி மாடலில் வரும்போது அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான மாசு உமிழ்வு திறனை பெற்றிருக்கும் என்பதாால், வாடிக்கையாளர்களை கவரும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications