பவர்ஃபுல்லான ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் பெர்ஃபார்மென்ஸ் மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. படங்களையும், அதன் விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

பவர்ஃபுல்லான ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!

செயல்திறன் மிக்க கார் மாடல்களை N பிராண்டில் அறிமுகப்படுத்தி வருகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள ஐ30 காரின் அடிப்படையிலான செயல்திறன் மிக்க மாடலை ஹூண்டாய் ஏற்கனவே வெளியிட்டது. அந்த வரிசையில், தற்போது டூஸான் எஸ்யூவியின் செயல்திறன் மிக்க மாடலை வெளியிட்டு இருக்கிறது.

பவர்ஃபுல்லான ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!

ஹூண்டாய் டூஸான் என் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த மாடலில் ரேஸ் கார்கள் போன்று ஏராளமான சிறப்பு ஆக்சஸெரீகள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய க்ரில் அமைப்பு, பம்பர் ஆகியவற்றுடன் வசீகரமான 19 அங்குலத்தில் கருப்பு வண்ண அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கூரையும் கருப்பு வண்ணத்தில் இடம்பெற்றுள்ளது.

பவர்ஃபுல்லான ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!

புதிய ரூஃப் ஸ்பாய்லர், சைடு மிரர்கள் ஆகியவையும் கருப்பு வண்ணத்தில் இடம்பெற்றுள்ளன. பம்பர்களும், எல்இடி விளக்குகளும் இந்த காரின் மதிப்பை உயர்த்தும் விஷயங்களாக கூறலாம். இருக்கைகளில் சிறப்பு தையல் வேலைப்பாடுகள், கலப்பு உலோகத்தாலான பெடல்கள் மற்றும் என் பேட்ஜ் என்று வசீகரிக்கிறது.

பவர்ஃபுல்லான ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!

மேலும், இந்த கார் ஒரு பெட்ரோல் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட இரண்டு டீசல் மாடல்களில் வர இருக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் 172 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் 134 பிஎச்பி பவரையும், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 182 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் வாயந்தவை.

பவர்ஃபுல்லான ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!

இந்த செயல்திறன் மிக்க டூஸான் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் தேர்வுக்கு வழங்கப்படுகின்றன. 2 வீல் டிரைவ் அல்லது 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட தேர்வுகளிலும் வர இருக்கிறது.

பவர்ஃபுல்லான ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!

இதுதவிரவும், 340 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட சக்திவாய்ந்த டூஸான் மாடலையும் என் பிராண்டில் ஹூண்டாய் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது டூஸான் எஸ்யூவியின் மதிப்பை மேலும் ஒரு படி உயர்த்தும் விஷயமாக இருக்கும்.

பவர்ஃபுல்லான ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்!

இந்த ஆண்டு இறுதியில் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆனால், இந்த என் வரிசையிலான டூஸான் மாடல்கள் இந்தியாவில் உடனடியாக அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இல்லை. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் என் பிராண்டு கார்களை இந்தியாவிலும் ஹூண்டாய் மோட்டார்ஸ் அறிமுகம் செய்யும் என்று நம்பலாம்.

Most Read Articles

English summary
Hyundai Tucson N Line High Performance SUV revealed.
Story first published: Monday, April 1, 2019, 12:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X