"மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்" - ஜெயதலலிதா பாணியில் ஹூண்டாய் அதிரடி...

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஹூண்டாய் எடுத்த அதிரடி முடிவால் மிகப் பெரிய பலனை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் தாரக மந்திரங்களில் ஒன்று "மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்". இது, ஏழை எளிய மக்களுக்காக அவர் அற்பணிக்கப்பட்ட வாழ்க்கையை வெளிக்காட்டும் வகையில் இருக்கின்றது.

இதேபோன்று, ஓர் வாகன உற்பத்தி நிறுவனமும் மக்களின் தேவையை உணர்ந்து செயல்படுவது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து தரப்பு மக்களையும் கவர்கின்ற வகையில் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வரும் ஹூண்டாய் நிறுவனம். இந்நிறுவனம், மிகவும் மலிவான விலையில் வெனியூ எஸ்யூவி ரக காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்நிலையில், மக்களின் மிகப் பெரிய தேவைகளில் ஒன்றான குடிநீர் பற்றாக்குறைக் கருத்தில் கொண்டு, அண்மையில் நடத்திய ஸ்பெஷல் சர்வீஸ் கேம்பில் டிரை வாஷ் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதனால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் சேகரிப்பு செய்யப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் மிகப் பெரிய பிரச்னைகளில் தலையாய பிரச்னையாக தண்ணீர் பற்றாக்குறை மாறியுள்ளது. இது நாட்டின் ஏதோ ஒரு மூலைக்கு மட்டும் நிலவு கூடிய ஓர் பிரச்னை அல்ல. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் சந்தித்து வரக்கூடிய மிகப்பெரிய பிரச்னையாகும்.

குறிப்பாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் இது தலை விரித்தாடிக் கொண்டிருக்கின்றது.

இந்த சூழ்நிலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முக்கியமாக நீர் மேலாண்மை குறித்த திட்டமிடல் போதுமானதாக இல்லாததே மிக முக்கியமானதாக காட்சியளிக்கின்றது.

ஆகையால், கடந்த காலங்களின் நீர் பற்றாக்குறையில் பாடம் கற்றுக் கொண்ட அரசு தற்போது, மழை நீர் சேகரிப்பு மற்றும் தண்ணீர் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வாகன உற்பத்தியில் தலைசிறந்து செயல்படும் நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் தண்ணீர் பற்றாக் குறை மனதில் கொண்டு சிறப்பு நடவடிக்கை எடுத்து, பல லட்சம் நீரை சேமித்திருப்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

இதன்காரணமாகவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாரக மந்திரத்துடன் ஒப்பிட்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளோம்.

MOST READ: ஃபாஸ்ட் டேக்கின் உதவியால் காணாமல்போன கார் 5 மணி நேரத்தில் கண்டுபிடிப்பு... எப்படி தெரியுமா..?

மேலும், ஹூண்டாய் நிறுவனத்தின் சிறப்பான முயற்சியால் இதுவரை 33 லட்சம் லிட்டர் நீர் சேகரிக்கப்பட்டிருப்பதாக தகவல் கூறப்படுகின்றது.

இத்தகைய நீர் சேகரிப்பை ஹூண்டாய் நிறுவனம் டிரை வாஷ் திட்டத்தின்மூலம் செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

MOST READ: ஜனாதிபதி வந்த நேரத்தில் பழுதாகி நின்ற லாரி... போலீஸ் செய்த காரியம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

முன்னதாக, சென்னையைக் கோட்டையாகக் கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டு நிறுவனமும் இத்தகைய பிரத்யேக நடவடிக்கையைக் கையிலெடுப்பதாக அறிவித்திருந்தது. அப்போது, சென்னை மிகப் பெரிய தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

MOST READ: மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

டிரை வாஷ் என்பது தண்ணீரல்லாமல் கெமிக்கல் ஃபோம் மூலம் செய்யப்படும் கிளீனிங் முறையாகும். இது, சந்தையில் மிக எளிதில் கிடைக்கக் கூடிய ஓர் வேதிப் பொருள். இதனை பயன்படுத்துவதன் மூலம் வாகனத்திற்கோ அல்லது வாகனத்தின் நிறத்திற்கோ எந்த பின்விளைவும் ஏற்படாது. மேலும், தண்ணீர் மூலம் கழுவினால் கிடைக்கக்கூடிய அதே சுத்தம் டிரை வாஷ் முறையிலும் கிடைக்கும்.

மேலும், வாகனத்தைச் சுத்தம் செய்ய பல லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றால், இந்த டிரை வாஷ் ஃபோம் 500 மில்லி லிட்டரே அதிகம் என கூறுகின்றனர் வாகன துறை வல்லுநர்கள். அதேசமயம், நீரால் சுத்தம் செய்வதைக் காட்டிலும் அதிக பளபளப்பு மற்றும் மினு மினுப்பும் இந்த டிரை வாஷ் முறையில் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தையும் அவர்கள் அளிக்கின்றனர்.

ஆகையால், ஹூண்டாய் நிறுவனம் அண்மையில் நடத்திய இலவச கார் பராமரிப்பு கிளினிக் திட்டத்தில் டிரை வாஷ் முறையை பயன்படுத்தியது. இது அந்த நிறுவனத்தின்மூலம் நடத்தப்படும் 29 முறை கேம்ப் ஆகும்.

டிசம்பர் 15ம் தேதி தொடங்கிய இந்த கேம்ப் 10 நாட்கள் நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக இந்த சிறப்பு கேம்பின் மூலம் 27,677 கார்கள் சர்வீஸ் செய்யப்பட்டன. அவையனைத்தும் டிரை வாஷ் மூலமே சுத்தம் செய்யப்பட்டது. இதனால், சுமார் 33.2 லட்சம் நீர் வீணாவது தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த சர்வீஸ் கேம்பை ஹூண்டாய் நிறுவனம், நாடு முழுவதும் உள்ள 800 சர்வீஸ் மையங்கள் மூலம் நடத்தியது. இவையனைத்திலும் டிரை வாஷ் திட்டமே செயல்படுத்தப்பட்டது. இதனை, காரை சர்வீஸ் விட்ட வாடிக்கையாளர்களுக்கு இலவச காம்பிளிமெண்டரி ஹூண்டாய் வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.

இந்த டிரை வாஷ் ஸ்பிரே ஃபோம் மிகவும் மலிவான விலையில் சந்தையில் கிடைக்கின்றன. இதனை, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பட்சத்தில் விலை மதிப்பற்ற நீர் பாதுகாப்படுவதுடன், எதிர்காலத்திற்கும் சேகரித்து வைக்க உதவும்.

Most Read Articles

English summary
Hyundai Uses Dry Wash System To Save Water. Read In Tamil.
Story first published: Friday, December 27, 2019, 8:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X