அம்மாடியோவ்... புக்கிங்குகளை வாரி சுருட்டிய ஹூண்டாய் வெனியூ!

ஹூண்டாய் வெனியூ காருக்கான புக்கிங் இமாலய எண்ணிக்கையை எட்டி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அம்மாடியோவ்... புக்கிங்குகளை வாரி சுருட்டிய ஹூண்டாய் வெனியூ!

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டை க்ரெட்டா கார் மூலமாக அதகளப்படுத்தியது ஹூண்டாய். இந்த நிலையில், க்ரெட்டாவைவிட விலை குறைவான ஓர் அசத்தலான புதிய எஸ்யூவி மாடலாக வெனியூ எஸ்யூவியை சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது.

அம்மாடியோவ்... புக்கிங்குகளை வாரி சுருட்டிய ஹூண்டாய் வெனியூ!

வடிவமைப்பு, வசதிகள், விலை என அனைத்தும் மிகச் சரியாக இருந்ததால், இந்திய வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர். அந்த வகையில், அறிமுகம் செய்யப்பட்டு 5 மாதங்களில் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருக்கு இதுவரை 75,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 45,000 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அம்மாடியோவ்... புக்கிங்குகளை வாரி சுருட்டிய ஹூண்டாய் வெனியூ!

ஹூண்டாய் வெனியூ காருக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பதற்கு மிகச் சரியான விலையில் அனைத்து விதத்திலும் நிறைவை தரும் மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. பேபி க்ரெட்டா என்று குறிப்பிடும் விதத்தில், வடிவமைப்பும், சில தனித்துவ அம்சங்களும் இந்த காரை வசீகரமாக காட்டுகிறது.

அம்மாடியோவ்... புக்கிங்குகளை வாரி சுருட்டிய ஹூண்டாய் வெனியூ!

உட்புறத்தில் போதுமான இடவசதி அளிக்கப்படுகிறது. இதில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இ-சிம் கார்டு மூலமாக நேரடி இணைய வசதி கொடுக்கப்படுகிறது. புளூ லிங்க் என்ற செயலி மூலமாக ஸ்மார்ட்ஃபோனுடன் இணைத்துக் கொள்ள முடியும்.

அம்மாடியோவ்... புக்கிங்குகளை வாரி சுருட்டிய ஹூண்டாய் வெனியூ!

காரின் பயணங்கள் குறித்த பதிவு தகவல்கள், காரின் எஞ்சின், ஏசியை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பு, குறிப்பிட்ட எல்லைக்குகள் பயன்படுத்தும் வகையில் கட்டுப்படுத்தும் ஜியோ ஃபென்சிங் வசதி என ஏராளமான வசதிகளை இந்த யுவோ செயலி மூலமாக பெற முடியும்.

அம்மாடியோவ்... புக்கிங்குகளை வாரி சுருட்டிய ஹூண்டாய் வெனியூ!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புரொஜெக்டர் பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், ரூஃப் ரெயில்கள், சுறா துடுப்பு வடிவ ஆன்டெனா, டைமணட் கட் அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. வயர்லெஸ் சார்ஜர், ஏர் பியூரிஃபயர், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அம்மாடியோவ்... புக்கிங்குகளை வாரி சுருட்டிய ஹூண்டாய் வெனியூ!

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், ஆட்டோ ஹெட்லைட்டுகள், கார்னரிங் விளக்குகள், ரியர் கேமரா, பவர் விண்டோ ஆட்டோ டவுன் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

அம்மாடியோவ்... புக்கிங்குகளை வாரி சுருட்டிய ஹூண்டாய் வெனியூ!

புதிய ஹூண்டாய் வெனியூ கார் இரண்டு பெட்ரோல், ஒரு டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 120 பிஎஸ் பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

அம்மாடியோவ்... புக்கிங்குகளை வாரி சுருட்டிய ஹூண்டாய் வெனியூ!

இந்த காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 83 பிஎஸ் பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. அதேபோன்று, 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அம்மாடியோவ்... புக்கிங்குகளை வாரி சுருட்டிய ஹூண்டாய் வெனியூ!

புதிய ஹூண்டாய் வெனியூ கார் ரூ.6.50 லட்சம் முதல் ரூ.11.10 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. மாருதி பிரெஸ்ஸாவுக்கு இந்த கார் கடும் போட்டியை கொடுத்துள்ளது. டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களுக்கும் போட்டியாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 12, 2019, 13:49 [IST]
English summary
Hyundai Venue was launched in India 5 months back in the Indian market. The Hyundai Venue is the brand's first compact-SUV in the market. The SUV received an overwhelming response in the Indian market since its launch.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+