யாருமே நினைத்து பார்க்காத மிக குறைவான விலை... புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு...

யாருமே நினைத்து பார்க்காத மிக மலிவான விலையில், அதிநவீன வசதிகளுடன் களமிறங்கியுள்ள புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு கிடைத்துள்ளது.

யாருமே நினைத்து பார்க்காத மிக குறைவான விலை... புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) கார், கடந்த மே 21ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும்.

யாருமே நினைத்து பார்க்காத மிக குறைவான விலை... புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு...

அத்துடன் ஹூண்டாய் வெனியூதான் இந்தியாவின் முதல் கனெக்டட் எஸ்யூவி (Connected SUV) என்பதும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், யாரும் எதிர்பார்க்காத மலிவான விலையில் வெனியூ காரை ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

யாருமே நினைத்து பார்க்காத மிக குறைவான விலை... புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு...

இதன் காரணமாக ஹூண்டாய் வெனியூ காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பினை வழங்கி வருகின்றனர். தற்போது வரை ஹூண்டாய் வெனியூ காருக்கு 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாருமே நினைத்து பார்க்காத மிக குறைவான விலை... புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு...

அத்துடன் ஹூண்டாய் வெனியூ காரை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் உள்ள 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அது தொடர்பாக ''என்கொய்ரி'' செய்துள்ளனர். இதனால் ஹூண்டாய் நிறுவனம் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது.

யாருமே நினைத்து பார்க்காத மிக குறைவான விலை... புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு...

ஹூண்டாய் டீலர்ஷிப்களில் குவியும் வாடிக்கையாளர்கள், புதிய டெக்னாலஜி மற்றும் வசதிகளை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, வெனியூ காரின் கேபினுக்குள் அதிகப்படியான நேரத்தை செலவிடுகின்றனர்.

யாருமே நினைத்து பார்க்காத மிக குறைவான விலை... புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு...

தனித்துவமான அறுங்கோண வடிவ முன்பக்க க்ரில் அமைப்பு, ட்யூயல் ஹெட்லேம்ப் செட் அப், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி டெயில் லைட்ஸ் உள்பட ஹூண்டாய் நிறுவனத்தின் லேட்டஸ்ட் டிசைன் மொழியை தாங்கி வந்துள்ளது வெனியூ.

யாருமே நினைத்து பார்க்காத மிக குறைவான விலை... புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு...

83 பிஎச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 99 பிஎச்பி பவர் மற்றும் 220 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை வெனியூ காரில் ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது.

யாருமே நினைத்து பார்க்காத மிக குறைவான விலை... புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு...

இதுதவிர டாப்-ஸ்பெக் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடியது.

யாருமே நினைத்து பார்க்காத மிக குறைவான விலை... புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு...

ஆக மொத்தம் வெனியூ காரில் 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களை ஹூண்டாய் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது. இதுதவிர ஹூண்டாய் கார்களுக்கே உரித்தான வகையில் பல்வேறு அதிநவீன வசதிகளும் வெனியூ காரில் வழங்கப்படுகின்றன.

யாருமே நினைத்து பார்க்காத மிக குறைவான விலை... புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு...

இதில், ஏர் ப்யூரிஃபையர், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், கீ லெஸ் எண்ட்ரி, க்ரூஸ் கண்ட்ரோல், டாப் எண்ட் வேரியண்ட்டில் 6 ஏர் பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, இஎஸ்பி, ஹில் ஹோல்டு மற்றும் ட்ராக்ஸன் கண்ட்ரோல் ஆகியவை குறிப்பிடத்தகுந்த வசதிகள் ஆகும்.

யாருமே நினைத்து பார்க்காத மிக குறைவான விலை... புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு...

இதுதவிர வயர்லெஸ் போன் சார்ஜிங், ரிமோட் கார் டிராக்கிங், பார்க்கிங் லாட்டில் காரை கண்டறியும் வசதிகளும் வெனியூ காரில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹூண்டாய் நிறுவனம் மூன்று ஆண்டுகள், அன்லிமிடெட் கிலோ மீட்டர்கள் வாரண்டியை வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.

யாருமே நினைத்து பார்க்காத மிக குறைவான விலை... புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு...

ஹூண்டாய் வெனியூ கார் ரூ.6.50 லட்சம் முதல் ரூ.11.11 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஹூண்டாய் வெனியூ காருக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 24, 2019, 20:17 [IST]
English summary
Hyundai Venue Bookings Cross The 17000 Mark — India Loves The Korean Bestseller. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+