ஹூண்டாய் வெனியூ காருக்கான முன்பதிவு துவங்கும் தேதி!
ஹூண்டாய் வெனியூ காருக்கு முன்பதிவு துவங்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.

டிசைன், தொழில்நுட்ப வசதிகள், விலை என அனைத்திலும் மிகச் சிறந்த எஸ்யூவி மாடலாக ஹூண்டாய் வெனியூ கார் வர இருக்கிறது. அடுத்த மாதம் 21ந் தேதி ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்தநிலையில், ஹூண்டாய் வெனியூ கார் வருகையை வாடிக்கையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், முன்பதிவு எகிடுதகிடாக இருக்க வாய்ப்பு இருப்பதால், முந்திக் கொள்வதற்கு தயாராக காத்திருக்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

இந்தநிலையில், புதிய ஹூண்டாய் வெனியூ காருக்கு வரும் மே 2ந் தேதி ஹூண்டாய் டீலர்களில் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. சான்ட்ரோ காரை போன்றே, ஆன்லைனிலும் முன்பதிவு ஏற்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், புதிய ஹூண்டாய் வெனியூ காருக்கு டீலர்களில் தற்போதே ரகசியமாக முன்பதிவு ஏற்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, எளிதாக முன்னுரிமையை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புதிய ஹூண்டாய் வெனியூ கார் டிசைனில் அசத்தலாக இருக்கிறது. அதேபோன்று, இந்த கார் மூன்றுவிதமான எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது.

இதில், 118 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் தேர்வு இருக்காது.

புதிய ஹூண்டாய் வெனியூ காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். புளூலிங்க் சாஃப்ட்வேர் மூலமாக பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும்.

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், சன்ரூஃப் உள்ளிட்ட இதர சிறப்பம்சங்களுடன் இந்த காரில் இடம்பெற இருக்கிறது. மேலும், சிறந்த பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் இடையிலான விலைப்பட்டியலில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியை தரும்.


Click it and Unblock the Notifications








