புதிய அதிநவீன ஹூண்டாய் காருக்கு இமாலய வரவேற்பு... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கி விடுவீர்கள்...

புதிய அதிநவீன ஹூண்டாய் வெனியூ காருக்கு இந்தியாவில் இமாலய வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் விலை தெரிந்தால் நீங்களும் அந்த காரை வாங்க கூடும்.

புதிய அதிநவீன ஹூண்டாய் காருக்கு இமாலய வரவேற்பு... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கி விடுவீர்கள்...

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. இதில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்கள் கிடைத்து வந்தன.

புதிய அதிநவீன ஹூண்டாய் காருக்கு இமாலய வரவேற்பு... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கி விடுவீர்கள்...

இந்த சூழலில் ஹூண்டாய் நிறுவனத்தின் வெனியூ (Hyundai Venue) கார் தற்போது இந்த செக்மெண்ட்டிற்கு புது வரவாக வந்து சேர்ந்துள்ளது. வெனியூ காரை ஹூண்டாய் நிறுவனம் கடந்த மார்ச் 21ம் தேதிதான் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

புதிய அதிநவீன ஹூண்டாய் காருக்கு இமாலய வரவேற்பு... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கி விடுவீர்கள்...

ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே வெனியூ காருக்கான முன்பதிவுகளை ஹூண்டாய் நிறுவனம் ஏற்க தொடங்கி விட்டது. எனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில், வெனியூ காருக்கு 15 ஆயிரம் முன்பதிவுகள் குவிந்திருந்தன.

புதிய அதிநவீன ஹூண்டாய் காருக்கு இமாலய வரவேற்பு... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கி விடுவீர்கள்...

தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அதற்குள்ளாக முன்பதிவு எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து சென்று விட்டது. ஹூண்டாய் வெனியூ காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் வழங்கியுள்ள அமோக ஆதரவினை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

புதிய அதிநவீன ஹூண்டாய் காருக்கு இமாலய வரவேற்பு... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கி விடுவீர்கள்...

ஹூண்டாய் வெனியூ காருக்கு முன்பதிவுகள் குவிந்து வர பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், மலிவான விலை, அதிநவீன வசதிகள், மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகியவற்றை முக்கிய காரணங்களாக குறிப்பிடலாம்.

புதிய அதிநவீன ஹூண்டாய் காருக்கு இமாலய வரவேற்பு... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கி விடுவீர்கள்...

இந்தியாவின் முதல் கனெக்டட் கார் (Connected Car) வெனியூதான். ஹூண்டாய் கார் என்பதை நிரூபிக்கும் வகையில், பல்வேறு வசதிகளை வெனியூ பெற்றுள்ளது. இதில், எலெக்ட்ரிக் சன் ரூஃப், ஏர் ப்யூரிஃபையர், வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

புதிய அதிநவீன ஹூண்டாய் காருக்கு இமாலய வரவேற்பு... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கி விடுவீர்கள்...

இதுதவிர ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்டு வசதியுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் கேபினில் ஆளுமை செலுத்துகிறது. அத்துடன் ரியர் ஏசி வெண்ட்களுடன் ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன.

புதிய அதிநவீன ஹூண்டாய் காருக்கு இமாலய வரவேற்பு... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கி விடுவீர்கள்...

ஹூண்டாய் வெனியூ காரில், ஆர்க்யம்ஸ் சவுண்ட் சிஸ்டம் (Arkamys Sound System) வழங்கப்படுகிறது. இந்திய மார்க்கெட்டில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் என்றால், அது வெனியூதான்.

புதிய அதிநவீன ஹூண்டாய் காருக்கு இமாலய வரவேற்பு... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கி விடுவீர்கள்...

எனவே வெனியூ மீது வாடிக்கையாளர்கள் மத்தியிலும், ஹூண்டாய் நிறுவனம் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போதைய நிலையில் அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் வெனியூ பூர்த்தி செய்து வருகிறது.

புதிய அதிநவீன ஹூண்டாய் காருக்கு இமாலய வரவேற்பு... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கி விடுவீர்கள்...

ஹூண்டாய் வெனியூ காரில், 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் (118 பிஎச்பி, 172 என்எம் டார்க்), 1.2 லிட்டர், நான்கு-சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேடட் பெட்ரோல் (82 பிஎச்பி, 114 என்எம் டார்க்) என 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய அதிநவீன ஹூண்டாய் காருக்கு இமாலய வரவேற்பு... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கி விடுவீர்கள்...

அதேபோல் 1.4 லிட்டர், நான்கு-சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆப்ஷனும் ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

புதிய அதிநவீன ஹூண்டாய் காருக்கு இமாலய வரவேற்பு... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கி விடுவீர்கள்...

ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப விலை வெறும் 6.50 லட்ச ரூபாய் மட்டுமே. டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை 11.11 லட்ச ரூபாய். இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். மலிவான விலையில் பல்வேறு வசதிகள் கிடைப்பதால்தான் ஹூண்டாய் வெனியூ காருக்கு முன்பதிவு குவிந்து வருகிறது.

புதிய அதிநவீன ஹூண்டாய் காருக்கு இமாலய வரவேற்பு... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கி விடுவீர்கள்...

ஹூண்டாய் நிறுவனம் ஒரு மாதத்திற்கு சராசரியாக 10 ஆயிரம் கிரெட்டா எஸ்யூவி கார்களை விற்பனை செய்து வருகிறது. இதே அளவிற்கான மாத விற்பனை இலக்கைதான் வெனியூ காருக்கும் ஹூண்டாய் நிர்ணயித்துள்ளது.

புதிய அதிநவீன ஹூண்டாய் காருக்கு இமாலய வரவேற்பு... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கி விடுவீர்கள்...

இதன்மூலம் இந்தியாவின் மிகப்பெரிய எஸ்யூவி உற்பத்தியாளர் என்ற மகுடத்தை அடைய ஹூண்டாய் முயன்று வருகிறது. இந்த இலக்கை ஹூண்டாய் நிறுவனம் அடையுமா? என்பதை சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 28, 2019, 16:54 [IST]
English summary
Hyundai Venue Compact SUV Bookings Cross 20,000 Units. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+