இந்தியாவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு... ஹூண்டாய் வெனியூ கார் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கசிந்தன

இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் வெனியூ கார் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தியாவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு... ஹூண்டாய் வெனியூ கார் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கசிந்தன

வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), இந்தியா மற்றும் நியூயார்க்கில் நேற்று இரவு (ஏப்ரல் 17) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-4 Meter Compact SUV) ரக காரான ஹூண்டாய் வெனியூ, இந்திய மார்க்கெட்டில் வரும் மே மாதம் 21ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு... ஹூண்டாய் வெனியூ கார் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கசிந்தன

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் தலா 8,000-9,000 வெனியூ கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எஸ்யூவி ரக காரான ஹூண்டாய் கிரெட்டாவை (Hyundai Creta) காட்டிலும் குறைவு. ஏனெனில் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் ஒரு மாதத்திற்கு சராசரியாக 10,000 ஆயிரம் கிரெட்டா கார்களை உற்பத்தி செய்து வருகிறது.

இந்தியாவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு... ஹூண்டாய் வெனியூ கார் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கசிந்தன

ஒருவேளை டிமாண்ட் அதிகரித்தால், ஹூண்டாய் வெனியூ காருக்கான காத்திருப்பு காலம் (Waiting Period) நீண்டு விடும் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள அனைத்து ஹூண்டாய் நிறுவன டீலர்ஷிப்களிலும், வெனியூ காருக்கான முன்பதிவு தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு... ஹூண்டாய் வெனியூ கார் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கசிந்தன

சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி என்பதால், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கீழாகதான் வெனியூ நிலை நிறுத்தப்படுகிறது. ஹூண்டாய் வெனியூ காரின் விலை 8 லட்ச ரூபாயில் இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வசதிகளும் நிரம்பிய பெட்ரோல் ஆட்டோமெட்டிக் மற்றும் டீசல் வெர்ஷன்களின் விலை 11 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம்.

இந்தியாவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு... ஹூண்டாய் வெனியூ கார் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கசிந்தன

தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி என்ற பெருமையை மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவே (Maruti Suzuki Brezza) தன் கைவசம் வைத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 13 ஆயிரம் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியாவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு... ஹூண்டாய் வெனியூ கார் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கசிந்தன

இரண்டாவது இடத்தில் டாடா நெக்ஸான் (Tata Nexon) உள்ளது. டாடா நெக்ஸான் காரின் சராசரி மாதாந்திர விற்பனை 5,000. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார்களின் எண்ணிக்கை சுமார் 4,400.

இந்தியாவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு... ஹூண்டாய் வெனியூ கார் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கசிந்தன

இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதிதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 லான்ச் செய்யப்படுவதற்கு முன்பு, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடிக்க, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் (Ford EcoSport) மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களுக்கு இடையேதான் கடும் போட்டி காணப்படும்.

இந்தியாவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு... ஹூண்டாய் வெனியூ கார் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கசிந்தன

இந்த சூழலில், ஹூண்டாய் வெனியூ வரும் மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் ஆன பின்பு, இந்த வரிசையில் மீண்டும் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், விற்பனை அடிப்படையில், ஹூண்டாய் வெனியூ இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு... ஹூண்டாய் வெனியூ கார் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கசிந்தன

அவ்வளவு ஏன்? ஹூண்டாய் நிறுவனம் விலை நிர்ணயத்தை மட்டும் சரியாக மேற்கொண்டால், மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவை வீழ்த்தி, வெனியூ முதலிடத்தை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் வசதிகள் என எடுத்து கொண்டால், மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவை காட்டிலும் ஹூண்டாய் வெனியூவே தலை சிறந்து விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு... ஹூண்டாய் வெனியூ கார் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கசிந்தன

எலெக்ட்ரிக் சன் ரூஃப், ப்ளூலிங்க் கனெக்டட் கார் வசதிகள், 7 ஸ்பீடு ட்வின் க்ளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் ஹெச்டி இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். ஒட்டுமொத்தில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் அதிக வசதிகள் நிரம்பிய காராக ஹூண்டாய் வெனியூ இருக்கலாம்.

இந்தியாவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு... ஹூண்டாய் வெனியூ கார் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கசிந்தன

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் இன்னும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படாமல் இருப்பது ஒரு குறையாக கருதப்படுகிறது. ஆனால் ஹூண்டாய் வெனியூ காரில் ஒன்றல்ல, இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. அதாவது 82 பிஎச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை வழங்கும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் மற்றும் 118 பிஎச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை வழங்கும் 1 லிட்டர்-3 சிலிண்டர் டர்போர்சார்ஜ்டு என 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஹூண்டாய் வெனியூ காரில் இடம்பெறவுள்ளன.

இந்தியாவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு... ஹூண்டாய் வெனியூ கார் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கசிந்தன

இதில் முதலாவது இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸையும், இரண்டாவது இன்ஜின் 7 ஸ்பீடு ட்வின் க்ளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸையும் பெறவுள்ளன. இதுதவிர 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆப்ஷனிலும் ஹூண்டாய் வெனியூ கிடைக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவர் மற்றும் 220 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

இந்தியாவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு... ஹூண்டாய் வெனியூ கார் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கசிந்தன

ஆனால் டீசல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமே வழங்கப்படவுள்ளது. ஆட்டோமெட்டிக் ஆப்ஷன் வழங்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த விஷயத்தில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவே பெட்டரான ஒன்று. ஏனெனில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவின் டீசல் இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

Source: CarToq

More from DriveSpark

Article Published On: Thursday, April 18, 2019, 17:57 [IST]
English summary
Hyundai Venue Compact SUV Launch And Production Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+