நம்ப முடியாத மிக குறைவான விலையில் அதிநவீன வசதிகள்... புதிய வரலாறு படைக்கிறது ஹூண்டாய் கார்...
மிகவும் குறைவான விலையில் களமிறங்கியுள்ள புத்தம் புதிய ஹூண்டாய் காருக்கு இந்தியாவில் இமாலய வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியிருந்த கார் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காரான ஹூண்டாய் வெனியூ, கடந்த மே மாதம் 21ம் தேதி இந்திய மார்க்கெட்டில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஹூண்டாய் வெனியூ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இன்றுடன் (ஜூன் 21) சரியாக ஒரு மாதம் ஆகிறது. அதற்குள்ளாக ஹூண்டாய் வெனியூ காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஹூண்டாய் வெனியூ காருக்கு தற்போது 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இதுதவிர 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஹூண்டாய் வெனியூ காரை ''என்கொயரி'' செய்துள்ளனர். இவர்களில் பலர் ஹூண்டாய் வெனியூ காரை வாங்க கூடும்.

இப்படிப்பட்ட ஒரு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால், ஹூண்டாய் நிறுவனம் உற்சாகத்தில் திளைத்து வருகிறது. ஹூண்டாய் வெனியூ கார் மார்க்கெட்டில் ''இன்ஸ்டன்ட் ஹிட்'' அடித்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

மலிவான விலை மற்றும் ஏராளமான வசதிகள் ஆகியவற்றை முக்கியமான காரணங்களாக கூறலாம். கே1 பிளாட்பார்மின் அட்வான்ஸ்டு வெர்ஷன் அடிப்படையில்தான் வெனியூ காரை ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

எல்இடி டிஆர்எல்கள் உடன் ஸ்பிளிட் ஹெட்லேம்ப் செட் அப் மற்றும் 17 இன்ச் மெஷின் கட் அலாய் வீல்கள் உள்ளிட்டவற்றை ஹூண்டாய் வெனியூ பெற்றுள்ளது. 7 மோனோ டோன் கலர் ஆப்ஷன்களிலும், மூன்று ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன்களிலும் ஹூண்டாய் வெனியூ கிடைக்கிறது.

ரூஃப் ரெயில்ஸ், எல்இடி டெயில் லேம்ப்ஸ், புதிய பின்பக்க பம்பர் சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியவற்றையும் வெனியூ பெற்றுள்ளது. அத்துடன் சன் ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம், ஏர் பியூரிஃபிகேஷன் உள்ளிட்ட வசதிகளும் வெனியூ காரில் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் வெனியூ காரில், 8.4 இன்ச் எச்டி டிஸ்ப்ளே ஸ்கீரின் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு என எடுத்து கொண்டால், 6 ஏர் பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, பார்க்கிங் சென்சார்களுடன் ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட வசதிகளை ஹூண்டாய் வெனியூ பெற்றுள்ளது.

ஹூண்டாய் வெனியூ காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

அதே சமயம் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் ஹூண்டாய் வெனியூ காரில் கிடைக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் (அ) 7 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன.

இதுதவிர 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் ஹூண்டாய் வெனியூ காரில் கிடைக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவர் மற்றும் 220 என்எம் டார்க் திறனை வழங்க வல்லது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் வெனியூ காரின் வெற்றிக்கு மற்றொரு முக்கியமான காரணம் அதன் மலிவான விலை. யாரும் எதிர்பார்க்காத மிக குறைவான விலையில் வெனியூ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து ஹூண்டாய் நிறுவனம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெனியூ காரின் ஆரம்ப விலை வெறும் 6.5 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) மட்டுமே. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக வெனியூ காரை குறிப்பிடலாம். வரும் நாட்களில் வெனியூ இன்னும் பல புதிய உச்சங்களை தொடுவதற்கான வாய்ப்புகள் மிக பிரகாசமாக உள்ளன.


Click it and Unblock the Notifications








