ஹூண்டாய் வெனியூ காரில் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் விரைவில் அறிமுகம்?

ஹூண்டாய் வெனியூ காரில் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹூண்டாய் வெனியூ காரில் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் விரைவில் அறிமுகம்?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் வெனியூ சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கடந்த மே 21ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. நடப்பாண்டில் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் செய்த மிகப்பெரிய லான்ச் ஆக வெனியூ கருதப்படுகிறது.

ஹூண்டாய் வெனியூ காரில் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் விரைவில் அறிமுகம்?

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் வெனியூ காரை ஹூண்டாய் நிறுவனம் களத்தில் இறக்கியுள்ளது.

ஹூண்டாய் வெனியூ காரில் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் விரைவில் அறிமுகம்?

வெனியூ காரின் ஆரம்ப விலையை வெறும் 6.50 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம்) நிர்ணயம் செய்து போட்டி நிறுவனங்களுக்கு செக் வைத்துள்ளது ஹூண்டாய். இதுதவிர பல்வேறு அதிநவீன வசதிகளும் ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் வெனியூ காரில் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் விரைவில் அறிமுகம்?

எனவே இந்திய வாடிக்கையாளர்கள் வெனியூ காருக்கு அமோக வரவேற்பை வழங்கியுள்ளனர். வெனியூ காருக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்திருப்பதாக ஓரிரு தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் வெனியூ காரில் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் விரைவில் அறிமுகம்?

வெனியூ காரின் டெலிவரியும் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதத்திற்குள் ஹூண்டாய் நிறுவனம் 15 ஆயிரம் வெனியூ கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் வெனியூ காரில் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் விரைவில் அறிமுகம்?

ஹூண்டாய் வெனியூ காரில் தற்போதைய நிலையில், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு ஜிடிஐ பெட்ரோல், 1.2 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், சிறிய 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான் அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது.

MOST READ: மாருதி சுஸுகி ஏஜிஎஸ்: அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் புரட்சிகரமான ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்

ஹூண்டாய் வெனியூ காரில் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் விரைவில் அறிமுகம்?

எனவே இந்த இன்ஜின் ஆப்ஷன்தான் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இன்ஜின் ஆப்ஷனுக்கான டிமாண்ட் சிறப்பாக உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

ஹூண்டாய் வெனியூ காரில் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் விரைவில் அறிமுகம்?

இந்த சூழலில், புதிய டர்போ பெட்ரோல் இன்ஜினில், ஹூண்டாய் நிறுவனம் விரைவில் மைல்டு ஹைப்ரிட் டெக்னாலஜியை அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஓவர்டிரைவ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹூண்டாய் வெனியூ காரில் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் விரைவில் அறிமுகம்?

சியாஸ் மற்றும் எர்டிகா கார்களில் இருந்து புதிய 1.5 லிட்டர் எஸ்எச்விஎஸ் பெட்ரோல் இன்ஜினை விட்டாரா பிரெஸ்ஸா காரில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த திட்டம் பயன் அளிப்பதாகவே இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 30, 2019, 21:18 [IST]
English summary
Hyundai Venue Compact SUV To Get Mild Hybrid Technology In New Turbo Petrol Engine. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+