ஸ்மார்ட் போனுக்கு கட்டுப்படும் இந்தியாவின் மலிவு விலை கார்... சிறப்பு வீடியோ...!

ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள இந்தியாவின் மலிவு விலை காராக பார்க்கப்பட்டு வரும் வெனியூ மாடல், ஸ்மார்ட் போனின் கட்டளைக்கு கீழ்படிவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு தகவலையும் இந்த பதிவில் காணலாம்.

ஸ்மார்ட் போனுக்கு கட்டுப்படும் இந்தியாவின் மலிவு விலை கார்... சிறப்பு வீடியோ...!

தென்கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், யாரும் எதிர்பாரத மலிவு விலையில் அதன் எஸ்யூவி ரக வெனியூ காரை இந்தியாவில் கடந்த மே மாதம் 22ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. இந்த கார் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களைப் பெற்றிருந்ததால், இதன் மீதான எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் ஹை பீக்கில் இருந்தது.

ஸ்மார்ட் போனுக்கு கட்டுப்படும் இந்தியாவின் மலிவு விலை கார்... சிறப்பு வீடியோ...!

இந்தநிலையில் மிகவும் மலிவான விலையில் இந்த புதிய எஸ்யூவி ரக காலை களமிறக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஹூண்டாயின் இந்த நடவடிக்கையால், பல்வேறு வாகன முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூட அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. அதேசமயம், ஹூண்டாய் இந்த வெனியூ காருக்கு, எதிர்பாராத அளவில் புக்கிங் குவிந்து வருகின்றது.

ஸ்மார்ட் போனுக்கு கட்டுப்படும் இந்தியாவின் மலிவு விலை கார்... சிறப்பு வீடியோ...!

இந்நிலையில், ஹூண்டாய் வெனியூ கார், ஸ்மார்ட்போனின் கட்டளைக்கு கட்டுபடும் விதத்திலான வீடியோ ஒன்றை வைரலாகி வருகின்றது. ஏற்கனவே காருக்கான வரவேற்பு அதிகரித்து வரும்நிலையில், மேலும் அதன்மீதான ஆவலைத்தூண்டும் வகையில் இந்த வீடியோக் காட்சிகள் அமைந்துள்ளன. இதுகுறித்த வீடியோவை ஆர்வி ஆர் என்ற யுடியூப் இணையதளம் வெளியிட்டுள்ளது.

ஸ்மார்ட் போனுக்கு கட்டுப்படும் இந்தியாவின் மலிவு விலை கார்... சிறப்பு வீடியோ...!

வீடியோவில், ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள அனைத்து கட்டளைகளுக்கும், ஹூண்டாய் வெனியூ கார் கட்டுபடும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. அவ்வாறு, வெனியூ கார் கட்டுப்படவதற்கு அந்த காருக்கு வழங்கப்பட்டிருக்கும், 'ப்ளூ லிங்க்' தொழில்நுட்ப வசதியே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இதற்காக, பிரத்யேகமாக ப்ளூ லிங்க் எனும் ஸ்மார்ட்போன் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு காரின் அம்சங்களை, மிகவும் எளிதாக கன்ட்ரோல் செய்ய முடியும். அதேசமயம், இந்த ஆப்பினைக் கொண்டு உலகின் எந்த மூலையில் இருந்தும் வெனியூ கனெக்டட் காரை கன்ட்ரோல் செய்ய முடியும். இந்த சிறப்பம்சத்தை விவரிக்கும் விதமாக இந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போனுக்கு கட்டுப்படும் இந்தியாவின் மலிவு விலை கார்... சிறப்பு வீடியோ...!

இந்த ஆப் முழுக்க முழுக்க இணையதள சேவையின் மூலமாகவே இயங்குகின்றது. இதற்கான பிரத்யேக இ-சிம் கார்டுகளை வோடஃபோன் மற்றும் ஐடியா நெட்வொர்க்கிடம் இருந்து பெறப்படுகின்றது.

ஸ்மார்ட் போனுக்கு கட்டுப்படும் இந்தியாவின் மலிவு விலை கார்... சிறப்பு வீடியோ...!

ஹூண்டாய் வெனியூ காரின் உரிமையாளர், மொபைல் போன் மூலம் காரை கன்ட்ரோல் செய்வதற்கு முன்னதாக பின் நம்பரை போட்டு ஆப்பினை ஆக்டிவேட் செய்கிறார். பின்னர், ஸ்மார்ட்போன் திரையில் காருக்கான கட்டளையை அனுப்புதவதற்கான ஆப்ஷன்கள் தோன்றுகின்றன. அவ்வாறு, ஸ்மார்ட்போன் ஆப் மூலம் காரை ஸ்டார்ட் செய்ய 12 விநாடிகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

ஸ்மார்ட் போனுக்கு கட்டுப்படும் இந்தியாவின் மலிவு விலை கார்... சிறப்பு வீடியோ...!

இதுமட்டுமின்றி, காரன் டெம்ப்ரேட்சரைக் கட்டுபடுத்தவும் இந்த செயலி மூலம் முடியும். இதுகுறித்த காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு, ப்ளூ லிங்க் பயன்பாட்டின் மூலம் செய்யக்கூடிய விஷயங்கள் மிகுதியாக உள்ளன. ஆனால், இந்த காரை தொடர்ச்சியாக ஏழு அல்லது ஒரு வாரங்களுக்கும் மேலாக இயக்காமல் இருந்தால், இவ்வாறு ரிமோட் மூலம் எந்தவொரு கட்டளையையும் மேற்கொள்ள முடியாது.

ஸ்மார்ட் போனுக்கு கட்டுப்படும் இந்தியாவின் மலிவு விலை கார்... சிறப்பு வீடியோ...!

இதற்கு, பேட்டரி சார்ஜ் அடையாமல் இருப்பதே காரணமாக இருக்கின்றது. காரில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கிக்கொண்டே இருப்பதால், பேட்டரியின் பவர் இயக்கத்திலேயே இருந்துக் கொண்டிருக்கிறது. இதன்காரணமாக, ஏழு நாட்கள் கார் பயன்பாட்டில் இல்லாததால், பவர் தீர்ந்துபோய்விடுகிறது. இதனால், ரிமோட் மூலம் இயக்கும் சேவை துண்டிக்கப்படுகிறது.

ஆகையால், காரை எப்போதும் பயன்பாட்டிலேயே வைத்துக்கொண்டிருக்க வேண்டும் கட்டாயமாக இருக்கின்றது.

ஸ்மார்ட் போனுக்கு கட்டுப்படும் இந்தியாவின் மலிவு விலை கார்... சிறப்பு வீடியோ...!

இது எவ்வாறு இயங்குகின்றது...?

காரில் பொருத்தப்படும் இணையதள சேவையுடன் கூடிய இ-சிம்கள், வெனியூ காரை எப்போதும், இன்டர்நெட்டில் கனெக்ட் செய்தவாறே வைத்திருக்கும். இதுவே காரை ஸ்மார்ட்போன் மூலம் உலகின் எந்தவொரு மூலையில் இருந்து செயல்படுத்தும் திறனை வழங்குகின்றது. ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த சேவையானது, முதல் 3 வருடங்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. அதன் பின்னர் குறிப்பிட்ட அளவில் பணத்தைச் செலுத்தினாலே இந்த சேவை தொடர முடியும் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட் போனுக்கு கட்டுப்படும் இந்தியாவின் மலிவு விலை கார்... சிறப்பு வீடியோ...!

இதுமட்டுமின்றி, இந்த ஆப் மூலம் கூடுதல் சேவை வழங்கப்படுகின்றது. அவ்வாறு, ஜியோ-ஃபென்ஸ், டூர் லாக் / அன் லாக், க்ளைமேட் கன்ட்ரோல், பார்க்கிங் இன்டிகேட்டர் மற்றும் பார்க்கிங்கில் இடத்தை சமிக்ஞை மூலம் காட்டிகொடுப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஸ்மார்ட் போனுக்கு கட்டுப்படும் இந்தியாவின் மலிவு விலை கார்... சிறப்பு வீடியோ...!

இத்துடன், இந்த காரில் நவீன வசதியாக ஒயர்லெஸ் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் வசதி, கீ லெஸ் என்ட்ரீ உள்ளிட்ட வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக ட்ராக்ஷன் கன்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, எமர்ஜென்சி அசிஸ்டண்ட்ஸ், ஹில் ஹோல்டு உள்ளிட்ட அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் போனுக்கு கட்டுப்படும் இந்தியாவின் மலிவு விலை கார்... சிறப்பு வீடியோ...!

பிரத்யேகமான முன் பக்க க்ரில், பம்பர், ஹெட்லைட் உள்ளிட்ட தனித்துவமான ஸ்டைலில் ஹூண்டாய் வெனியூ கார் களமிறங்கியுள்ளது. அதேசமயம், இந்த காரில் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வில் கிடைக்கின்றது.

அவ்வாறு, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும் வேரியண்ட் 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. அதேபோன்று, 1.4 லிட்டர் டீசல் எஞ்ஜினைப் பெற்றுள்ள வேரியண்ட் 99 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளது.

ஸ்மார்ட் போனுக்கு கட்டுப்படும் இந்தியாவின் மலிவு விலை கார்... சிறப்பு வீடியோ...!

அதேபோன்று, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் 120 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. இந்த கார் ரூ. 6.50 லட்சம் என்ற ஆரம்ப விலையிலிருந்து, ரூ. 11.11 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது.

Most Read Articles
English summary
Hyundai Venue Controlled By A Smartphone. Read In Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X