ஹூண்டாய் வெனியூ காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது

அறிமுகம் செய்யப்பட்டு ஆறு மாதங்கள் ஆன நிலையிலும், ஹூண்டாய் வெனியூ காருக்கான முன்பதிவு தொடர்ந்து கணிசமாக இருந்து வருகிறது. தற்போது முன்பதிவு எண்ணிக்கையும் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் வெனியூ காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது

கடந்த மே மாதம் ஹூண்டாய் வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. க்ரெட்டா எஸ்யூவியின் மினி மாடலாகவும், அதிக சிறப்பம்சங்களுடன் வந்தது. ரூ.6.50 லட்சம் என்ற மிக சவாலான விலையில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் வாடிக்கையாளர் மத்தியில் பேராதரவை பெற்றிருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது

இந்த நிலையில், ஹூண்டாய் வெனியூ காருக்கான முன்பதிவு 80,000 என்ற புதிய மைல்கல்லை தொட்டு அசத்தி இருக்கிறது. மேலும், இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாகவும் இடம்பிடித்துள்ளது.

ஹூண்டாய் வெனியூ காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது

ஹூண்டாய் வெனியூ கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 3,995 மிமீ நீளமும், 1,770 மிமீ அகலமும், 1,590 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த காரில் 350 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. 5 பேர் பயணிப்பதற்கான சிறப்பான இடவசதியை அளிக்கிறது.

ஹூண்டாய் வெனியூ காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது

இந்த காரில் 81 எச்பி பவரையும் 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் இருக்கிறது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 120 எச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் வெனியூ காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது

மூன்றாவதாக 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 90 எச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

Most Read: டாடா டிகோர் இவி காரின் டெலிவரி துவங்கியது.. முதல் கார் எந்த நகரத்தில் டெலிவரி செய்யப்பட்டது தெரியுமா

ஹூண்டாய் வெனியூ காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது

எல்இடி பகல்நேர விளக்குகள், புரொஜெக்டர் பனி விளக்குகள், ஏர் பியூரிஃபயர், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், லெதர் இருக்கைகள், 6 ஏர்பேக்குகள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

Most Read: பள்ளி மைதானத்தில் அபாயகரமான ஸ்டண்ட்... கார், பஸ் டிரைவர் சிக்கினர்... என்ன நடந்தது தெரியுமா?

ஹூண்டாய் வெனியூ காருக்கு புக்கிங் தொடர்ந்து குவிகிறது

ஹூண்டாய் வெனியூ கார் மொத்தம் 11 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வெர்ஷனின் விலை 6.5 லட்ச ரூபாய் மட்டுமே. வெனியூ காரின் மிகவும் விலை உயர்ந்த வேரியண்ட்டின் விலை 11.10 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Most Read Articles

English summary
Hyundai has recieved over 80,000 bookings for its Venue compact SUV since its launch.
Story first published: Saturday, November 30, 2019, 10:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X