ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் மற்றும் அறிமுக தேதி விபரம்!

புதிய ஹூண்டாய் QXi எஸ்யூவியானது ஏப்ரல் 17ந் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் பொதுபார்வைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவில் பொதுபார்வைக்கு வரும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இப்போது காணலாம்.

ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் மற்றும் அறிமுக தேதி விபரம்!

க்ரெட்டா மூலமாக எஸ்யூவி மார்க்கெட்டில் வலுவான போட்டியாளராக விளங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ், அடுத்து க்ரெட்டாவைவிட விலை குறைவான புதிய எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. 2016ம் ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த கர்லினோ என்ற கான்செப்ட் மாடல் அடிப்படையில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் மற்றும் அறிமுக தேதி விபரம்!

இந்த நிலையில், தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு தற்போது தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுவரை QXi என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த எஸ்யூவிக்கு வெனியூ என்ற பெயரிட்டுள்ளது ஹூண்டாய்.

ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் மற்றும் அறிமுக தேதி விபரம்!

இந்த புதிய எஸ்யூவியானது வரும் ஏப்ரல் 17ந் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே தேதியில் இந்தியாவிலும் இந்த புதிய எஸ்யூவி பொதுபார்வைக்கு வெளியிடப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் மற்றும் அறிமுக தேதி விபரம்!

மினி க்ரெட்டா எஸ்யூவியாக ஆட்டோமொபைல் துறையினரால் செல்லமாக குறிப்பிடப்படும் இந்த புதிய எஸ்யூவியில் ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் ஆக்சஸெரீகள் இடம்பெற்றுள்ளன. எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவை வெளிப்புறத்திற்கு கவர்ச்சி சேர்க்கும் அம்சங்களாக உள்ளன.

ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் மற்றும் அறிமுக தேதி விபரம்!

இந்த ரகத்தில் முதல்முறையாக வென்டிலேட்டட் இருக்கைகளுடன் வர இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உட்புறத்தில் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் மற்றும் அறிமுக தேதி விபரம்!

புதிய வெனியூ எஸ்யூவியின் பரிமாணம் மற்றும் விலை நிர்ணயத்திற்கு ஏற்ற பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் ஹூண்டாய் வசம் உள்ளது. எனவே, இந்த புதிய எஸ்யூவியானது மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்த எஸ்யூவியில் 100 எச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் எஞ்சின், 90 எச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். 1.4 லிட்டர் பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களானது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் மற்றும் அறிமுக தேதி விபரம்!

ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரலில் பொதுபார்வைக்கு கொண்டு வரப்படும் இந்த புதிய எஸ்யூவியின் விலை விபரம் மே மாதத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இது நிச்சயம் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று நம்பப்படுகிறது.

Most Read Articles
English summary
South Korean carmaker Hyundai is all set to reveal its new Venue compact SUV at the 2019 New York Auto Show on the 17th of April. Now a report by Autocar India is claiming that the new Hyundai Venue could make its debut in India at the same time it takes its bow in the Big Apple, nearly a month ahead of its launch in May. The publication is claiming that the global and Indian unveil of the Maruti Brezza rivalling QXi compact SUV will happen simultaneously.
Story first published: Wednesday, March 27, 2019, 11:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X