அட்டகாசமான அம்சங்களுடன் ஹூண்டாய் வெனியூ என் மாடல்!

கூடுதல் ஆக்சஸெரீகளுடன் கவர்ச்சி மிகுந்த ஹூண்டாய் வெனியூ காரின் என் மாடலும் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அட்டகாசமான அம்சங்களுடன் ஹூண்டாய் வெனியூ என் மாடல்!

வரும் மே 21ந் தேதி புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் இந்த புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

அட்டகாசமான அம்சங்களுடன் ஹூண்டாய் வெனியூ என் மாடல்!

இந்த நிலையில், ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் டிசைன் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் வாடிக்கையாளர்களின் ஆவலை வெகுவாக அதிகரித்துள்ளது. அசத்தலான டிசைன், நேரடி இணைய வசதி, சிறந்த எஞ்சின் தேர்வுகள் மற்றும் கைக்கு தோதான பட்ஜெட்டில் வர இருப்பதால் வாடிக்கையாளர்கள் இந்த எஸ்யூவியை முன்பதிவு செய்வதற்கு தயராக உள்ளனர்.

அட்டகாசமான அம்சங்களுடன் ஹூண்டாய் வெனியூ என் மாடல்!

இந்த சூழலில், கூடுதல் ஆக்சஸெரீகளுடன் கவர்ச்சி மிகுந்த ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் என் மாடலும் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஹூண்டாய் கார்களின் பெர்ஃபார்மென்ஸ் மாடல்கள் N என்ற பிராண்டு பெயரில் வெளியிடப்பட்டு வருகின்றன.

அட்டகாசமான அம்சங்களுடன் ஹூண்டாய் வெனியூ என் மாடல்!

அதேவரிசையில், ஹூண்டாய் வெனியூ என் மாடலானது அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோமொபைல் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. எனினும், ஹூண்டாய் நிறுவனத்தின் பிற என் பிராண்டு கார்களை போல, வெனியூ காரின் எஞ்சின் கூடுதல் செயல்திறன்மிக்கதாக இருக்காது. சாதாரண மாடலில் இடம்பெறும் எஞ்சின்கள்தான் பயன்படுத்தபடும்.

அட்டகாசமான அம்சங்களுடன் ஹூண்டாய் வெனியூ என் மாடல்!

ஆனால், துள்ளலான தோற்றத்தை தரும் பம்பர் அமைப்பு, க்ரில் அமைப்பு, இன்டீரியர் வேலைப்பாடுகள் மற்றும் என் பேட்ஜ் ஆகியவற்றுடன் வாடிக்கையாளர்களை வசீகரிக்கும். சாதாரண மாடலில் இடம்பெறும் எஞ்சின்களே எந்தவித மாற்றமும் இன்றி பயன்படுத்தப்பட இருக்கிறதாம்.

அட்டகாசமான அம்சங்களுடன் ஹூண்டாய் வெனியூ என் மாடல்!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் என் மாடல் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இந்தியாவில் உடனடியாக வருவதற்கான வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். ஏனெனில், இதுபோன்ற மாடல்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருப்பதில்லை.

அட்டகாசமான அம்சங்களுடன் ஹூண்டாய் வெனியூ என் மாடல்!

இந்தியாவை பொறுத்தவரையில் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகின்ற. டீசல் மாடலிலல் 1.4 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வர இருக்கிறது.

அட்டகாசமான அம்சங்களுடன் ஹூண்டாய் வெனியூ என் மாடல்!

வரும் மே 2ந் தேதி ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆன்லைனிலும் முன்பதிவு துவங்கப்பட இருக்கிறது. சில ஹூண்டாய் டீலர்களில் ரூ.50,000 முன்பணத்துடன் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முன்பதிவு ரகசியமாக ஏற்கப்பட்டு வருகிறது.

அட்டகாசமான அம்சங்களுடன் ஹூண்டாய் வெனியூ என் மாடல்!

இந்த நிலையில், ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு அதிக டிமாண்ட் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: Drive

More from DriveSpark

Article Published On: Saturday, April 27, 2019, 13:05 [IST]
English summary
Hyundai is likely to introduce a sporty version of the Venue in international markets. The Hyundai Venue N Line will be the SUV's top-spec variant in international markets such as the US and Australia. The Sporty version of the Hyundai Venue will come with a number of sporty cosmetic changes compared to the standard model, both to its interior and exterior. The Hyundai Venue will however carry forward the same powertrain as the standard variant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+