அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

அதிநவீன ஹூண்டாய் வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்து, இந்திய வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். வெனியூ கார் விற்பனைக்கு அறிமுகமாக இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

வரும் மே 21ம் தேதி ஹூண்டாய் வெனியூ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் ஹூண்டாய் வெனியூ போட்டியிடவுள்ளது.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

1.2 லிட்டர் பெட்ரோல், 1 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என ஹூண்டாய் வெனியூ காரில் 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளது. இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 83 எச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

ஹூண்டாய் வெனியூ காரின் லோயர் வேரியண்ட்களில் இந்த இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும். அதே சமயம் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 120 எச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் உருவாக்க வல்லது.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

இதில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் ஆட்டோபாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. அதே நேரத்தில் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 90 எச்பி பவர் மற்றும் 220 என்எம் டார்க் திறனை வழங்க கூடியது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கும்.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

பொதுவாக ஹூண்டாய் நிறுவன கார்கள் பல்வேறு வசதிகள் நிரம்பியவையாகதான் இருக்கும். ஹூண்டாய் நிறுவனம் இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித குறையும் வைக்காது. ஹூண்டாய் வெனியூ காரும் அப்படித்தான்.

MOST READ: சாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ...

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

பாதுகாப்பு வசதிகள் என எடுத்து கொண்டால், ஹூண்டாய் வெனியூ காரின் டாப் எண்ட் வேரியண்ட்களில், 6 ஏர் பேக்குகள், இபிடி உடனான ஏபிஎஸ், டிராக்ஸன் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், க்ரூஸ் கண்ட்ரோல் என பல்வேறு வசதிகள் வழங்கப்படவுள்ளன.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

இதுதவிர ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகிய வசதிகளும் இடம் பெற்றிருக்கும். அத்துடன் வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமெட்டிக் ஹெட்லேம்ப்ஸ், ஸ்மார்ட் கீ, புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட வசதிகளையும் ஹூண்டாய் நிறுவனம் வழங்கவுள்ளது.

MOST READ: மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

இவற்றுடன் மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள், ஏர் ப்யூரிஃபையர், கூல்டு க்ளவ் பாக்ஸ், எலெக்ட்ரிக் சன் ரூஃப், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே சப்போர்ட் வசதிகளுடன் கூடிய டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் யூனிட் என வெனியூ காரில் எக்கச்சக்கமான வசதிகள் வழங்கப்படவுள்ளன.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

ஹூண்டாய் வெனியூ கார் வரும் மே 21ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நிலையில், கடந்த மே 2ம் தேதியே முன்பதிவு தொடங்கி விட்டது. தற்போது வெனியூ காருக்கு புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

MOST READ: மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10 ஆயிரம் வெனியூ கார்களை விற்பனை செய்ய வேண்டும் என ஹூண்டாய் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் இந்த செக்மெண்ட்டில் கடந்த மாதம் விற்பனையான ஒட்டுமொத்த கார்களின் எண்ணிக்கையே 26 ஆயிரம்தான்.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

எனவே விற்பனை இலக்கை எட்டுவதற்காக வெனியூ காரை மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இது போட்டியாளர்களை அதிர்ச்சியிலும், வாடிக்கையாளர்களை ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் என கூறப்படுகிறது.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

முன்னதாக சாண்ட்ரோ கார் மூலமாக ஹூண்டாய் நிறுவனம் பாடம் கற்று கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சாண்ட்ரோ காரை ஹூண்டாய் நிறுவனம் அதிகப்படியான விலையில் அறிமுகம் செய்தது. இதனால் எதிர்பார்த்ததை காட்டிலும் சாண்ட்ரோ காரின் விற்பனை குறைவாகதான் உள்ளது.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

தற்போது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சாண்ட்ரோ காரின் மலிவான விலை வேரியண்ட்டை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. சாண்ட்ரோ விஷயத்தில் செய்த தவறை வெனியூ காரில் ஹூண்டாய் மீண்டும் செய்யாது என எதிர்பார்க்கலாம்.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

முதல் நாள் முதலே வெனியூ காரை மிகவும் சவாலான விலையில் விற்பனை செய்ய ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. இருந்தபோதும் மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய கார்களை விட வெனியூ காரின் விலை அதிகமாக இருக்கும் என்றுதான் தற்போது வரை பலரும் நினைத்து கொண்டுள்ளனர்.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் ரூ.7.90 லட்சம் முதல் ரூ.12.14 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் ரூ.7.83 லட்சம் முதல் ரூ.11.89 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த சூழலில், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையிலான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஹூண்டாய் வெனியூ காரின் விலை இதுவாக இருக்கலாம் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

இதன்படி பார்த்தால் ரூ.6.5 லட்சம் முதல் ரூ.10.5 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில்தான் ஹூண்டாய் வெனியூ கார் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. பெங்களூரை சேர்ந்த ஹூண்டாய் டீலர் ஒருவர் மூலமாக இந்த விலை விபரம் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

ஆனால் இந்த விலை விபரத்தை ஹூண்டாய் நிறுவனம் தற்போது வரை உறுதி செய்யவில்லை. வரும் மே 21ம் தேதி வெனியூ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் அதிகாரப்பூர்வ விலையை ஹூண்டாய் நிறுவனம் அறிவிக்கவுள்ளது.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

ஆனால் தற்போது வெளியே கசிந்துள்ள விலை மட்டும் உண்மையாக இருந்தால், போட்டியாளர்கள் மத்தியில் அது அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. அத்துடன் விலை நிர்ணயம் இவ்வாறு இருந்தால், ஹூண்டாய் நிறுவனமும் வெனியூ விற்பனை இலக்கை எளிதாக எட்டலாம்.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

அத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய எஸ்யூவி விற்பனையாளர் என்ற இடத்தை ஹூண்டாய் அடைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஏனெனில் ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு சராசரியாக 10 ஆயிரம் கிரெட்டா எஸ்யூவி கார்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி

மேற்குறிப்பிட்ட விலைகள் ஹூண்டாய் நிறுவனத்தால் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பெங்களூரில் உள்ள ஒரு ஹூண்டாய் டீலரிடம் இருந்து இதனை பெற்றதாக அன்ஸ் நாங்கியா என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

Source: Hyundai Venue FB Group

Most Read Articles

Tamil
English summary
Hyundai Venue Price Details Leaked. Read in Tamil
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more