ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹூண்டாய் காரின் உற்பத்தி தமிழகத்தில் தொடங்கியது...

ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஹூண்டாய் வெனியூ காரின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹூண்டாய் காரின் உற்பத்தி தமிழகத்தில் தொடங்கியது...

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) காம்பேக்ட் எஸ்யூவி, இந்திய மார்க்கெட்டில் வரும் மே 21ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. அதே நாளில் டெலிவரியும் தொடங்கப்படவுள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹூண்டாய் காரின் உற்பத்தி தமிழகத்தில் தொடங்கியது...

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருக்கான புக்கிங் ஏற்கனவே தொடங்கி விட்டது. புக்கிங் தொடங்கிய முதல் நாளிலேயே ஹூண்டாய் வெனியூ காருக்கு 2,000 ஆர்டர்கள் குவிந்தன. வெறும் 24 மணி நேரத்தில் 2,000 முன்பதிவுகள் குவிந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹூண்டாய் காரின் உற்பத்தி தமிழகத்தில் தொடங்கியது...

அதாவது ஒவ்வொரு மணி நேரமும் 83 முன்பதிவுகள் வந்துள்ளன. இது ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காரின் போட்டியாளர்களுக்கு கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. முன்பதிவு குவிந்து வருவதால், வெனியூ ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என ஹூண்டாய் நிறுவனம் உறுதியாக நம்புகிறது.

ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹூண்டாய் காரின் உற்பத்தி தமிழகத்தில் தொடங்கியது...

ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றொரு எஸ்யூவி காரான கிரெட்டா, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10,000 யூனிட்கள் என்ற விற்பனை இலக்கை எட்டி வருகிறது. இந்த சூழலில், வெனியூ காரின் விற்பனை இலக்கையும் ஒரு மாதத்திற்கு 10,000 ஆயிரம் யூனிட்கள் என்றே ஹூண்டாய் நிர்ணயித்துள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹூண்டாய் காரின் உற்பத்தி தமிழகத்தில் தொடங்கியது...

இது சரியாக நடைபெற்று விட்டால், ஹூண்டாய் நிறுவனம் ஒரு மாதத்திற்கு சராசரியாக 20 ஆயிரம் எஸ்யூவி கார்களை (10 ஆயிரம் கிரெட்டா + 10 ஆயிரம் வெனியூ) இந்தியாவில் விற்பனை செய்யும். இதன்மூலம் இந்தியாவின் மிகப்பெரிய எஸ்யூவி விற்பனையாளர் என்ற இடத்தை ஹூண்டாய் அடையலாம்.

ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹூண்டாய் காரின் உற்பத்தி தமிழகத்தில் தொடங்கியது...

தற்போதைய நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய எஸ்யூவி விற்பனையாளர் என்ற மகுடம் மாருதி சுஸுகி நிறுவனத்திடம் உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து இந்த பட்டத்தை ஹூண்டாய் தட்டி பறிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹூண்டாய் காரின் உற்பத்தி தமிழகத்தில் தொடங்கியது...

இந்த சூழலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் வெனியூ காரின் உற்பத்தி இன்று (மே 6) தொடங்கியது. சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான் வெனியூ கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹூண்டாய் காரின் உற்பத்தி தமிழகத்தில் தொடங்கியது...

அதே நேரத்தில் டீலர்களுக்கு கார்களை அனுப்பும் பணிகளும் தொடங்கி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. உலகிலேயே வெனியூ காரின் உற்பத்தி தொடங்கப்பட்ட முதல் நாடு இந்தியாதான். இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள முதல் நாடும் கூட இந்தியாதான்.

ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹூண்டாய் காரின் உற்பத்தி தமிழகத்தில் தொடங்கியது...

இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்க மார்க்கெட் வெனியூ கார்களை பெறவுள்ளது. அனேகமாக நடப்பு ஆண்டு இறுதிக்குள் வெனியூ காரை ஹூண்டாய் நிறுவனம் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹூண்டாய் காரின் உற்பத்தி தமிழகத்தில் தொடங்கியது...

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காரில், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படவுள்ளது. இது ஹூண்டாய் கிரெட்டாவில் இருப்பது காட்டிலும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹூண்டாய் காரின் உற்பத்தி தமிழகத்தில் தொடங்கியது...

இதுதவிர 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரிக் சன் ரூஃப், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், டிராக்ஸன் கண்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகளும் ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்படவுள்ளன. அத்துடன் வெனியூ காரில் ஹூண்டாய் நிறுவனம் 3 இன்ஜின் ஆப்ஷன்களை வழங்கவுள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹூண்டாய் காரின் உற்பத்தி தமிழகத்தில் தொடங்கியது...

இதில், 1.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். அதே சமயம் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 112 பிஎச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை வழங்கும்.

ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹூண்டாய் காரின் உற்பத்தி தமிழகத்தில் தொடங்கியது...

இதுதவிர 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜினும் ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவர் மற்றும் 220 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களுடன் ஹூண்டாய் வெனியூ போட்டியிடவுள்ளது. 8-13 லட்ச ரூபாய் விலையில் வெனியூ எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, May 6, 2019, 21:08 [IST]
English summary
Hyundai Venue Production Begins In Chennai Plant. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+